Saturday, September 25, 2010

நாய்க்குடைகள் மலர்ந்த கொல்லை


மேலாக்கில்லாமல் 
வெளியே 
வரவே கூடாதென 
ராஜியை 
அம்மா திட்டியும் 
கேளாமல் ,
கண்ணாமூச்சி
விளையாடும் நேரம் ...
கருவம் வைத்து 
அந்த தனசேகர் 
அவள் கைப்பிடிக்கமுயன்றது
பிடிக்காமல்
அவளழுத அந்த 
மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க 
நாய்க் குடைகள் 
மலர்ந்து நின்றன ..
                                                              
அவளைப் போலவே !

51 comments:

சுந்தர்ஜி. said...

பருவத்தின் திகைப்பும் வனப்பும் ஒருங்கே ஒரு கவிதையின் மிகச் சுருக்கமான சொற்களில் மின்னல் போல் பளீரிட்டது பத்மா.மழைக்குப் பிந்தைய நாய்க்குடைகளை நினைவில் கொணர்ந்ததுக்கு ஒரு அப்ளாஸ்.

வினோ said...

அருமை தோழி...ஆழமான கவிதை..

காமராஜ் said...

ஒரு நிகழ்வைச்சொல்லி மொத்த சூழலையும் விவரிக்கிற அல்லது விரிக்கிற வித்தை.கருவம் = கர்வமா,கருவடமா?

பத்மா said...

ரொம்ப சந்தோஷம் சுந்தர்ஜி

நாய்க்குடைகளின் வசீகரம் மறக்க முடியுமா?

பத்மா said...

ரொம்ப நன்றி வினோ

ரிஷபன் said...

நாய்க் குடைகள்
மலர்ந்து நின்றன ..

அவளைப் போலவே

பூடகமாய் சொல்லிப் போனதாய்த் தோன்றுகிறது.

வானம்பாடிகள் said...

ம்ம். அருமைங்க பத்மா.

RVS said...

வாவ்... மலர்ந்த கவிதை... சூப்பர்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madumitha said...

எல்லாக் கவிதைகளும்
பூக்களையே
பூஜிக்கும் போது
நாய்க் குடையின்
வசீகரத்தைச் சொன்ன
உங்கள் கவிதைக்கு
ஒரு கை குலுக்கல்.
அப்படியே ராஜிக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

முடித்த விதம் நல்லா இருக்கு.

அன்பரசன் said...

வாவ் நைஸ்

யாதவன் said...

அழகான ஆழமான கவிதை

மோகன்ஜி said...

புரியாத வயதின், அதிர்வான தருணங்களின் எதிர்கொள்ளல்களை திகைப்போடு நெருடும் கவிதை. நாய்க்குடை முளைப்பது, மழைக்காலம் தரும் சோகத்தின் குறியீடோ? நன்று

விஜய் said...

C L A S S

சே.குமார் said...

வாவ்... அருமை பத்மாக்கா.

முகுந்த் அம்மா said...

அருமையான வார்த்தைகள். சூப்பர் பத்மா.

ஹேமா said...

தன்னைத் தான் முதலில் உணரும் பெண் முதல்முறை மலர்வதை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் பத்மா.

நிலா மகள் said...

கருத்தின் நுட்பமும், யாரும் சொல்லாத புது தினுசும் நல்லா இருக்கு தோழி. வசீகரம் மிக்க முதல் அன்பு நாய்க் குடையின் ஆயுள் போல் ஆகாமலிருக்கட்டும்!

dheva said...

கவிதைகளில் எப்போது கருவை விட.. சூழலும் உணர்வும்.. முக்கியம்....

You did it and made us to feel the beauty...........Lovely!

பாலா said...

wow

விந்தைமனிதன் said...

வாவ்! உணர்வுகளை மிக எளிமையாக... excellent!

ஆதிரா said...

ஹைக்கு பாணி முடிவு. மலர்ந்து மணம் வீசத்துடிக்கும் பெண்மையின் பருவம் நாய்க்குடையில். புதிய உத்தி..அருமையான கற்பனை பத்மா..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

எங்கள் வீட்டுக் கொல்லையிலும்,
நாய்க்குடைகள் முளைத்தன..
ப்ரயோஜனம்?

கவிதை சூப்பர்!!

dineshkumar said...

