Tuesday, March 23, 2010

மாட்டிகிட்டோம்

இது நெஜம்மா நடந்தது. ஒங்கள்ள யாருக்கும் இது நடந்து இருக்கலாம் ஏற்கனவே படிச்சா மாதிரி இருந்துதுன்னா திட்டாம போங்க .
கல்லூரில நாங்க மூணு பேர் ரொம்ப குறும்பு ன்னு பேர் வாங்கினவங்க ,படிப்பதிலும் கொஞ்சம் புலியாய் இருப்போம் ,:)).அதனால எங்கள பாத்தா கொஞ்சம் ஆசிரியர்களுக்கு கிலி தான் ,
இதுங்க கிட்ட மாட்டிகிட்டு லொள்ளுபடரதான்னு எங்க வழிக்கே வர மாட்டாங்க .
இப்படி  தான் ஒரு நாள் செம மழை .சாதாரண நாள்லேயே  கிளாஸ்ல
பதினைந்து நிமிஷத்துக்கு மேல இருக்க முடியாது .மழைபெய்யும் போது முடியுமா? எதோ காரணம் சொல்லி வெளிய வந்துட்டோம் .மாடியிலிருந்து மழையில் நனைந்து   கொண்டே ஒருத்தர் ஒருத்தராய் கீழே வெட்டியாய் போனோம் .மாடிப்படி வளைவில் என் தோழி கால் தடுக்கி விழ போனாள்.என் இடி மாதிரி   குரல்ல" ஏய் பாத்துடி வழுக்க போவுதுன்னு" நா கத்தினது ராகு காலம் போல .அந்த சமயம் பாத்தா எங்கத்துறை தலைவர் அங்க கிராஸ் பண்ணனும்? பாவம் அவர் தலைல முடியே கிடையாது .
இப்பிடி கத்தினது அவர தான்னு எங்கள கூப்பிட்டு வச்சு அவர் பண்ணின அளப்பர    இருக்கே !!
ஒங்கள நாங்க வழுக்கைன்னு  சொல்லல சார்ன்னு சொன்னா கேட்டாதானே ?அவர் கொடுத்த டோஸ்ல ஒரு ரெண்டு மணி நேரம் நாங்க கப்சிப்.
இப்பவும் யாராவது பாத்து வழுக்க போவுதுன்னு சொன்னா கொஞ்சம் அங்க இங்க பாத்துப்பேன் .
குறும்பு இருந்தாலும் நிச்சயமா தோற்றம் பத்தி நாங்க கமெண்ட் அடிக்க மாட்டோம்ங்க
செஞ்ச தப்புலலாம் தப்பிச்சுட்டு செய்யாததுல மாட்டி "ஞே" ன்னு முழிச்சோம் பாருங்க அதான் விதி

48 comments:

Ashok D said...

கவித சூப்பருங்க...

மழையில் நனைந்த குருவிகள்ன்னு பேரு வச்சியிருக்கலாம்...

//நிச்சயமா தோற்றம் பத்தி நாங்க கமெண்ட் அடிக்க மாட்டோம்ங்க //

இப்படி சொல்லிட்டு தப்பிச்சிட்டா நாங்க விட்டுருவோமா

பத்மா said...

அசோக் இது ரொம்ப ஓவரா தெரில ? கவிதையாம்!!:( எனக்கு அழுகையா வருது .
சரி போங்க அண்ணன் ஆச்சேன்னு விடறேன் .ரொம்ப தேங்க்ஸ்

Ashok D said...

ஹல்லோ நல்ல கவித எழுதிட்டுயிருந்தீங்க.. இப்ப இது மாதிரி மொக்க போட்டா... இது மாதிரிதான் கமெண்ட் வரும்

நல்ல நகைசுவைதான்... ஆனால் அதன் அடிநாதம்... ?

அன்புடன் அருணா said...

ஙே!!!!!!!!

Ashok D said...

//எனக்கு அழுகையா வருது//

இந்த அல்வா தானே வேணாங்கறது

//சரி போங்க அண்ணன் ஆச்சேன்னு விடறேன்//
ஹல்லோ என் சித்தப்பாவையும் அண்ணா சொல்லிறீங்க என்ன்னையும் அண்ணா சொல்லறீங்க...

actually நீங்கயெல்லாம் எனக்கு அத்தைமுறைங்க.. மருமகனேன்னு தான் கூப்பிடனும்

பத்மா said...

