Tuesday, June 19, 2012

"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் '' புத்தக வெளியீடு

 கனவு போல் இருக்கிறது.

இங்கு நான் கவிதை எழுதத்தொடங்கியதும் அதற்கு நீங்கள் அனைவரும் பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தியதும்.

எதோ ஒரு பேராசையில் அதை தொகுத்து வெளியிட்டும் விட்டேன். நியாயமாக அந்த அறிவிப்பை இங்கு தான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும்.பணிச்சுமையினால் பகிர முடியாமல் போய்  விட்டது.

காகிதஓடத்தில் வந்த கவிதைகளைத் தொகுத்து
"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''
 என்று தலைப்பிட்டு டிஸ்கவரி புக் பாலஸின் முதல் வெளியீடாக வந்துள்ளது. இதை சாத்தியப் படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி .


நிச்சயம் நான் எதோ நற்செயல் புரிந்திருக்க வேண்டும்.அதனால்தான்  நான் பெரிதும் மதிக்கும் திரு.கலாப்ரியா அவர்களும் திரு.ராஜ சுந்தரராஜன் அவர்களும் எனக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளனர்.

அவர்கள் எழுதிய முன்னுரையை  அவர்களின் அனுமதியோடு முடிந்தால் பதிவேற்றம் செய்கிறேன் .

நூல் http://discoverybookpalace.com/ என்ற முகவரியில் கிடைக்கும்.

நூல் மே முப்பதன்று மதுரையில் திரு கலாப்ரியா அவர்களால் திரு.வெற்றிவேல் அவர்களின் மகனின் திருமண விழாவில்  வெளியிடப்பட்டது.
மதுரை நண்பர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னையில் டிஸ்கவரி புக் பாலஸில் ஒரு அறிமுகக் கூட்டம் நடத்தலாம் என்று நினைத்திருக்கிறேன்.நண்பர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்த வேண்டும் .

இது சாத்தியப்பட்டதில் வாசிக்கும்,வாசித்த உங்கள் அனைவருக்கும் பங்கு உண்டு.அதற்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல.  

7 comments:

அன்பேசிவம் said...

madam innum tea varalai :-)

அன்பேசிவம் said...

madam tea innum varali :-))

தினேஷ் ராம் said...

வாழ்த்துகள் :-)

ரிஷபன் said...

இது தொடக்கம் மட்டுமே. இன்னும் ப்ல சிறப்பான தொகுப்புகளை நீங்கள் வெளியிட.. நாங்கள் படித்து ரசிக்க.. காத்திருக்கிறோம்.
நல்வாழ்த்துகளுடன்..

Vediyappan M said...

தங்களின் புத்தகம் இப்போதுதான் அதற்கான எல்லையை விரிவுபடுத்திக் கொண்டு இலக்கிய உலகம் நோக்கி முன்னேறிக்கொண்டு நகர்கிறது எனலாம் மேடம். விரைவில் அதற்கான பாராட்டு & விமர்சனங்கள் உங்களுக்கு வந்து சேறும்.

சசிகலா said...

ஒவ்வொன்றும் முத்துக்கள் தோழி படிக்கத் தொடங்கிவிட்டேன். ஒன்று மட்டும் புரிந்தது எல்லா பெண்களுக்கும் பிறந்த வீடு அந்த ஊரில் உள்ள திண்ணை வீடுகள் இவற்றின் மீதான காதல் என்றுமே எந்த கோணத்தில் பார்த்தாலும் குறையாது போலும் தங்கள் வரிகளிலும் அம்மாவின் கோலமும் திண்ணை பற்றிய கவிதை வரிகளை படித்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை இது வரை தங்கள் தளத்திற்கு வந்ததில்லை என்றாலும் நம் இருவரின் வரிகளில் உள்ள சிறு ஒற்றுமை நம்மை இணைத்ததாகவே கருதுகிறேன். நம்மை சந்திக்க வைத்த சத்ரியன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்கிறேன் தோழி.

சிவகுமாரன் said...

அப்பாத்துரை மூலம் அறிந்து கொண்டேன். புத்தகத் திருவிழாவில் தேடவிருக்கிறேன்.