Friday, March 5, 2010
அம்மா
இன்னும் சில மாதங்கள் தான்
என தீர்ப்பு வந்த நேரம் ..
ஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட
தீர்ப்பை மாற்ற விழையவில்லை .
மருத்துவ மனை வராண்டாவில்
வீழ்ந்து உருண்டு புரண்டு அழவேண்டிய
மனநிலையில் மதிய காட்சிக்கு போனோம்
எல்லாம் சரிதான் என்ற பாவனையில் ..
ஆயிற்று
ஒவ்வொருவராக காண வருகின்றனர்
கடைசியில் உன்னுடன் பேசுவதற்கு
உன் எதிரில் கண்ணீர் விட அஞ்சி
கல்லாய் போனோம் அனைவரும் .
நீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம்
முகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று விழித்திருந்தோம்
நீயும் நானும் தனித்திருந்த சமயம்
எனக்கு சாகும் வயசா ?ஏன் இப்படி? என்று கேட்ட கேள்விக்கு
என்ன பதில் நான் கூறியிருக்க இயலும் ?
வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம்
அழியாமல் இருப்பதைக்கண்டு
அதை முத்தமிட்டு உன்னை கூவி அழைப்பதை தவிர ?
அம்மா.
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
//நீயும் நானும் தனித்திருந்த சமயம்
எனக்கு சாகும் வயசா ?ஏன் இப்படி? என்று கேட்ட கேள்விக்கு
என்ன பதில் நான் கூறியிருக்க இயலும் ?//
ரொம்ப ..........
\\வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம்
அழியாமல் இருப்பதைக்கண்டு
அதை முத்தமிட்டு உன்னை கூவி அழைப்பதை தவிர ?
அம்மா. \\
வலியை சொல்கிறது
:-(((
அசோக் சொன்னது சரி:) நெகிழ்வான கவிதை
அம்மாவின் ஞாபகம் என்னுள் மீண்டும்..
அம்மா,வாசிப்பில் வலி இருக்கிறது
நெகிழ்ச்சி!
//வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம்
அழியாமல் இருப்பதைக்கண்டு
அதை முத்தமிட்டு உன்னை கூவி அழைப்பதை தவிர ?
அம்மா.//......வலி தெறிக்கிற வரிகள்.
இன்று இந்த கோலம் இருக்கிறது.. நாளை அதுவும் இருக்காதோ என்று அம்மாவை நினைவுப் படுத்தும் எதுவும் அவரில்லாத சமயங்களில் நம்மை உடைத்து விடும். :(
என் அம்மா நினைவு வந்தது.
நெகிழவான பதிவு.
excellent Padma. Lot of memories about my mother. She never spoke to me in her last moments. she was quite in her last sleep. :(
அம்மா அருமையான கவிதை என கத்துவதை தவிர வேறு அறியேன். வாழ்த்துக்கள்
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ........
இனம் புரியாத ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது கவிதை பத்மா!
மிக நெகிழ்ச்சியான வரிகள்...
ராஜப்ரியன் ரொம்ப ????
வலிதான் அம்பிகா
குறித்துக்கொண்டேன் வானம் பாடிகள் சார் .நன்றி
ஆமாம் ரிஷபன் . வாசித்ததிற்கு நன்றி
நன்றி ஜெர்ரி அனைவரையும் வருந்த வைத்து விட்டேனோ?
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா ..நான் உங்கள் ரசிகை
அசோக் நீங்கள் எப்பொழுதும் என் வாசகர் ,அதற்கு மிக்க நன்றி
அரவிந்த் எது அழிந்தாலும் நினைவு அழியுமா?
நன்றி கோமதி அரசு
thank u thozhi .i somehow happened to vent my feelings about her last days ..even then more do i carry in my memories
நன்றி சரவணன்
சிகாமணி வருகைக்கு நன்றி
மனதின் அழுத்தம் தான் அது பா ரா சார் .வார்த்தைகளாய் வந்திருக்கிறது
thank u kuttipaiya
ஹார்ட்ட டச் பண்ணிட்டீங்க :-(((
அம்மா இது ஒரு மந்திர சொல். ம்ம்ம் கவிதை நல்லா இருக்குன்னு சொல்ல முடியலை. மனம் வலிக்க செய்யும் ஒரு விசயத்தை ரசிக்க முடியுமா?
அம்மா என்று சொல்லும் அந்த உறவு கோலத்தில் அழியலாம்
ஆனால் என்றும் வாழ்கையில் அழியாது..
உன் வலி என்னுள் பாதிப்பு என்று சொல்வதை தவிர
வேறு ஒன்றும் இல்லை
சிந்து.ஜி
உங்கள் பிளாக்கைப் பார்த்தேன். ’அம்மா’ மட்டும் படித்தேன். வத்தகுழம்புவையும் பார்த்தேன். மற்றவைகளையும் படித்துவிட்டு எழுதுகிறேன்.
நீங்கள் ELLA WHEELER WILCOX எழுதியுள்ள POEM களை படித்து இருக்கிறீர்களா? -- கடுகு
கடுகு சார் உங்க வருகைக்கு நன்றி .கருத்துக்கும் நன்றி
நெகிழ்வு.
அன்பின் பத்மா
அம்மா - நெகிழ்வு - வலி
ஆயிரம் முறை ஓதிய கடவுள் கூட தீர்ப்பை மாற்ற மறுத்துவிட்டான். அழ வேண்டிய நேரத்தில் மதிய காட்சி. கண்ணீர் விட அஞ்சி கல்லாய்ப் போனோம். மயக்கத்தில் மார்பு அசைகிறதா என விழித்திருத்தல். விடை காணா வினாக்கள். ஒவ்வொரு பொருளும் நினைவூட்டும் அம்மாவினை.
இவை அனைத்துமே நான் அனுபவித்தவை. சொல்லொணாத் துயரம். மனதில் பழையவை நிழலாடுகிறது.
நல்வாழ்த்துகள் பத்மா
நட்புடன் சீனா
Post a Comment