வணக்கம்
அக்கான்னு கூப்பிடலாமா
நாய்க்குடை மழை நின்றப்பின் களவு நடப்பதைப் பார்த்துவிட்டு இவன்தான் திருடன் எனச்சொல்லும் சமுதாயத்தை குறிவைத்த சொல்லாக நினைக்கிறேன் உண்மைதானா............

D.R.Ashok said...

பல வித வண்ணங்களை கொண்டு வரையும் ஓவியம் போல இருக்கு உங்க கவிதைகள்..

ஒரு வித திகைப்பை சில வரிகளில் உங்களால் கொடுக்கமுடிகிறது

தலைப்பே கவிதையாக பேசுகிறது

ராஜி மலர்ந்த முல்லை... (இப்படின்னு என்ன மாதிரி சின்ன பசங்க எழுதுவாங்க ;)

Anonymous said...

அழகு கவிதையோடு அதற்கான படமும்..

r.v.saravanan said...

கவிதை நன்று பத்மா

Geetha6 said...

good!

ஸ்ரீராம். said...

சொல்லாமல் சொல்லுகிறது கவிதை.

தியாவின் பேனா said...

அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்

kv said...

thana seekar sEttai paNNithakaththan enakkup padukiRathu.

வெண்ணாற்றங்கரை said...

தோழிக்கு!

வந்தேன்,கண்டேன்,மகிழ்ந்தேன்!!!!

என்னை தாங்கள் அறிவீர்கள் என நம்பும் தோழமை....

Anonymous said...

அழகு பத்மா...

R.Gopi said...

பத்மா மேடம்...

வித்தியாசமான தலைப்பு வைப்பதில் உங்களுக்கு நீங்களே நிகர்...

சிறுமி ஒருத்தி அந்தி வேளையில் அழகாய் ஆடித்திரிந்த வேளை, பருவம் எய்ததை இதை விட அழகான வார்த்தைகளால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை...

//மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க
நாய்க் குடைகள்
மலர்ந்து நின்றன ..

அவளைப் போலவே //

வாவ்... என்று வியக்க வைத்த வைர வரிகள்....

பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் பத்மா மேடம்....

vasan said...

/அவளழுத அந்த மழை நின்ற மாலையில் தான் கொல்லை முழுக்க நாய்க் குடைகள் மலர்ந்து நின்றன ../
After rain,yea, there may be rooms for mushroom, but will they blossom after the EVENING rain?

bogan said...

ஏன் நாயக் குடைகள்?செம்பருத்திப் பூவோ மற்ற மலர்களோ இல்லை?இதில் மெலிதாய் சோகம் தெரிகிறதோ ...நன்று.

ராகவன் said...

அன்பு பத்மா,

எப்படி இருக்கீங்க!

அருமையான கவிதை... ரொம்பவும் எதார்த்தமான எந்தவித மடிப்புகளும் இல்லாதது போல எனக்கு படுகிறது, ஆனால் படித்தவர்களின் பின்னூட்டங்களை படிக்கும்போது நிறைய விஷ்யங்கள் இருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள், எனக்கு தான் பத்தலைன்னு நினைக்கிறேன்.

தலைப்பு மட்டுமே போதும் எனும் அளவு... அருமை.

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

ஒருவழியா அந்த ‘கரவம்’ங்கிற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். கரவம் கட்டுதல்=விடாமல் துரத்துதல் அப்படித்தானே அர்த்தம். பள்ளிக்கூடங்களில் நொண்டிப்பிடித்து விளையாடுவதில் அதிகம் பயன்படுத்துவோம்.

இக்கவிதையில் மறைந்திருக்கும் உட்பொருளை என்னால் சரிவர உணரமுடியவில்லையென்றாலும் பின்னூட்டங்களில் மேம்போக்காக உணர்ந்தேன்.

நல்ல படைப்புங்க மேடம்...

கமலேஷ் said...

நாய்குடை என்னும் ஒற்றை வார்த்தை
நிறைய பேசுகிறது.

ரொம்ப நல்லா இருக்கு சகோதரி.

adhiran said...

getting next level.please keep on.

அப்பாவி தங்கமணி said...

அந்த பருவத்தை இதை விட அழகாய் பதிவு செய்ய இயலுமென எனக்கு தோன்றவில்லை... Simply superb asusual Padma's touch

sakthi said...

இக்கவிதையை வர்ணிக்குமளவிற்கு என்னிடம் வார்த்தை வளம் இல்லை மா

பத்மா said...

