Wednesday, October 26, 2011

யாருக்கும் புரியா கவிதை

தன்னை வாசிக்கும் அவனை 
உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது 
அந்தக் கவிதை .
இருவரிகட்கிடை உறை 
பொருளறியாதவன் வெறும் 
வார்த்தைகளை மட்டுமே வாசிக்கிறான் .
பின் உரக்க சிலாகிக்கிறான்.
தன்பின் மறை பொருளுணர்த்த
கவிதை கொஞ்சம் முயல்கிறது 
பின் தோற்றுச் சரிகிறது .
புரியாததொன்றை புரிந்ததென 
அவன் புன்னகைக்கையில்
உள்ளே அழுதுகொண்டிருக்கும் 
அந்தக் கவிதை
இனி என்றோ மற்றொருவன்  
படிக்க நேரும் வரை ...
  

23 comments:

க ரா said...

நல்லா இருக்குங்க.. என்ன சொல்ல வறீங்கன்னு நல்லா புரிஞ்சது :))))

தீபாஒளி திருநாள் வாழ்த்துகள் :)

ஹேமா said...

புரியாமல் கவிதை வாசிச்சா கவிதைக்கே கவலை வரும்.அப்பாடா !

இனிய தீபாவளி வாழ்த்துகள் பத்மா !

ரிஷபன் said...

கவிதை புரிதல் அத்தனை எளிதல்லவோ..
தீபாவளி நல்வாழ்த்துகள்.

காமராஜ் said...

புரிகிறது,எழுதாமல் இருப்பது தான் புரியவில்லை.எழுதுங்க மிஸ்ட்டர்.

வானம்பாடிகள் said...

/இருவரிகற்கிடை /

இருவருக்கிடைதானே வரும். கவிதை நல்லாருக்கு. தீபாவளி வாழ்த்துகள்.

rajasundararajan said...

//இனி என்றோ மற்றொருவன்
படிக்க நேரும் வரை ...//

இது, இது காதற் கவிதை இல்லையென்று உணர்த்துகிறது. என்றால்...

என்னத்துக்குத் தாவு தீரணும், அதுதான் 'யார்க்கும் புரியா கவிதை' என்று தலைப்பிலேயே இருக்கே!

rajasundararajan said...

/இது காதற் கவிதை இல்லையென்று உணர்த்துகிறது/ என்று நான் எழுதியதற்கு 'நாடோடித் தடம்' எழுதிய ஆளா இப்படிச் சொல்வது என்று எதிர்வினாக்கள் எழுகின்றன.

'சூழல்', 'மரபு' இவற்றின் ஒரு விளைவாகத்தானே நானும் இருக்க முடியும்? 'நாடோடித் தடம்' முதற்காட்சி கூட, நமது மரபு, பண்பாடு பற்றிப் பேசுவதாகவே தொடங்குகிறது; அப்புறம்தான் தறிகெட்ட போக்குகள் வந்து கூடுகிறது.

அதுபோல இக் கவிதையைப் புரிந்துகொள்ள, முதல் எடுப்பாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் மரபில் தொடங்கினேன். ஆனால் கவிதையின் தலைப்பு இது ஏதோ 'கடவுள்' போலப் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைப் பற்றி இருக்கலாம் என்று என்னை எச்சரித்தது. அதனால் தலைப்பை வம்புக்கு இழுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன்.

இப்போதும், இக் கவிதை காதலைப் பற்றியது இல்லை; அதனிலும் தீவிரமான ஒரு அக்கறையைப் பற்றியது என்றே எண்ணுகிறேன்.

தமிழரசி said...

//.தன்பின் மறை பொருளுணர்த்தகவிதை கொஞ்சம் முயல்கிறது பின் தோற்றுச் சரிகிறது .புரியாததொன்றை புரிந்ததென அவன் புன்னகைக்கையில்உள்ளே அழுதுகொண்டிருக்கும் அந்தக் கவிதை//

ம்ம்...

