Thursday, February 17, 2011

இன்று,நாளை நேற்றாகும்

எனக்கு இப்போது புரிந்து விட்டது!
என் வருங்காலத்தை 
உயிர்ப்பிக்கப் போவது 
நீ எனும் 
கடந்த காலம் தான் .
கடந்தவைகளில் வாழாதே 
என கூறுபவர்களுக்குத் 
தெரியுமா என்ன 
நான் வாழும் 
இன்று தான் 
நாளையின் 
கடந்த காலம் என?

24 comments:

Anonymous said...

ஒவ்வொரு வார்த்தையும் உயிர் கொண்டவை.. தனித்து பிரித்து கருத்து சொல்ல மனமில்லை.. நினைவுகளின் ஈரம் வரிகளில் சொட்டுகிறது வார்த்தைகளாய்..

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

வெட்டிப்பேச்சு said...

நிதர்சனமான உண்மை..

D.R.Ashok said...

Awesome :)

Chitra said...

nice.

bogan said...

ஒரு நல்ல கவிதைக்கு ஒரு மொக்கைன்னு கோட்டா வைச்சிருக்கீங்க போல...பயங்கரம்.அதி பயங்கரம்!

அமைதிச்சாரல் said...

அருமைங்க.. நேற்றுதானே இன்றின் அஸ்திவாரம்.

ரிஷபன் said...

அவங்க அப்படியா சொன்னாங்க..
இப்படி எல்லாம் குழப்பிக்காம பிடிச்ச மாதிரி இருந்துட்டு போலாம்.

மோகன்ஜி said...

நலமா பத்மா? உண்மை சுடுகிறது கவிதையில்..

rajasundararajan said...

//எனக்கு இப்போது புரிந்து விட்டது!//

எல்லாருக்கும் புரிந்துவிடுவது போல இப்படி எழுதிவிட்டதால், பாராட்டுக் குவிந்துவிடும் என்று தோன்றுகிறது. என்ன சொல்வது நான்?

'ஆசையே துயரத்துக்குக் காரணம்' என்றார் புத்தர், ஆனால் ஆசை என்றால் இன்னதென்று நம் காலத்து ஆட்களுக்கும் புரிகிறாற்போல அறுதியிட்டார் இல்லை. அந்தக் காரியத்தை ஜெ.கிருஷ்ணமூர்த்தி செய்தார்: 'இறந்த காலத்தை எதிர்காலத்துக்கு நீட்டுவதே ஆசை. அச்சம் என்பதும் அதுதான்.'

உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து நீங்கள் எழுதுகிறீர்கள், ஆனால் நம்மைத் துன்புறுத்தாத - அடைக்கலஉணர்வு தோற்றும் இந்த stockholm syndrome பாராட்டிச் சீராட்டப்பட வேண்டிய ஒன்றா?

நம் நாட்டுத் தத்துவத்திலும் தலைமுறை தலைமுறையாக இது போற்றிப் போதிக்கப் படுகிறது. 'பழையன கழிதலும்...' என்று தொடங்கிய அளவில், தொடங்கியவர்மேல் தாயைப் பழிக்கத் தொடங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. ஆதிமுட்டை தங்க முட்டையே ஆனாலும் பொரிந்து வெளிப்பட்டபின்பும் பார்ப்பு (குஞ்சு) முட்டைத் தோட்டுக்காக ஏங்கவேண்டுமா என்ன?

Philosophy Prabhakaran said...

யதார்த்தமான கவிதை...

காமராஜ் said...

கவிதை,
தத்துவம்,
ரெண்டும் கலந்த எழுத்து.
நல்லா இருக்குங்க மேடம்.

Madumitha said...

இன்றுதான்
நாளையின்
கடந்தகாலம்.
மிக ரசித்தேன்.
அருமை என்று சொன்னால்
அது under statement.

kalapria said...

Today is the tomorrow you have worried yesterday ...._
தோழி விஜயபாரதி 80களில் பரிசளித்த ஒரு வால்(சுவர்)பேப்பரில் இருந்த வாசகம்...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக யதார்த்தம் பத்மா..

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

VELU.G said...

நல்ல கவிதை

...

நேற்றைய எதிர்காலம் தான் இன்று

என எடுத்துக்கொண்டால் ஏன் கடந்த காலத்தில் வாழவேண்டும்?

இராஜராஜேஸ்வரி said...

உணர்ந்து எழுதி உணர வைத்த வரிகள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம். மோஹன் சொன்னது சரி! உண்மை உண்மையிலேயே சுடுகிறது,மேடம்!

குட்டிப்பையா|Kutipaiya said...

மிக அருமை!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை..எனக்கும் தான் எதிர்காலத்தை தொட்டு விட ஆசை!

G.M Balasubramaniam said...

TODAY WAS THE TOMORROW OF YESTERDAY FOR WHICH WE HAD NOT PLANNED.

சசிரேகா! said...

Good one!!

இசக்கிமுத்து said...

மீண்டும் மீண்டும் படித்தபோது..
அருமை!