Wednesday, August 21, 2013

வரிகளிடை மறைகவி

அவன் அனுப்பிய 
வரிகளை படிக்கத் தொடங்கினேன் 
எதாலோ ஏதோவோர் 
உயிரைத் துரத்த 
ஆயத்தம் கொண்டிருந்த 
வரிகள் 
அவ்வுயிரை அவை தொடும் நேரம் 
ஒரு நல்ல கவிதையாக 
மாறக்கூடிய சாத்தியங்கள் இருந்தது
அதுவரை அக்கவியின் 
பச்சை நிழல் 
அவ்வரிகளின் மேல் 
படிந்து மினுங்கியது.
பச்சை தந்த மயக்கத்தில் 
நல்ல கவிதையென 
செய்தி அனுப்பி விட்டு 
அமர்ந்த பின் தான் புலப்பட்டது
எல்லா வரிகளினூடே 
அமர்ந்திருந்த 
கவியின் உரு
அப்போது நிழல் கருப்பாய் மாறுவதை 
தடுக்க முடியாமல் 
திகைத்து நோக்குகையில் 
கவியின் நிறம் உண்மையில்  
சிவப்பாய் இருந்தது .

1 comment:

ஹ ர ணி said...

அன்புள்ள பதமா அவர்களுக்கு..

வணக்கம். நீண்ட நாள்களுக்குப் பின் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். நீங்கள் பரிசு வாங்கிய பதிவிலிருந்து இதுவரை பதிவிட்ட கவிதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். இனித் தொடரந்து வருவேன்.

இந்தப் பதிவுக் கவிதையில் ஒரு சின்ன திருத்தம் சாத்தியங்கள் என்று வரும்போது இருந்தன என்பதுதான் சரி. பன்மைவிகுதிக்கு பன்மையில்தான் சொல் போட வேண்டும்.
நன்றி.