Friday, October 22, 2010

Kanmani Anbodu Kadhalan - Guna - Kamal Haasan & Roshini

29 comments:

Kousalya Raj said...

nice song...

பத்மா said...

thanks kousi

RVS said...

பத்மா. நல்ல பாட்டுதான். என்னாச்சு.. திடீர்ன்னு... இன்னிக்கி பௌர்ணமி!

பத்மா said...

ஹஹாஹா ஆர் வி எஸ் ...கவிதை தான் வரல ..அதான் ஒரு கவிதைப் பாட்டு ..

Siva said...

Beautiful Song...going back to old memories....

profit500 said...

NICE SONG,( விமர்சனத்தின் நடுவில் மானே தேனே -பொன்மானே எல்லாம் போட்டுருக்கலாம் இல்ல)

வினோ said...

நல்ல பாட்டுங்க.. நன்றி..

எஸ்.கே said...

அருமை!

க.பாலாசி said...

நல்ல பாடல் மேடம்... பலநேரங்களில் ரசித்ததுண்டு.

r.v.saravanan said...

அருமையான பாடல் நன்றி

Jerry Eshananda said...

உங்களை பார்த்தது...மிகுந்த சந்தோசம்.

மோகன்ஜி said...

எனக்கும் பிடிச்ச பாட்டுங்க!

அன்பரசன் said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

Philosophy Prabhakaran said...

அஹா... பிரமாதம்... கழுத கழுத...

காமராஜ் said...

ரொம்ப ஆர்க்கஸ்ட்ரேசன் இருக்காது.பெருசா கவித்துவம் இருக்காது.ஒருத்தர் இன்னொருத்தருக்குச் சொல்லிக்கொடுக்கிற ரைம் மாதிரி ரொம்ப ஈஸியா இருக்கும் இந்தப்பாட்டு. அப்படியே சூழலுக்கு ஒத்துப்போகும் சினிமாப்பாடல்.இடியாப்பம் செஞ்சிட்டுமிருக்கும்போது கொஞ்சம் மாவெடுத்து உள்ளே இனிப்புவைத்து கொழுக்கட்டை மாதிரி ஒரு பண்டமும் சேர்த்து சமிக்கிற வித்தை இது.

பத்மா said...

என்னுடன் ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றி

விஜய் said...

Excellent song

vijay

bogan said...

இந்தப் பாட்டில் மட்டுமல்ல படம் ,வசனம் ,கதைக் கரு எல்லாவற்றிலுமே கமலையும் மீறி பாலகுமாரனின் ஆளுமை நன்கு தெரியும்.பாலகுமாரனின் அக உலகிற்கு மிக நெருக்கமாக வந்த படம் இது.[இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த வசனகர்த்தா விருது அவருக்கு கிடைத்தது]இந்தப் படத்தை வந்த புதிதில் குறைந்தது ஐந்து தடவையாவது திண்டுக்கல் தியேட்டரில் போய்ப் பார்த்தேன்.அந்த தியேட்டரின் பெயர் அபிராமி!

bogan said...

ஆர் வி எஸ் பின்னூட்டத்தைப் பார்த்ததும் இன்னொன்றும் நினைவு வந்தது.இந்தப் படத்தை இரவுக் காட்சி பார்த்துவிட்டு கொடை ரோட்டிற்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த சமயம் ஜன்னல் சீட்டிலிருந்து குளிர் காற்றில் சிகை பறக்க படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு வருகையில் பக்கத்து இருக்கைக் காரர் சுட்டிக் கான்பித்ததும்தான் அதைப் பார்த்தேன்.''அழகா இருக்கில்லே"'என்றார்.நிலா.வேகமாக எதிர்த்திசையில் ஓடும் அத்தனை மரங்கள் மீதும் மலை நிழல்கள் மீதும் கூடவே ஓடி வந்து கொண்டிருந்த பௌர்ணமி நிலா!ஒரு கணம் முதுகு சொடுக்கி அதிர்ந்து விழி தளும்பியது ஏன் என்று இப்போதும் புரியவில்லை.நினைவு படுத்தியதற்கு நன்றி சொல்லவேண்டுமா எனத் தெரியவில்லை.ஏன் எனில் எப்போது கேட்டாலும் வயிற்றில் ஏதோ ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும் பாடல்.எப்போது இந்தப் பாடலைக் கடக்க நேரிட்டாலும் பதற்றத்துடன் வேறு பாடலுக்குப் போய் விடுவேன்.அத்தனை விமர்சனங்களும் மீறி இளையராஜாவையும் கமலையும் பாலகுமாரனையும் நேசிக்க இந்த ஒரு பாடல் போதும்.

