Monday, October 18, 2010

பாழாய்ப் போன மனசு


எத்தனை முறை 
கடக்க நேரிட்டாலும் 
திண்ணை வைத்த 
அந்த பழைய வீட்டை 
யாரும் இடிக்காமல் 
இருக்கவேண்டுமென 
ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கிறது 
மனசு!

8888888888888888888888888888888888888888888888888888888888888

ஓடும் வண்டியினை 
கைகாட்டி நிறுத்தி,
மல்லிப்பூ விற்கும்
சிறுமிகளின் தலையில்,
ஒரு நாளேனும் 
கிள்ளுப் பூவாவது 
காண ஏங்குது மனசு!

8888888888888888888888888888888888888888888888888888888888


எங்கோ வெளியூரில் 
எதேர்ச்சையாய் 
காணும் நேரும் 
இறுதி ஊர்வலங்களில் கூட,
எடுத்துச் செல்லப்படுபவர் 
வயதானவர் 
என்றுணர்ந்த பின்பே,
ஆசுவாசமாகிறது மனசு !

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888

43 comments:

philosophy prabhakaran said...

மூன்றுமே சிறப்பு... முதலாவதும் மூன்றாவதும் அருமையிலும் அருமை... எனக்கும் திண்ணை வைத்த வீடுகள் என்றால் மிகவும் பிடிக்கும்...

சிவாஜி சங்கர் said...

நல்ல இருக்கு அக்கா..

சுந்தர்ஜி said...

ஒரு வானவில்லின் முதல் மூன்று வண்ணங்கள் கண்டேன் பத்மா.உங்களின் மொழி விரல் வழிக் கசிகிறது மறுபடியும்.சபாஷ்.

மாதேவி said...

மனதின் ஏக்கங்கள் நன்றாக இருக்கின்றன.

காமராஜ் said...

ரெண்டும் ஒண்ணும் அபாரம்.

அந்தத்திண்ணையில்
உட்கார்ந்து ஆடுபுலி ஆட்டம் விளையாட்லாம்,
கூட நாலுபேர் சேர்ந்தால் ரம்மிக்கு கைகோர்க்கலாம்.இல்லை கைகால் பரத்திப்போட்டு நண்பர்களோடு கதை பேசலாம்.இல்லை நினைவுகளைச்சுழலவிட்டு மோட்டு வளை பார்க்கலாம்,அயர்ந்து செத்த தூங்கலாம். அது இடிபடாமல் இருக்கணும்.இருக்கும்.

ஆஅங் சொல்லமறந்துட்டேன் மூணு நல்லால்ல.

க.பாலாசி said...

யாருக்குத்தான் இல்லைங்க இந்த தவிப்பு... ஆனா உங்களப்போல அழகா வெளிய சொல்ல முடியறதில்ல.. எல்லா ஏக்கத்துடனும் இதுவும் கலந்துவிடுவதாலோ என்னமோ...

சைவகொத்துப்பரோட்டா said...

மூன்றும் நன்று, முதலாவதில் படமும் சேர்ந்து அழகு.

VELU.G said...

மிக அழகான கவிதைகள்

சைக்கிள் said...

இரண்டாவது கவிதையில் அன்பு வழிகிறது பத்மா. இந்த நொடி அன்பு என்று எழுதினால் அந்த கவிதையை எழுதின பத்மாவைத்தான் பார்க்க முடிகிறது 'அங்கே'.

Chitra said...

எத்தனை முறை
கடக்க நேரிட்டாலும்
திண்ணை வைத்த
அந்த பழைய வீட்டை
யாரும் இடிக்காமல்
இருக்கவேண்டுமென
ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கிறது
மனசு!


......பெருமூச்சு!

மோகன்ஜி said...

அழகான கவிதைகள் !

மணிஜீ...... said...

எனக்கு மூன்றாவது கவிதை பிடித்தது....அதில் கொஞ்சம் எடிட் பண்ணால் இன்னும் அருமை...