உங்க சித்தப்பா எனக்கும் சித்தப்பா தான் .ஏன்னா நீங்க எனக்கு அண்ணன்

Ashok D said...

ஙே!

:)

sigamani said...

உங்கள் காலேஜ் அனுபவம் நல்ல அனுபவம் .......

vasu balaji said...

இடுகைய படிச்சி சிரிச்சிட்டு பாராட்ட வந்தா அசோக் அடிச்சிகிட்டு போய்ட்டாரு:))

முகுந்த்; Amma said...

உண்மைய சொல்லுங்க நீங்க உங்க HOD ய பார்க்கல :)))?

பா.ராஜாராம் said...

padma said...
//உங்க சித்தப்பா எனக்கும் சித்தப்பா தான் .ஏன்னா நீங்க எனக்கு அண்ணன்ss//

மகளும் கிடைச்சாச்சா! :-)

மகன்கள்,மருமகன்கள்,சகோதரிகள்,சகோதரன்கள்,ஒரு மருமகள்,இப்ப ஒரு மகளும்...

இந்த வலை உலகம் தரும் உறவுகளை,நண்பர்களை எப்படி பத்திரப் படுத்தப் போகிறேன் அசோக்,பத்மா?

மனசு நிறைந்துதான் வருகிறது மக்களே! :-)

பேரன்,பேத்தி பின்னூட்டங்கள் மட்டுமே பாக்கி...இதுவும் கூட எங்கே போய்விடப் போகிறது?

:-) thanks family!

பத்மா said...

இப்போ தான் இந்த வலைப்பூ உலகில் இருக்கும் அன்பு பரிமாற்றத்தை பற்றி பேசிட்டு வரேன். நெஜம்மா நீங்க நா அசோக் கிட்ட பேசினத படிப்பீங்கன்னு நினைக்கல .உண்மைய சொல்லணும்னா எல்லாரும் எதோ ஒரு விதத்துல அன்புக்கு ஏங்கிட்டு தான் இருக்கோம் .எத்தனை விதமாய் வந்தாலும் அது பத்தாம போகுது .எனக்கு ராகவன் போல அழகா உணர்வுளை சொல்ல தெரியாது .ஆனா உங்க குடும்பத்துல என்னையும் இணைச்சுகிட்டதுக்கு நன்றின்னு சின்ன வார்த்தை போதுமா பா.ரா?

பத்மா said...

நன்றி வானம்பாடிகள் சார் .தவறாம படிக்கறதுக்கு அதும் இதுபோல மொக்கைய .

பத்மா said...

i swear mukundamma
நிச்சயமா அப்போ பாக்கல.அப்பாவிகளை யார் நம்புறாங்க ?

Appu said...

ஒரு கவிதாயினி காமெடி பீஸ் எழுதறாங்களே!! :P

நாடோடி said...

காமெடியான‌ அனுப‌வ‌ம் தான்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நினைவுகள் பத்மா மேடம், ரொம்ப நல்லாருக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சாதாரண நாள்லேயே கிளாஸ்ல பதினைந்து நிமிஷத்துக்கு மேல இருக்க முடியாது .மழைபெய்யும் போது முடியுமா?//
ரெம்ப கஷ்டம் தான்...
//மாடியிலிருந்து மழையில் நனைந்து கொண்டே ஒருத்தர் ஒருத்தராய் கீழே வெட்டியாய் போனோம்//
அது எப்படிங்க வெட்டியா கீழ போறது
அது எல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க

நட்புடன் ஜமால் said...

குறும்பு இருந்தாலும் நிச்சயமா தோற்றம் பத்தி நாங்க கமெண்ட் அடிக்க மாட்டோம்ங்க ]]

ஆரோக்கியம்!

சைவகொத்துப்பரோட்டா said...

படிச்சதும், வழுக்கி.....வழுக்கி....ச்சே.......விழுந்து......விழுந்து(?) சிரிச்சேன்.

vidivelli said...

நல்ல பதிவு ....
பிடிச்சிருக்குங்க...
உங்கள் தளத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன்...
வசதி கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாங்க>>>

Chitra said...

நான், உங்களின் நேற்றில் இருந்து எழுதுகிறேன். (over here, it is still Tuesday night) - "வழுக்கமா" உடனே படிச்சிடுவேன். ஹி,ஹி,ஹி,.....

Anonymous said...

