Friday, March 2, 2012

விருது கிடைச்சுருகுங்கோய்



உடனே என்னவோ எதோ என்று ஆச்சரியபட்ராதீங்க.தூங்கிட்டு இருந்த என்னை தட்டி எழுப்ப, அன்புடன் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி தரும் விருதுகள் இவை ,ரொம்ப நன்றி சார் .

 இதை பகிரணுமாம்.செஞ்சுடலாம்!அதுக்கு முன் எனக்கு பிடித்த ஏழு  விஷயங்கள் எழுதணுமாம் .எழுதிட்டா போச்சு.ஆனா லிஸ்ட் மிக நீளமா இருப்பதால் மனதுக்கு சட்டென்று தோன்றும் ஏழை மட்டுமே எழுதப் போகிறேன்.நான் பகிரப் போகும் ஐந்து வலைப்பதிவர்களும் லிஸ்ட் குடுக்கணும், ஐந்து பேருக்கு பகிரணும்.இப்போ எனக்கு பிடித்தமான ஏழு விஷயங்கள்
  1. ஓர்  ஆறுமாதக் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே இருப்பது
  2. அழகான ஓவியங்களைத் தேடிப் பிடித்து ரசிப்பது
  3. பிங்க் கலரில் உள்ள அனைத்தும்
  4. மல்லாரி வாசிப்புடன் சாமி புறப்பாடும்,பின் அர்த்தஜாம பூஜையும்
  5. மிகுந்த கவனம்பெறாத திறமைசாலிகளைத் தெரிந்த அனைவருக்கும் அறிமுகம் செய்வது
  6. என் பெண்ணிற்கு விதவிதமாய் உடைகள் தெரிவு செய்வது
  7. விடிகாலைப்பயணம்  (இசையுடன் )
இதைத் தவிர வாசிப்பும்,உணவும்,உடுத்துதலும்,பின் தொலைபேசுவதும், பிடித்தவை என்றாலும் அவை மூச்சு விடுவதைப் போல சகஜமாய் ஆகிவிட்டதால் சிறப்பாய் குறிப்பிடவில்லை.இன்னும் என்னன்னவோ உள்ளன .அவை பற்றியெல்லாம் யாராவது இன்னொரு விருது கொடுத்து கேட்காமலா போய்விடுவார்கள்?

இனி நான் விருதைப் பகிரப் போகும் வலைப்
 பதிவர்கள்
  1.  வானம் வெளுத்த பின்னும் ...ஹேமா
  2. சைக்கிள்........   மிருணா
  3. ஜெய்லானியின்     ஜெய்லானி
  4. தாரபுரத்தான் ......தாரபுரத்தான்
  5. எங்கள் ப்ளாக் .............ஸ்ரீராம்
மிகவும் நன்றி ராமமூர்த்தி சார்

13 comments:

mohamed zackaria marican said...

nice...

க.பாலாசி said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகளும்..

அனைவருக்கும் வாழ்த்துகள்..

ஹேமா said...

ஓடி வந்து எடுத்துக்கிட்டேன் பத்மா.பிரத்தியேகமான சந்தோஷம் உங்ககிட்ட இருந்து செய்தியும் விருதும் கிடைச்சது.நன்றி பத்மா !

தனிமரம் said...

உங்களிடம் விருது பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் என்று உங்களுக்கு விருது கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள் விருதோடு நின்று விடாமல் நீங்கள் தொடர்ந்து ஏழுதனும் அப்போது தான் இளையவர்கள் என் போன்றோருக்கும் உங்களை அதிகம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் சகோதரி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி,மேம்!
இதைப் பற்றி எழுதாதது நித்யா, எல்லன் என்று தான் நினைக்கிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த ஸ்வாமி புறப்பாடு..விஸ்தாரமாய தேரோடும் வீதிகளில்...கும்பகோணத்திற்கும், மாயவரத்திற்கும்.. நடுவில் உள்ள ஏதாவது கிராமத்தில்...
நாதஸ்வரத்தில் நாட்டை ராக ஆலாபனையுடன்...

அடடா.....அந்த சுகமே ‘தனி’ தான்!

ஸ்ரீராம். said...

விருதுகளுக்கு நன்றி...(ரெண்டுதானே?!!)

ஏழு பிடிச்ச விஷயங்கள் சொல்லிடலாம்...

ஆனால் இன்னும் அஞ்சு பேருக்குப் பகிரணுமா....

"நான் எங்க போவேன் பெரியம்மா...மன்னிக்கவும் பத்மா மேடம்...நேக்கு யாரைத் தெரியும்...குடுக்கணும்னுதான் தோணுது....ஆனால் யாருக்கு கொடுக்கறதுன்னு தெரியலையே....குடுக்கணும்னு நினைச்சா எல்லோரும் ஏற்கெனவே வாங்கிட்டாங்களே ....."

"எங்கே தேடுவேன்...அஞ்சு பேரை எங்கே தேடுவேன்...!"

:))))

நன்றி மறுபடியும்.

r.v.saravanan said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

Vediyappan M said...

இப்படியெல்லாம்கூட விருது கொடுக்கலாம்னு தெரிஞ்சிருந்தா டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாவும் சில பல விருதுகளை கொடுத்திருக்கலாம். பரவாயில்லை உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெருபவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்!

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

ரிஷபன் said...

பிங்க் கலரில் உள்ள அனைத்தும்

same pink !

ஹ ர ணி said...

வாழ்த்துக்கள் பத்மா. வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

திறமையாளரைத் தேடிவந்த விருதுகளுக்கும் திறமையாளர்களைத் தேடிப்போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.

(எத்தனை நாள்தான் விருது பெற்றவர்களையே வாழ்த்துவது... அதான் இந்தமுறை விருதுக்கு வாழ்த்து. ;))