Wednesday, October 13, 2010

மலைப்பாதைகள் அன்று வெளிச்சமாய் இருந்தன



இருட்டு, மலைகளில் விரைவில் படரும் என்பது கூட அறியாமல்
மலைவீதிகளில் சுற்றித்திரிந்தோம் அன்று.
பனியும் கருமையும், படர் வீதிகளில்
ஓர் ஒற்றைப்  போர்வை போர்த்தி,
மூடிய ஒரு விடுதியில், நாம் இரக்கச் சோறு
உண்ணச் செல்கையில்
மெல்ல
உன் மணம்,என் நினைவுப் படிமங்களில் ஆழ்ந்தது .

 பின், சட்டைப்பையில்
ஒளித்து வைத்த காதல் கடிதம் படித்து 
நீ என் இதழ் பறித்த போது 
சேர்ந்து வீழ்ந்தது, என் வெட்கத் திரையும் தான்  .

உன் பழைய பனியனின், மணம் கிளர்த்திய 
இவ்வேட்கைகள் தீர 
மற்றொரு முறை மலைப்பாதையில் கால் பாவாமல்
உன் தோள் தொற்றி நடக்க விழையும் நேரத்தில் தான்
எனக்கான மலைப்பாதைகள், இப்பொழுதெல்லாம் 
இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை 
மிக தாமதமாக
என் மனம் புரிந்து கொள்கிறது . 

32 comments:

எஸ்.கே said...

மெல்லிய உணர்வூட்டும் பதிவு!

சுந்தர்ஜி said...

//உன் பழைய பனியனின், மணம் கிளர்த்திய இவ்வேட்கைகள் தீர மற்றொரு முறை மலைப்பாதையில் கால் பாவாமல்உன் தோள் தொற்றி நடக்க விழையும் நேரத்தில் தான் எனக்கான மலைப்பாதைகள், இப்பொழுதெல்லாம் இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை மிக தாமதமாகஎன் மனம் புரிந்து கொள்கிறது//

இருளில் துவங்கி இருளில் முடிந்த இக்கவிதையின் துயரம் இரவின் ஆழ் இருளில் என்னைத் தூங்கவிடாது துரத்தும் பத்மா.

தினேஷ்குமார் said...

வலிகளை வரிகள்
சுமக்கின்றன

http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_13.html

வினோ said...

இல்லாமையின் வலி...

sigamani said...

மற்றொரு முறை மலைப்பாதையில் கால் பாவாமல்
உன் தோள் தொற்றி நடக்க விழையும் நேரத்தில் தான்
எனக்கான மலைப்பாதைகள், இப்பொழுதெல்லாம்
இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை
மிக தாமதமாக......sinthikka vaitha varigal nice

Chitra said...

அருமையான கவிதையும் படமும்.

Anonymous said...

எனக்கான மலைப்பாதைகள், இப்பொழுதெல்லாம்
இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை
மிக தாமதமாக
என் மனம் புரிந்து கொள்கிறது .

முதல் பகுதியை ரசித்த அதே மனம் இந்த வரிகளுக்கு வருந்துகிறது தெரியலை...வலிகளுக்கு வலிமை அதிகமா பத்மா?

கவி அழகன் said...

சுவாரிசியமான பதிவு!

sathishsangkavi.blogspot.com said...

“சட்டைப்பையில்
ஒளித்து வைத்த காதல் கடிதம் படித்து
நீ என் இதழ் பறித்த போது
சேர்ந்து வீழ்ந்தது, என் வெட்கத் திரையும் தான்“

ரொம்ப பிடிச்சிருக்கு இவ்வரிகள்...

thiyaa said...

மென்மையான பதிவு

Ashok D said...

:(

sakthi said...

இப்பொழுதெல்லாம் இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை மிக தாமதமாகஎன் மனம் புரிந்து கொள்கிறது

நெகிழ வைக்கும் வரிகள்

'பரிவை' சே.குமார் said...

Arumaiyana kavithai valikaludan unarvin vuyiraiyum sollum kavithai.
vazhththukkal.

பத்மா said...

