Sunday, October 3, 2010

கலர் கலரில் தோற்றவள்

 
L
O
N
D
O
N

விளையாட்டாகட்டும்
காக்கை முட்டை
விளையாட்டாகட்டும்
எல்லாவற்றிலும் ஏமாந்து
தோற்று போவாள் 
மீனு ..
கலர் கலர் வாட் கலரில்
கூட
தன் சட்டையில்  உள்ள
பூ கலர்
எல்லாரும் வந்து
தொட்ட பின்பு தான்
கடைசியாக அவளுக்குத்
தெரியவரும் ...... 

தன்னை விரும்பியவனை 
மறுத்து ,
அந்த மாடி வீட்டுக்காரனை  
மணந்து
காரில் போகும் போது 
மட்டும்  
 வாழ்க்கையில் ஜெயித்தவள் 
என
      இப்பொழுது  சொல்கிறார்கள்  ... 

அதுமட்டுமெப்படி?34 comments:

அன்பரசன் said...

யதார்த்தமான கேள்வி..

நாளைப்போவான் said...

நல்ல வரிகள்.... :-)

Madumitha said...

தோல்வி குறித்த
ஞானம் இல்லாதது
கூட வெற்றிதானோ?

இராமசாமி கண்ணண் said...

யதார்த்தம்

காமராஜ் said...

நிதர்சனம்.

கிடைப்பதில் நிறையும் பாத்திரம்.
கோடுகள்,வரப்புகள்,எல்லைகள்...... உள்ளிருந்து ஆடும் ஆட்டம்.

'ஒரு கேள்வி'

இப்படி ஒரு வீதி நாடகம் உண்டு.
வீதி நாடக ஜாம்பவான் பிரளயனின்
ஆக்கம்.அதில் வரும் கேள்விகளின்
நீட்சி இது உங்கள் கவிதை. அழகு பத்மா.

சே.குமார் said...

Nalla kavithai....
romba nalla irukku.

வினோ said...

நல்ல கேள்வி.. நீங்க முதல் வரில சொன்ன மாதிரி அவள் London போறாளோ ? அது தான் சொல்றாங்களோ...

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா இருக்குங்க.

விந்தைமனிதன் said...

தெரியலியே!!!

ஹேமா said...

இதுதான் அதிஸ்டம் அல்லது விதி என்பதோ பத்மா !

வானம்பாடிகள் said...

அதானே:)

Anonymous said...

இதை வெற்றி என எண்ணிவிட்டாரோ என்னவோ?

uma said...

Nalla karuthu innda kavidhill mind blooing superu padmaja

சிவா said...

ரொம்ப யதார்த்தமான நடை!

நிலா மகள் said...

பொருளாதாரம் வாழ்வாதாரமாகி விடும் போது விளையாட்டில் தோற்றவள் வாழ்வில் ஜெயித்தவளாகிறாள்... மனம் மரித்து! இந்த வெற்றியும் தோல்வியே எனலாம்.

bogan said...

ம்ஹூம்..பார்ம்ல இல்ல நீங்க...இதெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னால வாரமலர்லேயே எழுதிட்டாங்க மேடம்.போன கவிதையில் இருந்து a big come down

ஸ்ரீராம். said...

அட, உண்மைதான்...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////தன்னை விரும்பியவனை
மறுத்து ,
அந்த மாடி வீட்டுக்காரனை
மணந்து
காரில் போகும் போது
மட்டும்
வாழ்க்கையில் ஜெயித்தவள்
என
இப்பொழுது சொல்கிறார்கள் ...


அதுமட்டுமெப்படி?////////

அருமை . இதுபோன்று இன்னும் சொல்லமுடியாமல் ஊமையாகி கிடக்கிறது பலரின் உணர்வுகள் . பகிர்வுக்கு நன்றி

R.Gopi said...

மிக மிக நல்ல கேள்வி....

நிதர்சனம்... அழகான ஆட்டம்...

