Wednesday, June 20, 2012

திரு .வேங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி எழுதிய என் முதல் புத்தக மதிப்பீடு


பத்மஜா நாராயணன் அவர்களின் ”மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்” கண்ணில் பளபளக்கப் படித்தேன். கல்கி, குங்குமம், இவள் புதியவள், இணையம்(அதீதம், உயிரோசை) என்று பரவலாக எழுதிய கவிதைகளைத் திரட்டி கவிப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எல்லாக் கவிதைகளின் க்ளைமாக்ஸிலும் தலைப்பிற்கான திரியைக் கொளுத்துகிறார். ஒரு பானைக் கவிதைகளுக்கு ஒன்றிரண்டு பதமாக இங்கே.

”பாழாய்ப்போன மனசு” படித்தவுடன் மனசோடு ஒட்டிக்கொள்கிறது. பழைய திண்ணை இடிக்கப்படாமல் இருப்பதற்கும், மல்லிப்பூ விற்கும் சிறுமி தலையில் கிள்ளுப் பூவிற்கும், இறுதி ஊர்வலம் வயதானவருக்கே என்று தெரிந்த பின்னர் தான் ஆசுவாசப்படுகிறது மனசு என்று சொல்வது ’பச்’சென்று பாழ் மனசோடு படிகிறது.

“கல்லாட்டம்” ஆடிய ஜெயந்தியக்கா பதினாறாவது வரியில் அண்ணியான கவிதை.

“கன்ஃப்ர்ம்ட்” கவிதை கர்ப்பம் கன்ஃப்ரம்டு என்ற சந்தோஷம் ஒரே கேள்வியில் துக்கமானதைச் சொல்கிறது.

Discovery Book Palace கட்டுக்கோப்பாக பதிப்பித்த கவிதைத் தொகுப்பு. திறம்பட வடிவமைத்து இலக்கியத்தரமான பதிப்புரை எழுதிய வேடியப்பனுக்கு ஒரு சபாஷ்.

2 comments:

கீதமஞ்சரி said...

மிகவும் நேர்த்தியான விமர்சனம். முதல் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் பத்மா. இன்னும் நிறைய நிறைய உங்கள் படைப்புகள் நூலாக்கம் பெற வாழ்த்துகிறேன்.

மே. இசக்கிமுத்து said...

Vazhthukkal padma, i would like to read your book...