Monday, April 16, 2012

சாத்தானும் வேதமும்




அன்றொரு நாள்
என்னிடம்
ஒரு  சாத்தான்
வேதம் ஓதிக்கொண்டிருந்தது 
அருகில் இருந்த
செடியிலிருந்து
ஒரே ஒரு துளசி கொய்து
கையில் அழுத்தமாய்
மூடி வைத்துக் கொண்டிருந்ததைக்
கண்டு
ஏளனமாய் சிரிக்கவும் செய்தது
அச்சாத்தான் .
சொல்வதற்கெல்லாம்
தலையாட்டியதைப்
பார்த்து  பரிதாபப்பட்டோ  என்னவோ
பிடியிலிருந்து விடுவித்து விட்டது

அவசர அவசரமாய்
ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு
உறங்கி விழித்து கண்ணாடி பார்க்கையில்
தான் தெரிந்தது.
அச்சாத்தான் போலவே
மாறியிருந்த என் முகமும்...

வழி விடுங்கள்
நானும் வேதம் ஓத புறப்பட்டு விட்டேன் .

5 comments:

ஸ்ரீராம். said...

நடைமுறைக் கவிதை. அருமை.
(டிராகுலா கவிதையா....!)

எம்.ஞானசேகரன் said...

நல்ல கவிதை!

Unknown said...

Nice!

கே. பி. ஜனா... said...

கவிதை நன்றாக இருக்கிறது.

வவ்வால் said...

உஷ்,

ரொம்ப நாளாய் இந்த பக்கம் வரலையேனு வந்தேன் உச்ஷ்பா ... ரொம்ப கவிதயா இருக்கு :-))

//அருகில் இருந்த
செடியிலிருந்து
ஒரே ஒரு துளசி கொய்து
கையில் அழுத்தமாய் //

அருகிலிருந்த துளசி செடியிலிருந்து என வரணும் ,ரெண்டு தடவை "துளசி" வரும்னு நீக்கீட்டாப்போல இருக்கு,ஆனால் ஏதோ ஒரு அருகில் இருக்கும் செடியில் இருந்து கொய்தாலும் துளசி வரணும் அப்போ :-))

அப்புறம் சாத்தான்,வேதம் என்கிற ஒப்புமை எல்லாம் ரொம்ப பழைய சொலவடை, புதுசா முயற்சிக்கலாமே.

அது என்ன சாத்தான் எல்லாம் இறை நம்பிக்கையோட இருக்குமா வேதம் ஓத, ஒரு நாத்திக சாத்தான் கூட இருக்காதா :-))

சாத்தானின் சொற்பொழிவுகள்னு சொல்லக்கூட முடியாத வேத பாட சிந்தனைகள்!