சே.குமார் said...

கவிதை நல்லாருக்கு.

தீபாவளி வாழ்த்துகள்.

D.R.Ashok said...

:)

சுந்தர்ஜி said...

யாருக்கும் புரியாதது கவிதையாகவும் இருக்க முடியாது.எழுதியவன் கவிஞனாகவும் இருக்கமுடியாது.

Rathnavel said...

நல்ல கவிதை. (புரிகிறது).
வாழ்த்துக்கள்.

வெட்டிப்பேச்சு said...

ஒவ்வொரு பெண்ணும் ஒரு கவிதை என்கிற பொருள் வருகிறதே..

சரியா..?

நல்ல கவிதை.

நட்புடன் ஜமால் said...

யாருக்கும் புரியாமல் இருக்கின்றது என்பது புரிந்தும் இருப்பதேன் ...

அமிர்தம் சூர்யா said...

அழாதே..அதான் நான் வந்துட்டேனே..என்று அந்த கவிதையிடம் சொல்ல மனதை உந்தும் தன்மையை பெற்றுள்ளதாலேயே இக்கவிதை சிறப்பு...(கவிஞர்.அமிர்தம்சூர்யா-துணையாசிரியர்-கல்கி வார இதழ்)

Harani said...

மற்றொருவன் படிக்க நேரும்வரை,,,

தன்னைப் படைத்தவனை எண்ணி
மறுகியிருக்கும்..
சரியாகப் படித்தவனை எண்ணி
மௌனித்திருக்கும்...
ஒவ்வொரு வாசிப்பிலும் அதுதன்
பாட்டை யாரறிவார்?
என்கிற கலக்கம்
வாசிப்போரை உறையவைக்கும்..

வவ்வால் said...

உஷ்!

நமஸ்காரம், நலமா?

ம்ம் இதுக்கு பெயர் தான் கவித...கவித னுசொல்றதா... ஹி..ஹி.. மெய்யாலுமே கவித தான்!

எனக்கு எந்த கவித படிச்சாலும் இது அப்படி வந்திருக்கலாம்,இப்படி வந்திருக்கலாம்னு கவிதயில வாஸ்த்து பார்க்க ஆரம்ப்பிச்சுடுறேன், அப்படி சொன்னா சண்டைக்கு வருவிங்களோ?

பேசாம சூப்பர் ,கலக்கிட்டிங்கனு சொல்லிடுறேன்!

ஆமாம் உங்க பின் தொடரும் பட்டியல் பார்த்தேன் அது எப்படி அத்தனை பதிவுகளை பின் தொடர முடியுது, ஆனாலும் நீங்க ரொம்ப" சின்சியர் சிந்தாமணி" தான் உங்க பதிவு காகித ஓடத்தையும் பின் தொடருகின்றீர்கள் !:-))

உயிரோடை said...

கி.ரா தன்னுடைய முழுத்தொகுப்பின் முன்னுரையில் என்கதை சத்தமாக வாசிக்க அல்ல என்று சொல்லி இருப்பாரு. சொல்லியும் சொல்லாமல் விடுவதும் தான் கவிதை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

புரியாமல் கவிதை இருக்காது..ஒன்று நிறைய புரிதல் இருக்கும்..அல்லது நம் சிற்றறிவிற்கு புரிபடாக் கவிதையாய் இருக்கலாம்!

rse said...

Bonjour AKKA,

I saw ur photo in facebook
is your native KARIKAL NEHRU NAGAR
coz i lived in nehru nagar
i know u and ur sister kirija akka
am i right ?
cdlt

ranjani

மதுமதி said...

வித்தியாசமானதொரு கவிதை..நன்று.

கூகிள்சிறி .கொம் said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

சுந்தர்ஜி said...

அமிர்தம் சூர்யாவின் prefix and suffix ரொம்பவும் பிடித்தது.