Tuesday, July 24, 2012

முத்தம் சரணம் கச்சாமி



முத்தமும் முத்தமிடதலும்
அனைவருக்கும்
பிடித்ததாய் இருக்கிறது .
முத்தமொரு  தவம்
முத்தமொரு இசை
முத்தமொரு வரம்.
ஆகவே
எல்லாரையும் அத்துணை எளிதாய்
முத்தமிட இயல்வதில்லை
அப்படி எளிதாகி விட்டால்
அது முத்தமாக இல்லாது போய்விடுகிறது
முத்தத்தில் ஆன்மாக்கள் பகிரப்படுகின்றன
முன்ஜன்மத்துத் தொடர்ச்சியாய் முத்தங்கள் மலர்கின்றன.
முத்தங்களுக்கு உதடுகள்  மட்டும் போதாமல் 
அவற்றின் பாஷையும் கற்றிருக்க வேண்டியிருக்கிறது
முத்தத்தின் இசை அறிந்தவன் செவிக்குத்தான்
மற்ற எல்லா இசையும்,உணர்வுகளின் இசையாய் மாறிப்போகின்றன
முத்தத்தில் மழை பெய்யும் 
முத்தம் தீயை கொளுத்தி விசிறும்
முத்தம் சாந்தப்படுத்தி அமரும்.
முத்தம்,கொடுப்பவரைக் கொன்று
வாங்கியவரின் உயிர் பறிக்கும்.
முத்தத்தை முத்தமிட்டுக் கொண்டேயிருக்கப் பிடிக்கிறது
இவளுக்கு
இவனுக்கு
எனக்கும்
உனக்கும் .
இப்படி முத்தக் கடலில் மூழ்குபவருக்கெல்லாம்தான்
முத்தம் சரணம் கச்சாமி    

6 comments:

மதுரை சரவணன் said...

முத்தம் முத்தமிடச் செய்கிறது…

க ரா said...

beautiful :)

cheena (சீனா) said...

முத்தத்தின் விளக்கம் அருமை - அனுபவைத்து எழுதப்பட்ட கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கீதமஞ்சரி said...

முத்தம் சரணம் கச்சாமி. இதைவிடவும் முத்தத்தை சரணடையும் வார்த்தைகள் வேறு உளவோ?

அழகான பகிர்வு. பாராட்டுகள் பத்மா.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புத்தக வெளியீட்டுக்குப் பிந்தைய கவிதைகள் இன்னும் புது மெருகுடன்.

முத்தக் கவிதையின் மணம் கிளைத்துப் பரவுகிறது.மீண்டும் மீண்டும் முத்தமிட வைக்கிறது.

Cable சங்கர் said...

க்யூட்