Monday, February 20, 2012

வசந்தம் ( மீள் பதிவு )


தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு

மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை மலர்ந்து விரிந்தது ஒரு நீலப்பூ

பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில் ஒளிந்து கொண்டது கள்ள நேசம்

மருதாணி பூக்களின் மகரந்த வெடிப்பு சுமக்க முடியாது சுருண்டு விழுந்தது ஊழிக்காற்று

வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு

உயிர்க்கும் செடியினை வெடித்து கிளப்பியது நீள் மழை புணரும் பொறை பூமி 

வந்தது வசந்தம்

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

வந்தது வசந்தம் வசந்த வாழ்த்துகள்..

ஹ ர ணி said...

வசந்தத்தை அனுபவிக்கும் உங்கள் கவிதையிலும் வசந்தம் வந்திருக்கிறது பத்மா. வாழ்த்துக்கள்.

அ.வெற்றிவேல் said...

வந்த வசந்தம் தொடர வாழ்த்துகள் தொடர்ந்து எழுதவும்..

ரிஷபன் said...

வாசல் கோலத்தை நெற்றியில் இட்டு குயிலோடு சேர்ந்து இசைத்தது மன இசைத்தட்டு

வசந்தத்தின் குரல் மிக இனிமையாய்..

கீதமஞ்சரி said...

முதலிரண்டு வரிகளில் வெளிப்படும் புளகாங்கித உணர்வே வசந்த வாழ்வின் அழைப்பாய் விரிய, தொடர்ந்து பரவி மனமெங்கும் வியாபிக்கிறது வசந்தகாலத்தின் வாத்சல்ய விவரிப்பு!

அருமை... பாராட்டுகள் பத்மா.