மிக்க நன்றி எஸ் கே

இமை மூடாது வருந்திய நட்புக்கு நன்றி ..சுந்தர்ஜி

நன்றி தினேஷ்

அதே வினோ

தேங்க்ஸ் சிகாமணி

சித்ரா நன்றிங்க

ஆம் தமிழ் வலி மிகவும் வலிக்கும் :))

நன்றி யாதவன்

நன்றி
@சங்கவி
@ஷக்தி
@சே குமார்

என்ன அசோக் அண்ணேன் வெறும் :( தான் ?

மோகன்ஜி said...

பத்மா! என்ன ஆழமான உள்ளடக்கம் கவிதையில்..
கவிந்த இருள் சற்று நேரம் என்னைச் சுற்றியும்..

விஜய் said...

சுகந்த வலி சுமக்கும் கவிதை

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

சிந்தியா said...

Vry gud writting..
Ennal muzhu arthamum puriya mudiya villai, en ariviku ettiyavarai arumai.. :-) vazhthukal ka. :-)

Madumitha said...

பிரியம் மலைப் பாதகளையும்
ஒளிர வைக்கிறது...

சேர்ந்து வீழ்ந்தது என் வெட்கத்
திரையும் தான்...
கிளாசிக்.

அதி அற்புதம்.

uma said...

Romba nalla irruku indha fellings in kavidhi vadvill gr888!!!!!! padmaja

bogan said...

கலர் கலரில் தோற்றவர் இதில் ஜெயித்திருக்கிறீர்கள்.இறக்கச்சொரு என்ற வார்த்தைப் பிரயோகமும் மற்றொருமுறை மலைப்பாதையில் கால்பாவாது தவிக்கும் சித்திரமும் அற்புதம்.கவிதை கைகூடி வந்திருக்கிறது.

தமிழ்க்காதலன் said...

இதயச் சாரலிலிருந்து
இறங்கி வருகிறேன்.
தமிழ் மணம் சற்று
கடிமணம் கமழும் இந்த
பத்ம சோலைக்குள்
புகுந்து தொலைந்துப்
போனது நானும் என்
தமிழும்தான்.
இமைப் பிரிக்காமல்
எங்கோ செல்கிறேன்.
உணர்வுகள் கிளரும்...!!
உங்கள் ஒற்றையடிப்
பாதையில் என் பழைய
நினைவுகள் தேடி..!!
இன்னும் விடியாத
பொழுதுகளின்...
விடியலுக்காய்
தவமிருக்கும்....
இறுகிய மனம்..!!

"சட்டைப்பையில்
ஒளித்து வைத்த
காதல் கடிதம் படித்து
நீ என் இதழ் பறித்த போது
சேர்ந்து வீழ்ந்தது,
என் வெட்கத் திரையும் தான்"

என் மௌனம் கலைக்காதீர்கள்.
நன்றி.

profit500 said...

மென்மையான மொழி , வலிமையான வரி

காமராஜ் said...

கவிதை பொங்கிப்பொங்கிஆவியை வெளியேற்றுகிறது.
அதே இருள் ஒரு நாள் ரம்மியமாகவும் இன்னொரு வேளை
கனத்தும்.க்ரேட் பத்மா.

ஜெயசீலன் said...

சுவாரஸ்யமான வலி. நல்லக் கவிதை... வாழ்த்துக்கள்...

அன்பேசிவம் said...

இரக்கச்ச்சோறு...
நல்ல கற்பனை.

r.v.saravanan said...

சட்டைப்பையில்
ஒளித்து வைத்த காதல் கடிதம் படித்து
நீ என் இதழ் பறித்த போது
சேர்ந்து வீழ்ந்தது, என் வெட்கத் திரையும் தான் .

இவ்வரிகள் அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை..கவிதாயினிக்குப் பாராட்டுக்கள்....

Aathira mullai said...

ஒவ்வொரு எழுத்தும் வலியைத் துப்பும் வினோதம்..அருமை பத்மா..

ரிஷபன் said...

இப்பொழுதெல்லாம் இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை மிக தாமதமாக என் மனம் புரிந்து கொள்கிறது .

ம்ம்.. சொல்ல வார்த்தைகளற்ற தருணம்

Prasanna said...

Very nice...

குட்டிப்பையா|Kutipaiya said...

//இப்பொழுதெல்லாம்
இருட்டாகவே எப்பொழுதும் இருப்பதை//

pch..sogam.. :(

மே. இசக்கிமுத்து said...

கடைசி வரிகளை படிக்கும் போது லேசாக வலித்தது எனது மனமும்!