மார்கழி மழைநாளில்
வீட்டில் சரணடைந்தது
கருப்பு நாய்க் குட்டி ஒன்று .
பறந்து பறந்து
கொட்டங்கச்சி பால் அருந்தி
தள்ளாடும் நடை மயக்க
நானறியாமல் அதன் தோழியானேன் .
அதற்கென ஒரு கிண்ணம்
படுக்க ஒரு விரிப்பு
என பழக்கியும்
பல நாட்கள்
என் கூந்தல் கதகதப்பில்
கண்ணுறங்கும் .
குழந்தையென
ஊஞ்சலாட்டி தூங்கியபின்
அதன் முகம் பார்த்து
வினாவொன்று எழும்
என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா?
(நன்றி பூவரசி இதழ் )
6 comments:
அருமை
விசில் பட விவேக்கைக் கூப்பிட்டால் அறிந்து கொள்ளலாம்
kanavugal udaintha manorathangal... naam eduvaaga irukkiromo aduvaagavey aagippogirom. nitchayam kanavil varalam
கண்டிப்பாக வருவீர்கள். அழகு வரிகளில் தெரிகிறது.
//என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா?//
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.
அருமை.
இந்தக் கவிதையில் வரும் ஒரு வரி ஆச்சர்யப்பட வைத்தது.
இதே போல் ஒரு வரி என் கவிதையிலும்.
முத்தாய்ப்பான வரிகள் அழகானவை பத்மா!
Post a Comment