விளையாட்டில் தோற்ற மீனு, வாழ்க்கையில் ஜெயித்தது எப்படி என்று அழகாக விளக்கி உள்ளீர்கள்....

vasan said...

வாழ்க்கை இப்போது பொருள் ம‌ட்டுமே சார்ந்த‌து.
ம‌டி சாய்வ‌தினும்,
மாடியில் வாழ்வ‌தும்,
காதல் வைத்திருப்ப‌‌வ‌னை விட‌,
கார் வைத்திருப்ப‌வ‌னும் தான்,
க‌லியுக‌த்தின் கதாநாய‌க‌ன்க‌ள்.

sakthi said...

தன்னை விரும்பியவனை மறுத்து ,
அந்த மாடி வீட்டுக்காரனை மணந்து
காரில் போகும் போது மட்டும் வாழ்க்கையில் ஜெயித்தவள் என இப்பொழுது சொல்கிறார்கள் ...
அதுமட்டுமெப்படி?

நியாயமான கேள்வி பத்மாக்கா

விஜய் said...

பல மீனுக்கள் இருக்கிறார்கள் இவ்வுலகில் !!!

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

ராகவன் said...

அன்பு பத்மா,

ரொம்ப சாதாரணமா இருக்கு பத்மா... இத திரும்ப எழுதி பாருங்களேன்... கொஞ்சம் வேற மாதிரி...

அன்புடன்
ராகவன்

முகுந்த் அம்மா said...

அதுவரை அவளிடம் இருந்த தோற்பவள் என்ற பெயரை, லண்டண் என்ற வார்த்தை மாற்றி இருக்கும்.

அருமை பத்மா.

மோகன்ஜி said...

'மாடி வீட்டுப் பொண்ணு மீனா,கோடி வீட்டுப் பக்கம் போனா' ன்னு ஒரு பழைய சினிமா பாட்டு உண்டு.
இப்போ கொஞ்சம் மாத்தி பாடிக்க வேண்டியது தான் பத்மா!

"கேடி வீட்டுப் பொண்ணு மீனா,மாடி வீட்டுப் பக்கம் போனா"

சுந்தர்ஜி. said...

நன்கு துவங்கி ஸ்லாக் ஓவர்ஸ்ல கோட்டை விட்டுட்ட இண்டியன் டீம் மாதிரி இருக்கு பத்மா.வழக்கமான ஒங்க ஃபார்ம் இதுல இல்ல.கொஞ்சம் விட்டுப் பிடிங்க.

"உழவன்" "Uzhavan" said...

அது அப்படித்தான்... :-))
அருமை

அஹமது இர்ஷாத் said...

ம்ம்..

adhiran said...

sorry.

சின்னபாரதி said...

////தன்னை விரும்பியவனை
மறுத்து ,

இது உண்மையா? உண்மயெனில் உண்மை ...
இல்லையெனில் ? வாழ்க்கை பொய் .

இங்கே நிறைய காதலர்கள் காதலின்
நிறைவைத் தொடுவதே ! இல்லை


என்ன செய்ய .... நல்ல பதிவு (கேள்வி)

r.v.saravanan said...

நல்ல கேள்விநல்லா இருக்கு

dineshkumar said...

வணக்கம் அக்கா
//தன்னை விரும்பியவனை மறுத்து ,
அந்த மாடி வீட்டுக்காரனை மணந்து
காரில் போகும் போது மட்டும் வாழ்க்கையில் ஜெயித்தவள் என இப்பொழுது சொல்கிறார்கள் ...//

அவள் மனம் இப்பொழுதாவது சந்தோஷம் அடையுமென்று ஆவல் அனைவருக்கும்

http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_05.html

aasaisaravana said...

அருமையான வார்த்தைகள்...
http://aadaillathavarigal.blogspot.com/

இசக்கிமுத்து said...

நல்ல சிந்தனை,எங்களையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!! இத்தனை நாள் படிக்காமல் விட்டு விட்டேனே!!