///எடுத்துச் செல்லப்படுபவர் வயதானவர் என்றுணர்ந்த பின்பே, ஆசுவாசமாகிறது மனசு //

சூப்பர்....

மணிஜீ...... said...

இரண்டாவது கவிதை....பூ என்பது உங்கள் கோணம்.நான் பலாச்சுளையாகவும் , வெள்ளரி பிஞ்சாகவும் எண்ணி பார்த்தேன்

profit500 said...

மூன்று முத்துக்கள்தான ? மீதம் எங்கே ???????

வானம்பாடிகள் said...

எனக்கும் காமராஜ் மாதிரி ரெண்டும் ஒன்னும்.:)

தமிழ் உதயம் said...

மெல்லிய உணர்வு, அழகிய கவிதைகளாக மலர்ந்துள்ளது. அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல மனசு...பத்மா..

dineshkumar said...
This comment has been removed by the author.
கமல் said...

ஏங்குது மனசு! கண்கள் மட்டும் பல காட்சிகளை பார்க்கிறதே... நம்மால் ஒரு விசியத்தையும் சொல்ல முடியவில்லையே, எதையும் செய்யமுடியவில்லையே என்று

பல விசியங்களை எழுதுங்கள் நன்றி தொடர்கிறேன்.

விஜய் said...

சிறு சிறு கவிதைகள் சொல்லும் விஷயங்கள் பெரிது

குறுகத்தரித்த கவிதைகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்

தொடருங்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

வினோ said...

மூன்றும் அருமை.. இரண்டாவது நிறைய யோசிக்கவைத்தது..

ப்ரியமுடன் வசந்த் said...

ஏக்கம்!!

முதல் கவிதை பிடித்தது!

Gopi Ramamoorthy said...

super

Madumitha said...

மூன்றும்
முத்தெனினும்
மூன்றாவது
அபூர்வ முத்து.

தமிழ்க் காதலன். said...

இனிய சிநேகத்துக்கு..., ஒருக் காம்பில் பூத்த மூன்று ரோஜாக்களின் அழகு... இந்த மூன்றில்..! உங்களின் தனித்துவம் பதியும் கவிதை வரிகள்.... ஒரு வாசகனின் கனத்த இதயத்தின் மூலையில் உணர்ச்சிகளை பதியம் இடுகின்றன. மிக்க நன்றி. ஒரு சின்ன திருத்தம். மூன்றாவது கவிதையில்.... "எதேச்சையாய்", காணும் என்பது "காண", அல்லது எதேச்சையாய் காண நேரும் என இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மிக்க நன்றி.

Anonymous said...

நச்சென்றிருக்கிறது கவிதைகள் சார்ட் அண்டு க்யூட் பத்மா,,,

சே.குமார் said...

மனசு... நல்ல மனசு..!
நல்ல இருக்கு அக்கா.

"உழவன்" "Uzhavan" said...

மூன்றும் மனசை வருடுகின்றன..

sakthi said...

எத்தனை முறை கடக்க நேரிட்டாலும் திண்ணை வைத்த அந்த பழைய வீட்டை யாரும் இடிக்காமல் இருக்கவேண்டுமென ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கிறது மனசு!

ஏக்கம் நிறைந்த வார்த்தை கொண்டு வடிக்கப்பட்ட கவிதை

ராமலக்ஷ்மி said...

கவிதைகள் மூன்றும் அருமை.

அன்பரசன் said...

பிரமாதம்ங்க...

சுந்தரா said...

மொத்தத்துல நல்ல மனசு உங்களுக்கு :)

அழகான கவிதைகள் பத்மா.

நிலா மகள் said...

மூன்றுமே நல்லாயிருக்குங்க . ஜீவ காருண்யம் ததும்பி வழியுற ,பாழாப் போகாத உங்க மனசு தெரியுது.

ரிஷபன் said...

திண்ணை வைத்த வீடு என் பேவரிட்!