//ஞே" ன்னு முழிச்சோம் பாருங்க அதான் விதி//

இந்த முழியில் கூட நல்லாத் தான் இருக்கீங்க பத்மா....ஹஹஹஹஹா

Joe said...

சுவாரஸ்யமான நகைச்சுவை...

பள்ளி, கல்லூரி காலங்களை நினைவுபடுத்தியது உங்கள் இடுகை.

Jaleela Kamal said...

பழைய நினைவுகளை நினைத்தாலே இனிமை தான்

Thenammai Lakshmanan said...

செஞ்ச தப்புலலாம் தப்பிச்சுட்டு செய்யாததுல மாட்டி "ஞே" ன்னு முழிச்சோம் பாருங்க //

hahahahaah
Super Padma...

Unmaithaan da...

"உழவன்" "Uzhavan" said...

:-)))))

க.பாலாசி said...

//ஏய் பாத்துடி வழுக்க போவுதுன்னு" நா கத்தினது ராகு காலம் //

எனக்கென்னமோ நம்பிக்கையில்லை... நீங்க டைம் பார்த்து அடிச்சிருக்கீங்க...

பத்மா said...

என் மேல எப்பிடி இவ்ளோ நம்பிக்கை பாலாஜி?

பத்மா said...

தமிழ் தேங்க்ஸ் பா .ஆனா எப்பிடி கண்டுபிடிச்சீங்க?

பத்மா said...

தேங்க்ஸ் தேனம்மைக்கா

பத்மா said...

zeno
என்னை அப்பிடியும் ஒத்துக்கல இப்படியும் ஒத்துக்கல

பத்மா said...

தங்கமணி உங்களுக்கு ஏன் இந்த கொடும் வேலை? நா தொடர்பதிவா? பா ரா கூப்பிட்டார் .எழுத தெரியாம எஸ்கேப் ஆயிட்டேன். இப்போ நீங்க !நா என்ன செய்வேன்? பார்ப்போம் எதாவது முடியுதான்னு

பத்மா said...

நாடோடி, ஸ்டார்ஜன் தேங்க்ஸ்

பத்மா said...

தேங்க்ஸ் ஜமால் .இப்போ அந்த குறும்பும் இல்லை .பொண்ணுக்கு பயப்பட வேண்டியுள்ளது

பத்மா said...

சைவ கொத்துபரோட்டா வழுக்கி விழுந்ததில் மூட்டு வலின்னா கைவசம் மருந்து இருக்கு

பத்மா said...

இதான் எனக்கு ஒங்ககிட்ட பிடிக்கும் சித்ரா .நெத்தியடி

பத்மா said...

ஜோ முதல் முதலா வருகை நன்றிங்க .

பத்மா said...

சிகாமணி ,உழவர் ரெண்டுபேருக்கும் தேங்க்ஸ்ங்க

பத்மா said...

ஜலீலா வருகைக்கு நன்றி.உங்க ப்ளாக் சூப்பரா இருக்குங்க

சிநேகிதன் அக்பர் said...

செம காமெடி போங்க.

நல்ல எழுதுறீங்க மேடம்.

தினேஷ் ராம் said...

ஹஹஹா.. அருமை சித்தி.

ஆனா.. ஏன் இப்படி? :D

Nathanjagk said...

ஹாஹா..! அட்டகாசமான காமெடி!
இது​போல் அடிக்கடி எழுதுங்க!

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !


மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

பனித்துளி சங்கர் said...

கலக்கல்

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

Unknown said...

ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை.. !

பஹ்ரைன் பாபா said...

ஹா.. ஹா..ஹா.. really வெரி nice
It made me laugh a lot..

உண்மைய சொல்லுங்க.. அவர் வர்றது உங்களுக்கு முன்னமே தெரியும்தானே.. டபுள் மீநிங்க்ள பேசி இருக்குறீங்க.. ஆமா இப்போ ஏங்க apologise பண்றீங்க.. இன்டெர்னல் மார்க் எதுவும் பாக்கி இருக்கா என்ன??..

பஹ்ரைன் பாபா said...

ஹா.. ஹா..ஹா.. really வெரி nice
உண்மைய சொல்லுங்க.. அவர் வர்றது உங்களுக்கு முன்னமே தெரியும்தானே.. டபுள் மீநிங்க்ள பேசி இருக்குறீங்க.. ஆமா இப்போ ஏங்க apologise பண்றீங்க.. இன்டெர்னல் மார்க் எதுவும் பாக்கி இருக்கா என்ன??..