Friday, December 30, 2011

விதைக்குள் ஓர் இசை

ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
பிறப்பிற்கானதோர் இசை
மழையின் தாலாட்டில்
கண்ணுறங்கும் அது
ஒரு இடியோசையில்
வெடித்து பொழியத் துவங்குகிறது .
பின் பிரபஞ்சத்தின் பாடலாய்
விண் மண் வியாபிக்கிறது
வ்யாபிகின்ற அக்கானகத்தின்
ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
இறப்பிற்கான
ஓர் இசையும் கூட .


(கல்கியில் வெளியான கவிதை)

29 comments:

காமராஜ் said...

உயிரையே இசையாக்கி, மழையைத் தாலாட்டச்சொல்லுகிற பக்குவம் கவிதைக் கைகளுக்குத்தான் வரும்.
தன்னில் விழ வருகிற சருகைத்தூசியென ஒதுக்கும் மனிதரில் இருந்து விலகி,அந்ததருணத்தை கவிதையாக்கும்
அழகு விசாலப்பார்வையால் மட்டும் சாத்தியமாகும்.இது அழகிய கவிதை பத்மா.

ரிஷபன் said...

இசை நிரம்பிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஒலிக்கட்டும் ஜீவித இசை..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்வியல் இசையாய் இருக்கு பத்மா...

பாலா said...

arumai arumai kka

Kousalya Raj said...

விதைக்குள் இசை வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறது. அழகு !!

வாழ்த்துக்கள்

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

ஹ ர ணி said...

சத்தியம் பத்மா.மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.

Ashok D said...

விண் மண் வியாபிக்கிறது

இறப்பிற்கான ஓர் இசை

ஆஹா...

SAI said...

நல்லெதாரு கவிதையை நயமாய் எடுத்துரைத்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

இசை :-)

கிருத்திகன் said...

நல்ல கவிதை !

everestdurai said...

"விதைக்குள் ஓர் இசை" அருமை நல்ல கவிதை

Vediyappan M said...

அருமை, அர்த்தம் நிறைந்த கவிதை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

விதைக்குள் ஒரு பெரிய ஆலமரமே, ஒளிந்து கொண்டு இருக்கும் போது,விதைக்குள் ஓர் இசை இருப்பதை சொல்லிய விதம் அருமை!


பொங்கல் வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

பத்மா said...

நன்றி காமராஜ் சார்

பத்மா said...

ரிஷபன் சார் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .நன்றி

பத்மா said...

நன்றி நண்டு

பத்மா said...

தேங்க்ஸ் தமிழ்

பத்மா said...

THANK U BALA

பத்மா said...

@ கௌசல்யா நன்றிங்க

பத்மா said...

மிக்க நன்றி ஹரணி சார்

பத்மா said...

அசோகண்ணா தேங்க்ஸ்

பத்மா said...

நன்றி சாய்.நலமா?

பத்மா said...

நன்றி ஜெய்லானி

பத்மா said...

நன்றி துரை

பத்மா said...

நன்றி வேடியப்பன்

பத்மா said...

நன்றி ஆர் ஆர் ஆர்

Marc said...

சூப்பர் கவிதை