பிரபு . எம் said...

அழகான மனசு உங்களுக்கு... :)

vasan said...

//இடிக்காமல் இருக்கவேண்டுமென ப்ரார்த்தித்துக்கொண்டே இருக்கிறது மனசு!//
பாழாகாத‌,பால் ம‌ன‌சு.
/சிறுமிகளின் தலையில்,ஒரு நாளேனும் கிள்ளுப் பூவாவது காண ஏங்குது மனசு!/
வீடு திரும்பும் போது, த‌லைக்கு வ‌ருமோ? விற்காத‌ பூக்க‌ள்.
/எடுத்துச் செல்லப்படுபவர் வயதானவர் என்றுணர்ந்த பின்பே, ஆசுவாசமாகிறது மனசு !/
என்றென்றும் வாழ‌ட்டும் இந்த‌ இளம‌ன‌சு.

Harani said...

சொற்செட்டான வார்த்தைகளில் அமைந்த மூன்று கவிதைகளும் அருமை. திண்ணை வைத்த வீடுகளில் சொக்கட்டான் ஆட்டத்திற்கான கட்டங்கள் பதித்த கிராமத்து வீடுகளைப் பார்த்து ஏங்கியிருக்கிறேன். அதேபோன்று சாணி மெழுகிய வீடுகளைப் பார்த்து ரொம்பவும் நெகிழ்ந்ததுண்டு. தினமுமான பயணத்தில் ஸ்பீடு பிரேக்குகளில் வாகனங்கள் நிதானிக்கும்போது ஓடிவரும் சிறுமிகளையும் சிறுவர்களையும் முகம் வறண்டுபோன இளம் பெண்களையும் கண்டு நொந்துபோனதுண்டு. அவர்களின் பூக்கள் விற்பனையாகாமல் போவதற்காக அல்ல. அவர்களின் உயிர் குறித்து. மரணம் என்பது எப்படியும் தவிர்க்கஇயலாது எனினும் அது இளையவர்களாக இல்லாமல் முதியவர்களாக இருப்பதில் ஆறுதல் கொள்வது என்பது ஒருவகையில் மட்டுமே சரியானது. இது என் எண்ணம். உங்கள் மூன்றாவது கவிதையில் முரண்படும் நிலை இது. இருப்பினும் இக்கவிதைகள் நெகிழவைக்கின்றன பத்மா. அன்புடன் உறரணி.

அடலேறு said...

//
எங்கோ வெளியூரில்
எதேர்ச்சையாய்
காணும் நேரும்
இறுதி ஊர்வலங்களில் கூட,
எடுத்துச் செல்லப்படுபவர்
வயதானவர்
என்றுணர்ந்த பின்பே,
ஆசுவாசமாகிறது மனசு !//
வலிகளை வார்த்தை படுத்தியுள்ளீர்கள்

R.Gopi said...

திண்ணை வீட்டை இடிக்கக்கூடாது என்று என் மனசும் சேர்ந்து பரபரக்கிறது...

மல்லி விற்கும் சிறுமியிடம் ஒரு முழம் வாங்கி, அதை அவரிடமே தந்து தலையில் வைக்கச்சொல்லி அழகு பார்க்கலாமே!!?

மூன்றாவது நல்ல மனசை அப்படியே படம் பிடித்து காட்டும் ஒரு கவிதை...

இசக்கிமுத்து said...

யாருக்கு வரும் உங்களை போல இந்த இளகிய மனசு! நல்ல கவிதை!! இன்னும் வாசிக்கிறேன்!!

uma said...

old is gold ma first kavidhali second one super girluku poo vaithu parpatherku third one made me think a lot!!!!!!!!!!!!

நிலாமதி said...

முத்தான மூன்றுமுத்துக்கள் பாராட்டுக்கள்

DREAMER said...

உள்மனசை உள்ளதுபோல் காட்டும் மிக நல்ல கவிதை..!

-
DREAMER