Sunday, January 2, 2011

என் மிகச் சிறந்த புத்தாண்டுப் பரிசு

எங்கள் வீட்டின் மற்றொரு நபர் போன்றவர்தான் சாந்தி .என் வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கும் ,என்னுடன் காலை நேரம் தொலை பேசி இருப்பவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்

என் உடல் நிலை காரணமாகவும் ,போதிய பழக்கமின்மையினாலும்  என் வீட்டுவேலைக்காக என் வீட்டிற்கு தினம் வருபவர் தான்.
காலைநேர பரபரப்பில் ஆயிரம் முறை  சாந்தி என்ற பெயர் உச்சரிக்கப்படும் .

மிகவும் கடமை உணர்ச்சி உடையவர்.ஒரு வேலை சொல்லி விட்டு பின் மறந்து விடலாம் மிகவும் கச்சிதமாக அது முடிக்கப்பட்டு  இருக்கும்.

யார் யாரோ வீட்டுவேலை செய்பவர்களைப் பற்றி எத்தனையோ கதைகள் கூறும் இந்த காலத்தில் ,தன்னுடையதில்லாத எந்த பொருளிலும் கொஞ்சம் கூட ஆசை வைக்காத ஜீவன் .

பல வருடங்கள் கூடவே இருப்பதால் taken for granted ஆகவே ஆகிவிட்டார் ..

ஒவ்வொரு புத்தாண்டும் என் தங்கை மகனின் பிறந்தநாளாகவும் இருப்பதால் காலையிலேயே தங்கையின் வீட்டுக்கு சென்று விடுவோம்

அதனால் அதிகாலையில் என் அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று வழக்கமாய் அவர்களுக்காக நான் வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து விட்டு வீட்டிற்கு வரும் போது தான் சாந்தி வந்தார் ..

நிறைந்த சிரிப்போடு அவருக்கு வாங்கி தந்த சேலையில் வந்து" நல்லா இருக்கா மேடம்ன்னு" வீட்டில் நுழைந்தார் ..

கையில் ஒரு பை.அதிலிருந்து ஒரு ரோஜா மலரை எடுத்து என் மகளுக்கு தந்து விட்டு, இருங்க மேடம் இதோ வரேன்னு போனவர் கையில் ஒரு தட்டு அதில் ஒரு சேலை ..

'இது உங்களுக்காக இந்த நியூஇயருக்கு" என்று கூறி கொடுத்தவுடன் நெகிழ்தே போனேன்
என் வாழ்கையிலேயே இது போன்ற ஓர் அன்பளிப்பு பெற்றுக்கொண்டதே இல்லை  என்று தோன்றியது.

"என்னை  நினைக்க யார் இருக்கிறார்கள்?" என்று  சில சமயம் தோன்றும் கழிவிரக்கத்தை கோடாலிகொண்டு வெட்டி ஒரு positiveஆன ஆண்டை எனக்கு ஆரம்பித்து வைத்தது

அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ..
ஆனால் எனக்கு இது ஒரு வாழ்நாள் முழுவதும்  
மறக்கவியலா அனுபவமாக அமைந்து விட்டதுதான் உண்மையிலும் உண்மை .
 ரொம்ப தேங்க்ஸ் சாந்தி !

25 comments:

பிரபு எம் said...

நெகிழ்ச்சியான‌ புத்தாண்டுப் ப‌ரிசு.... :)
இந்த‌ வ‌ருட‌த்துக்கு ஓர் ஆத்மார்த்த‌மான‌ ஆர‌ம்ப‌ம் சாந்தி அவ‌ர்க‌ளால் உங்க‌ளுக்கும்...
உங்க‌ளால் எங்க‌ளுக்கும்!! :)

சாந்தி, ப‌த்மா போன்ற‌வ‌ர்க‌ள் இருக்கும் பூமியில்தான் வாழ்கிறீர்க‌ள் என்றுசொல்லும் பாந்த‌மான‌ புத்தாண்டுப் ப‌ரிசு..... ஸோ ஸ்வீட் ஸ்டார்ட்..... இதுபோன்ற‌ அற்புத‌மான‌ அனுப‌வ‌ங்க‌ள் தொட‌ரட்டும் இந்த‌ அழ‌கான‌ புத்தாண்டில்:-)
வாழ்த்துக்க‌ள்.....

சே.குமார் said...

அக்கா... இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கவும்... உங்கள் சாந்தி அவர்களின் அன்பு தொடரவும் வாழ்த்துக்கள்.

dineshkumar said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

Kousalya said...

