ஜன்னல் வெளி
தென்னங்கீற்றின்
அசைவொத்தாடுகிறது
ஒரு பெண்டுலம்
கருப்புநிறச் சேலையின் முந்தாணி
அறை மூலையில்
கிழிந்தவொரு சிலந்திவலை
பாதி படித்து மூடிவைத்த பக்கங்கள்
இருக்கையின் மேல் போர்த்திய
சல்லாத் துணி
அசைப்பதறியாக் காற்றில்
உன்முன்னுச்சி முடி
என்னாசை போலவே
5 comments:
அசையும் ஆசையை அளவிடும் உவமைகள் அருமை பத்மா.
கவிதைநுர்ல் வெளியீட்டுவிழா எப்படி நடந்தது என்று ஒரு பதிவிடுங்கள். இன்னும் எனக்குப் புத்தகம் அனுப்பவில்லை. ஏற்கெனவே என்னுடைய முகவரி அனுப்பியுள்ளேன். கிடைக்கவில்லையெனில் மறுபடியும்.
உறரணி. 31. பூக்குளம் புது நகர். கரந்தை. தஞ்சாவூர்.613 002,
அவசியம் அனுப்புங்கள்.
எத்தனையோ முறை வருத்தப்பட்டிருக்கிறேன் கிழிந்த சிலந்தி வலைகண்டு. அதை பின்னமுடியாதா என்றும் ஏக்கம் கொண்டிருக்கிறேன்.
நல்ல சொல்லாட்சி.
சரி.. கவிதை விழா எப்படியிருந்தது?
கவிதை நுர்ல் என்னாச்சு?
முகவரி தருகிறேன் மறுபடியும்
உறரணி. 31 பூக்குளம் புது நகர்
கரந்தை. தஞ்சாவூர்-613 002.
மிகவும் அழகான கவிதை.
மிகவும் அழகான கவிதை.
கவிதை அழகாக இருக்கிறது
இயல்பான சொற்கள்
மென்மையான் ஒட்டம்
ஆனால் அழுத்தமாக இறங்குகிறது
வாழ்த்துக்கள்
----------------------------------
நந்தினி மருதம்
நியூயார்க்
2012-06-26
Post a Comment