Wednesday, December 22, 2010

முடியவே முடியாமல்

என்னைத் துரத்தும்
நீ !
முன்னிருக்கும் முடிவுறா வட்டங்கள்
உன்னிடம்
அருகவும், விலகவும் வைத்து
விளையாடுகின்றன !
என்னிலிருந்து நான் வெளிப்பட்டு
உன்னிலிருந்து தப்ப முயல்கிறேன் ..
சுழல் வட்டங்கள்
தூக்கி எறிந்த அதை
ஏந்திய மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !
உன்னை விடவே முடியா
உணர்வுப் பள்ளத்தில்
இது!
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடவே முடியாதபடி
ஆடியின்
உள்ளேயும் வெளியேயும்
நீயும் நானும் !

26 comments:

விஜய் said...

படமும் கவிதையும் இணைகிறது ஒரு புள்ளியில்

அருமை

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

Anonymous said...

கவிதை வலிய நன்னு. மிக்க நன்னி

தமிழ் உதயம் said...

தொடத்துடிக்கும் விரல்கள்
தொடவே முடியாதபடி
ஆடியின்
உள்ளேயும் வெளியேயும்
நீயும் நானும் '///

அருமை. மனதை பறிகொடுத்தேன்.

இராமசாமி said...

Good one padma :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

dineshkumar said...

சுழல் வட்டங்கள்
தூக்கி எறிந்த அதை
ஏந்திய மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !
உன்னை விடவே முடியா
உணர்வுப் பள்ளத்தில்

வலிகள் மறுத்துபோனாலும்
வடுக்கள் மறைவதில்லை

ஹேமா said...

பத்மா....உங்களோடு நீங்களே போராட்டமா !

காமராஜ் said...

//தூக்கி எறிந்த அதை
ஏந்திய மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !//

அருமை மேடம் அருமை இந்த கண்ணாடிக்கவிதை.

ரசம் தடவாத எண்கோணக்கண்ணாடி இந்த மனசு.
கீ போடும் மௌசும் இல்லாத கம்யூட்டர் மனசு.

கடவுச்சொல் இல்லாமல் உள்நுழையும் நினைவுகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

:-)

sakthi said...

வரிகள் முழுவதும் விரவிக்கிடககின்றன உணர்வு போராட்டத்தின் வலி....

பிரபு எம் said...

சுயத்தைப் பிரித்துப்போட்டக் கவிதை....
கண்ணாடிக்குள் உயிர்வாழும் உலகம்.... பிம்பத்தின் உயிர்..
சந்தித்துக்கொள்ளும் நினைவுகள் என்று உள்ளே கூட்டிட்டு போயிட்டீங்க....
ரொம்ப ரொம்ப ஆழம்..... உணர்வும் கனவும் :)
வாழ்த்துக்கள்..... நிறைவாக உணர்கிறேன்...
கண்டிப்பாக ஃபைவ் ஸ்டார்ஸ் :)

வெட்டிப்பேச்சு said...

//உன்னை விடவே முடியா
உணர்வுப் பள்ளத்தில்
இது!
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடவே முடியாதபடி
ஆடியின்
உள்ளேயும் வெளியேயும்
நீயும் நானும் ! //


அற்புதம்.. வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

அருமையான கவிதை...
கண்ணாடி மனசாய் விரிகிறது வலி நிறைந்த வரிகளுடன்...

ராகவன் said...

அன்பு பத்மஜா,

அருமையான கவிதை... இது... அருகவும்... அழகான வார்த்தை...

சுழல் வட்டங்கள் தூக்கி எறிந்த அதை ஏந்திய மாயக்கண்ணாடியின் மறுபக்கத்திலும் நீ! சத்தியமா புரியலை... இருத்தலியல் சார்புடைத்து??!!!

ஆனாலும் படிக்க நல்லாயிருக்கு!

அன்புடன்
ராகவன்

bogan said...

'அருகவும்' சரிதானா.... phantom hand நினைவு வருகிறது....good

வினோ said...

/ தொடத்துடிக்கும் விரல்கள்
தொடவே முடியாதபடி
ஆடியின்
உள்ளேயும் வெளியேயும்
நீயும் நானும் ! /

எங்கு திரும்பினாலும் உங்களுடனே போராட்டமா ?

அருமை அக்கா...

ரிஷபன் said...

மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !

சபாஷ்.

Anonymous said...

//ஏந்திய மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !
உன்னை விடவே முடியா
உணர்வுப் பள்ளத்தில்//

எதுவும் பேசவோ சொல்லவோ முடியலை பத்மா...

Harani said...

உன்னை விடவே முடியா உணர்வுப் பள்ளத்தில் இது... உங்கள் கவிதைகளில் எப்போதும் ஓர் இறுக்கமான சொற்சேர்ப்பும் ஒர் ஆழ்ந்த மௌனத்தை உடைப்பதற்கான பிரயத்தனத்தையும் காண நேர்கிறது.

அதேபோன்று முடிப்பில் இன்னொரு கவிதைக்கான உணர்வைத் தொட்டுவிடுகிறீர்கள்.

தொடத் துடிக்கும் விரல்கள் தொடவே முடியாதபடி ஆடியின் உள்ளேயும் வெளியேயும் நீயும் நானும்...

ஆடியாய்த்தான் இருக்கிறது வாழ்க்கை. மட்டுமன்றி வாழ்தலின் உயர்ச்சியையும் ஆடி குறியீடாக நின்று உணர்த்துகிறது. வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்படித் தான் ஒவ்வொன்றும் நம்மை பிடித்து வைத்துக் கொண்டு விடமாட்டேன் என்கிறது..


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#

க.சுரேந்திரகுமார் said...

கவிஞரினதும் வாசகனினதும் கவிதைக்கான அனுபவம் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை!, இந்த கவிதையின் பின் வந்த கருத்துக்களே இதற்கு சான்று .
படம் உள்ளபோதும் இல்லாதபோதும் வெவ்வேறு விதமான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது இந்த கவிதை.... நீங்கள் ஒரு தேர்ந்த கவிஞர்....

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நிஜமாவே முடியலை பத்மா.:(((((((((((

தமிழ்க் காதலன். said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு சரியான இடத்தில் சந்திக்கிறேன். இப்போ இனம் காண முடிகிறது பத்மாதான் என்று. கவிதை பூடகப் பொருள் பேசி வாழ்க்கை அலசுகிறது. கிட்டயும் கிட்டாமல், எட்டியும் எட்டாமல் எங்கெங்கோ தொட்டு செல்லும் வரிகளில் வாழ்க்கை விரிந்து கிடக்கிறது. நல்ல கவிதைக்கு நன்றி.

சிவாஜி said...

:(

uma said...

Romba aaarumai yann kavidhi padmaja mirror kitta porrattma?bhoutha aaacha likha hai keep it up dont stop write a great future is waiting 4 U AS "KAVIDHI AARASI" this new year!!!!!!!gr8 job!!!!

D.R.Ashok said...

super