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு...சாந்தி அவங்களுக்கும் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

நெகிழ்ச்சியா இருக்கு பத்மா..இருக்கிறவங்களுக்கு கொடுக்கிற மனசு இருக்காது..சாந்தியின் அன்பளிப்பில் வைரமாய் ஜொலிக்கிறது அவர் மனம்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

uma said...

HAAA!!!!!!santhiku yennod thanks sollu ma

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

கலாநேசன் said...

Really a sweet surprise...

ரிஷபன் said...

புத்தாண்டு எத்தனை இனிமையாய் ஆரம்பம்!
மனிதரும் அவருடனான நேசமும் உள்ள ஜீவிதமே மிக அழகு.
உங்களுக்கு வாய்த்தது போலவே எல்லோருக்கும் அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

எதிர் பாரா சந்தோஷங்கள் தொடரும் வருடமாய் அமையட்டும் :)

பத்மா said...

அனைவருக்கும் மிக்க நன்றி

Harani said...

நாம் அடுத்தவர் மீது வைக்கும் அன்பு எப்போதும் நினைக்கப்படும். அன்பே சிவம். அது நமது அன்பின் தருணத்தில் திருப்பியும் வழங்கப்படும். ஓம் சாந்தி. புத்தாண்டில் நெகிழ்ச்சியான பரிசு.

பத்மநாபன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

விலைமதிப்பற்ற முழு அன்பு கொண்டு நெய்த பரிசை கொடுத்தவரின் அன்பு ஒருபுறம்..அதை நீங்கள் மகிழ்வாக ஏற்று எங்களிடம் பகிர்ந்த அன்பு ஒரு புறம்..வலைபூவுலகற்கு புத்தாண்டு புத்துணர்வு...

வினோ said...

சகோ புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

நெகிழ்வான பரிசு....

க.பாலாசி said...

இதுதான் இனிமை... கண்களில் அந்த நேரத்தில் உண்டாகும் நெகிழ்ச்சிக்குரிய கண்ணீர்கூட இனிக்கத்தான் செய்யும்.. இந்த வருடம் இதுபோல் இனிமையாகவே அமையட்டும்.. வாழ்த்துக்கள்..

ஹேமா said...

நல்ல உள்ளத்தின் பரிசோடு 2011 ஆரம்பமாகியிருக்கிறது பத்மா.வாழ்த்துகள் !

malgudi said...

இல்லாதவருக்கு கொடுக்கவும் மனம் வேண்டும்,அதுதான் இரக்கம்.
அதே போல் இல்லாதவரிடம் வாங்கவும் மனம் வேண்டும்.இதுதான் தாழ்மை.

புதுவருடம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிகச் சிறப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் பத்மா..

அம்பிகா said...

அன்பு பத்மா,
நலமா? மிக தாமதமாக வலைப்பக்கம் வந்திருக்கிறேன்.
நாம் எதை பிறர்க்கு தருகிறோமோ, அதுவே நமக்கும் வாய்க்கிறது. அன்புக்கு பதிலாய் அன்பு ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

விதை போட்டால் செடிவளரும்,
அரிசிபோட்டால் சோறுவடியும்,ஆனால் பாருங்கள் இந்த அன்பைப்போட்டால் மட்டும் அன்பே திரும்பக்கிடைக்கும்.
ஒரு மனுஷி,ஒருகவிதாயினி,ஒரு மனிதாபிமானி பத்மாவின் அற்புதமான பரிசு இது.அன்பு வைக்கப்பாத்திரமாவதே பெரும் அன்பளிப்பில்லியா ?

goma said...

அருமையான புத்தாண்டு பரிசு.
சாந்திக்கு என் வாழ்த்துக்கள்

கோநா said...

நெகிழ்வான புத்தாண்டு பரிசு \ பதிவு பத்மா, வாழ்த்துக்கள்.

Rajeswari said...

"என்னை நினைக்க யார் இருக்கிறார்கள்?" என்று சில சமயம் தோன்றும் கழிவிரக்கத்தை கோடாலிகொண்டு வெட்டி ஒரு positiveஆன ஆண்டை எனக்கு ஆரம்பித்து வைத்தது

அன்றுபோல் என்றும் இனிக்க

வாழ்த்துக்கள்.

Anonymous said...

ithula oru chinna rakasyam irukku. veettula vela seyyuravangalukku oru thuni eduththu thara manam illathavangalukku santhi nannayam senjirukkanga.