Wednesday, March 10, 2010

இருளின் நிறம்

இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம் நாம் அன்று
ஜன்னலின் சிறுதுளையில் நுழைந்த நிலாக்கீற்றைக் கூட அடைத்து
சுற்றிசுற்றி  பார்த்தாய் நீ
நம் நான்கு கண்கள் மட்டும் பளிங்காய் ஒளிர்ந்தன
மூக்குத்தி! என்றாய்
சிறு ஒளியாம் அதனை  கழற்றி  ஒளித்து வைத்தேன்
இருட்டின் நிறம் அருகிவிட்டது
கண்ணுக்குத்தெரியா  கருநீலத்தில் மூழ்கி கிடக்கும் அவ்வமயம்
அறியாது  உன் நகம் என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில்
இருள் சட்டென போயே போய் விட்டது  .
எப்போதாவது  இருளின் நிறம் கண்டுபிடிப்போமா நாம்?

24 comments:

Ashok D said...

இது கூட தெரியாதா... கருப்புங்க..

Ashok D said...

இருள் கிளர்ந்து ஒளிர்ந்தது :)

பத்மா said...

அதுகூட தெரில பாருங்க .சரியான மக்கு தானே ?

Ashok D said...

//சரியான மக்கு தானே ?//
மக்கு சரியாகிடுங்க

sigamani said...

இருளின் நிறம் கருப்பு என்று தெரிந்தும்...............அருமை

R.Gopi said...

இருளின் நிறத்தில் முத்தாய்ப்பான வரிகள் இவை...

//கண்ணுக்குத்தெரியா கருநீலத்தில் மூழ்கி கிடக்கும் அவ்வமயம்
அறியாது உன் நகம் என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில்
இருள் சட்டென போயே போய் விட்டது.//

பிரமாதம்.....

வாழ்த்துக்கள் பத்மா....

முதலாய் வருகை தருகிறேன்... நீங்களும் நேரம் கிடைக்கும் போது இங்கு வருகை தரலாமே...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

ஜெனோவா said...

எனக்கு மிகப் பிடித்திருந்தது இக்கவிதை .
வாழ்த்துகள் பத்மா ;-)

பத்மா said...

நன்றி சிகாமணி

பத்மா said...

வாங்க கோபி முதல் வருகைக்கு நன்றி .பின்னூடத்திற்கும் நன்றி .கட்டாயம் உங்கள் வலைப்பூ வருகிறேன்

பத்மா said...

மகிழ்ச்சி ஜெனோவா

Thenammai Lakshmanan said...

நான்கு கண்கள் பளிங்காய் ஒளிர்ந்தது அற்புதம் பத்மா மிக ரசித்தேன் டா

பத்மா said...

@thenammai akka
ரொம்ப தேங்க்ஸ்கா .உங்கள் வலைபூவிற்கு எப்போதும் ஒரு பக்தி பரவசத்துடன் தான் வந்து படிப்பேன் . u inspire me a lot

பத்மா said...
This comment has been removed by the author.
Priya said...

அழகான வ‌ரிகள்... வாழ்த்துகள் பத்மா!

ரிஷபன் said...

சிலநேரங்களில் இருளின் நிறம் இனிமை..

ஜெய்லானி said...

அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

Ravindran Arunachalam said...

கனவுக்கு நிறம் இருக்கிறது என்று ஜெயகாந்தன் எழுதினார். இருளிலும் நிறம் உண்டு என்று மெய்ப்பிக்க ஒரு கவிதை வரிகளா ?? நன்று நன்று .....

Anonymous said...

nice one

பஹ்ரைன் பாபா said...

"" மேலோட்டமா பார்க்க நினைத்தால் கூட..உள்ளிழுக்கிறது உங்கள் கவிதை ..ரசிச்சி.. பாராட்டி கருத்தெழுத குறைஞ்சது நாலு நாள் ஆகும்.. ஒரு கேள்வி..உங்க படைப்புகளோடு ஒரு நூலிழை போல் ஒட்டி உறவாடும் ஓவியம்??..???..??

பத்மா said...

நன்றி ரிஷபன்

பத்மா said...

நன்றி பிரியா

பத்மா said...

தேங்க்ஸ் ஜெய்லானி

பத்மா said...

:) இரவின்

பத்மா said...

பஹ்ரைன் பாபா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .படியுங்கள்.படிப்பதாக சொன்னது பெருமையாக உள்ளது.அந்த படங்கள் இணைய தளத்திலிருந்து சுட்டவை தான் .