வாங்க காமராஜ் சார்
அது கருவம் தான் ..கருவம் கட்டி அடிக்கறது ..அப்படின்னு சொல்வாங்க

@ரிஷபன்
ஆம் சில விஷயங்கள் பூடகம் தானே

@வானம்பாடி
@R V S
மிக்க நன்றிங்க

@மதுமிதா
அழகு ஆராதிக்கப் பட வேண்டும் தானே

பத்மா said...

@சைவ கொத்து பரோட்டா
@அன்பரசன்
@யாதவன்

ரொம்ப நன்றி வாசித்தலுக்கும் கருத்துக்கும்

@மோகன்ஜி
இங்கு நான் சோகம் ஏதும் நினைக்க வில்லை
அப்படி தோணுகிறதா என்ன?

@விஜய்
தேங்க்ஸ்
@சே குமார்
@முகுந்தம்மா
@ஹேமா
ரொம்ப நன்றிங்க

பத்மா said...

@நிலா மகள்
வேறொரு கோணம் தோழி ..நன்றி மாறு பட்ட சிந்தனைக்கு

@தேவா
thanks deva ...for getting the feel ..am really honoured

@பாலா
@விந்தைமனிதன்
நன்றிங்க
@ஆதிரா
வாங்க தோழி.. நன்றி ரசித்ததிற்கு

@ராமமூர்த்தி சார்
:)))

பத்மா said...

@தினேஷ்
நிச்சயம் அக்கான்னு கூப்பிடலாம் ..
வித்தியாசமான கருத்து ..நன்றி

@அசோக்
உங்கள் ஊக்கமிக்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ..
ரசித்தமைக்கும் நன்றி

@படைப்பாளி
@ஆர் வி சரவணன்
@கீதா
@ஸ்ரீராம்
@தியாவின் பேனா
@கே வி (ரொம்ப குசும்பு தாங்க உங்களுக்கும் )
அனைவருக்கும் நன்றி

பத்மா said...

ஆற்றங்கரை தோழமைக்கு
முதல் வரவிற்கும் ,வாசிப்புக்கும் என் நன்றி
.
ஓடத்தை காண வந்த ஆற்றின் கரைக்கு ஆயிரம் நன்றி .
காண்பது மட்டுமல்லாமல் ,கருத்தையும் விழைகிறேன் .

பத்மா said...

@தமிழ்
ரொம்ப நன்றிங்க
@கோபி
என் ஓவ்வொரு இடுகைக்கும் நீங்கள் அளிக்கும் ஊக்கம் அளப்பரியது ..
மிக்க நன்றி நண்பர்

@வாசன்
sir ,its only a poetical notion ,not always scientific
thank you sir for your valuable comment

@bogan
நன்றி .இதில் துளி கூட சோகம் இல்லை
நாயகுடையை நான் ஒரு சந்தோஷக் காரணியாகவே பார்க்கிறேன்

பத்மா said...

@பாலாஜி
ரொம்ப கரெக்ட் ..அதே தான் நான் தான் கொஞ்சம் பேச்சு வழக்கில் கருவம்னு எழுதிட்டேனோ என்னவோ ..
புரியும்:))

@கமலேஷ்
ரொம்ப நன்றி

@ஆதிரன்
thanks a lot . i hope i am taking a progressive step,thanks to the guidance from stalwarts like you .never expected a comment ,and am extremely happy .thanks again

@அப்பாவி தங்கமணி
ரொம்ப நன்றிங்க ..ரொம்ப புகழ்ந்து சொல்றீங்க எப்பவும் ....கொஞ்சம் கூச்சமாய்.இருக்கு .
i think i have way to go ...
any ways thanks for your constant support .

@ஷக்தி மா
வாங்க நன்றி.இப்படில்லாம் பொய் சொல்ல கூடாது .சரியா?

dineshkumar said...

அக்கா
நானும் உங்கள் உலகுக்கு புதியவன் உங்களுக்கு சமயம் இருந்தால் சகோதரன் கலியுகத்தை எட்டிப்பார்த்து தாழவிழாமல் தட்டிகொடுக்கலாம் அல்லவா
அழைப்பை ஏற்று நிங்கள் கடைக்கண் பார்வை பட்டாலும் கலியுகம் பெருமைப்படும்........
http://marumlogam.blogspot.com

உயிரோடை said...

மொழி மாற்றம் தள மாற்றம் தெரிகிறது தோழி வாழ்த்துகள்