ADHI VENKAT said...

அருமையான பாடல். மீண்டும் கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

ரிஷபன் said...

மறுபடியும் அதே ரசனைக்குள் நுழைந்து.. மனம் லேசாகி.. தாளம் போடும் உற்சாகம்.

பத்மா said...

நன்றி நன்றி அனைவருக்கும்

'பரிவை' சே.குமார் said...

அருமையான பாடல்.

R.Gopi said...

பத்மா....

என்ன இது திடீர்னு “குணா” பாடல்?

சரி பாட்டு போட்டது தான் போட்டீங்க.. ஒரு ரெண்டு வரி மானே தேனேன்னு எல்லாம் எழுதியிருந்தா சுவாரசியமா இருந்திருக்குமே...

அபிராமி....அபிராமி......

Thenammai Lakshmanan said...

எனக்கு மிகப் பிடித்த பாடல் பத்மா..:))

மே. இசக்கிமுத்து said...

நான் மிகவும் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று! நீண்ட நாட்களுக்கு பிறகு வலை பக்கம் வந்திருக்கிறேன் உங்கள் நினைவிற்கு நன்றி!

Aathira mullai said...

பலருக்கும் பிடித்த பாடலை கேட்க வைத்துள்ளீர்கள். ரசித்தேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

குணாவைப் பற்றிச் சொல்ல நான் ரொம்ப லேட் பத்மா.

குணா வந்த போது நான் சென்னை திருவல்லிக்கேணி வாசி.விடாத மழை ஒரு வாரமும்.

தூக்கமாத்திரை சாப்பிட்டுத் தூங்கப் போகும் வியாதிக்காரனாய் குணா பார்த்தும் தூக்கமிழந்த நாட்கள் ஒரு ஊதுவத்தியின் சுழலும் புகையாய்.

தினமும் குடையுடன் தேவியில் ஒருவாரம் விடாது என் நெருக்கமான 5 நண்பர்களும் குணாவை அருந்தினோம்.

ஒவ்வொரு நாளும் காட்சி முடிந்து அண்ணாசாலையிலிருந்து திருவல்லிக்கேணி அக்பர்சாஹிப் தெரு அறை வரையிலும் கனத்த மௌனத்துடனும் கண்களில் வடிந்து காய்ந்த கண்ணீருடனும் படுக்கையில் விழுந்தும் உறங்காத இரவுகள்.

முதல் நாள் காட்சி முடிந்து திரும்புகையில் இறுதிக்காட்சியை விமர்சித்த என் நண்பன் செல்வராஜை கன்னத்தில் அறைந்தது நினைவிலாடுகிறது.அடித்ததன் வலியை விட நான் அடிப்பேன் என்று கொஞ்சமும் நம்பாத அதிர்ச்சியில் அவன் உறைந்தது.

அன்று தொடங்கி இன்று வரையிலான என் பயணத்தில் இன்று வரை குறையெதுவும் காண முடியாத அல்லது விரும்பாத சிலவற்றில் குணாவுக்கு முக்கிய இடமுண்டு.

பாலகுமாரன் தன்னை அடையாளம் சொல்ல குணாவை மட்டுமே சொல்லிக்கொள்ளலாம்.

கமலும் இளையராஜாவும் அடுத்த தளத்துக்கு நுழைந்தது இப்படத்துக்குப் பின்தான் என யூகிப்பேன்.

அதே போல் என் நண்பர்களுக்குள் எந்த விவாதமோ அலசலையோ ஏற்படுத்தாது ஒரு பேரமைதியில் உறைந்த அதிர்வையும் ஆனந்தத்தையும் கொடுத்த ஒன்றாய்க் கொடுத்த அனுபவம் குணா.

ஏனிப்படி உணர்ச்சிவசப்படுகிறேன் என்றும் எனக்குள் ஏதோ ஆகிக் கொண்டிருக்கிறேன் என்றும் தோன்றுகையில் நீ எழுதுவதும் இப்படிப் பைத்தியமாய் இருப்பதும் பார்க்கப் பிடித்திருக்கிறது என்கிறாள் அபிராமி. வேறென்ன நான் சொல்ல?எல்லாம் நிறைவாய் உணர்கிறேன்.

எனக்குள் அணையாது எரிந்து கொண்டிருந்த திரியைத் தூண்டிய உங்களை கைகூப்பி வணங்குகிறேன் பத்மா.

adhiran said...

??????????