Monday, September 13, 2010

பாட்டியும், பிண்டக் காக்கையும்


மாமன் அகாலமாய் 
இறந்தஅன்று கூட 
முற்றத்தில் உருண்டு புரண்டு 
ஓலமிட்ட பாட்டியின் 
கண் வற்றி 
ஈரமில்லாமல் தான் இருந்தது 

 
உணர்வுகள் செத்த உடலாய்
நாளை போக்கிய அவள் 
தாத்தாவின் திவசமன்று 
காக்கைகளுக்கு 
பிண்டம் வைப்பதற்கு மாத்திரம்
வேறெவரையும் விடமாட்டாள் 


சோற்றை கொத்தும் காக்கையை  
வெறிக்கும் சமயம் மட்டும் 
அங்கோர்  உணர்வுக்குவியலாய் 
வேறொரு மனுஷுயாய் 
மாறிபோகும் அதிசயம் தான் 
என் பாட்டி 

49 comments:

சுந்தர்ஜி said...

பித்ருக்களுக்கு பிண்டமிடும் இந்துக்களின் வேர், உணர்வும் ஆழ்ந்த அன்பும் பொதிந்தது. காக்கைக்குப் பாட்டி வேறாரையும் பிண்டம் வைக்க எப்படி அநுமதிப்பாள்?

பத்மா said...

முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜி ..
மகிழ்ச்சி

Ashok D said...

அதிர்வலைகள்... வேறேதோ

r.v.saravanan said...

சோற்றை கொத்தும் காக்கையை வெறிக்கும் சமயம் மட்டும் அங்கோர் உணர்வுக்குவியலாய் வேறொரு மனுஷுயாய் மாறிபோகும் அதிசயம் தான் என் பாட்டி


அருமை

தமிழ் உதயம் said...

மிக மிக நுணுக்கமாய் கவனித்து கவிதையாக்கி உள்ளீர். நன்றாக உள்ளது.

Madumitha said...

தாத்தாவுக்கு தன் கையால்
சோறிட்ட ஞாபகம் வந்திருக்கலாம்.

vasu balaji said...

எவ்வளவு ஆத்மார்த்தமான படையல் அது. இந்த கவிதையைப் போலவே:)

அம்பிகா said...

\\சோற்றை கொத்தும் காக்கையை வெறிக்கும் சமயம் மட்டும் அங்கோர் உணர்வுக்குவியலாய் வேறொரு மனுஷுயாய் மாறிபோகும் அதிசயம் தான் என் பாட்டி \\
பாட்டியின் ஒட்டுமொத்த உண்ர்வும் இந்த வரிகளில்....
அருமை.

பத்மா said...

இருக்கலாம் அசோக் அண்ணேன்

பத்மா said...

@சரவணன்
@தமிழ் உதயம்
@மதுமிதா
@ வானம்பாடிகள்
@ அம்பிகா
ரொம்ப நன்றிங்க

காமராஜ் said...

ஆமாம் இந்த உணர்வுக்குவியல்
கவிதையாகி மிரட்டுகிறது. முகம் படிக்கிற கவிதை அநாயசமாக வருகிறதே.அடர்த்தியான கவிதை மேடம்.

Jerry Eshananda said...

படத்தில் இருப்பது உங்கள் ஓவியமா?

பத்மா said...

இல்லைங்க ஜெர்ரி இல்ல

'பரிவை' சே.குமார் said...

அழகியல் உணர்வோடு கவிதை ஆக்கியிருக்கிறீர்கள்...
நல்லாயிருக்கு.

Chitra said...

உணர்வு குவியலாய் ஒரு கவிதை. அருமை

ஹேமா said...

பத்மா...பாட்டிகளின் நம்பிகைகளைக் கலைக்கவேண்டாம் நாம் காக்காய்களாய் !

RVS said...

பித்ரு தேவோ பவ.. நல்லா இருந்தது..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அ.முத்து பிரகாஷ் said...

தோழர்..ஆச்சரியமூட்டும் ஆழமான அவதானிப்பு உங்களது ... புதுமைப்பித்தனின் உலகத் தரமான 'செல்லம்மாள்' காதல் கதைக்கு(படித்திருக்கின்றீர்கள் தானே) இணையான காதல் கவிதை இது; முகஸ்துதிக்காய் சொல்ல வில்லை தோழர் ... காதல் உருகி வெறிக்கிறது பாட்டியின் கண்களில் அனலாய்!!! தாத்தாவும் காக்கையும் கொடுத்து வைத்தவர்கள்!

அன்பேசிவம் said...

அருமையா இருக்குங்க மேடம்...
இப்படி நிறைய பேரை லைஃப்ல பார்திருக்கேன். எப்போது சுரத்தின்றி இருக்கும் அவர்கள் சில சமயங்களில் அதீத உணர்ச்சிவசப்பட்டவர்களாய்.....

நல்லா இருக்கு, வாழ்த்துகள்

ரமேஷ் வைத்யா said...

arumai

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க.. அந்த உணர்வுகளுக்குள் புதைந்துகிடக்கும் காதலின் வலி அளப்பறியது...

ரிஷபன் said...

என்னைக் கேட்டால் இதில் ஒரு சிறுகதையே ஒளிந்திருக்கிறது என்பேன்..

சின்னபாரதி said...

பாட்டிக்கு அரசாலும் வாய்ப்பு இருந்திருந்தால் ! தாசுமகால் தோற்றது போங்க .

தாத்தா இன்னும் இறக்கவில்லை . ஒருவேளை இறக்கலாம் ! பாட்டி இறந்த பின் .

காதலின் உன்னதம் பாட்டியும் பிண்டங்காக்கையும்

பத்மா ! வாழ்த்து(க்)கள் ...

sakthi said...

இது போன்ற கவிதை ஏற்படுத்தும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை பத்மாக்கா

Anonymous said...

உணர்வை உணர வைக்கிறது கவிதை இதற்கு வயது வரம்பு இல்லை

பத்மா said...

காமராஜ் சார் உங்களை போன்றோரிடமிருந்தெல்லாம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கு .உங்கள் அன்பின் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி

பத்மா said...

நன்றி சே குமார் சார்

பத்மா said...

@ சித்ரா
@ R V S
@ ஹேமா

ரொம்ப நன்றிங்க

பத்மா said...

@ நியோ
மிக்க நன்றி .இத்தனை பாராட்டுக்கு இது உரியது என என்னால் ஏற்றுகொள்ள இயலாதெனினும்

பத்மா said...

நன்றி
முரளி AKA ஆனந்த விகட நாயகன் :))

பத்மா said...

மிக்க நன்றி ரமேஷ் சார் ..
ரொம்பவும் பெருமையாய் இருக்கிறது

பத்மா said...

ரொம்ப நன்றி பாலாசி

பத்மா said...

@ரிஷபன் சார்
கதை சக்ரவர்த்தி நீங்கள் சொன்னால் சரி

பத்மா said...

சின்ன பாரதி
மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது ,நீங்கள் ரசித்ததில்

பத்மா said...

நன்றி சக்தி

மிக்க நன்றி தமிழ்

தினேஷ்குமார் said...

வணக்கம்

//சோற்றை கொத்தும் காக்கையை
வெறிக்கும் சமயம் மட்டும்
அங்கோர் உணர்வுக்குவியலாய்
வேறொரு மனுஷுயாய்
மாறிபோகும் அதிசயம் தான்
என் பாட்டி//
நல்ல எதார்த்தம் பாட்டிக்கு கவி கொடுத்து தாத்தாவிற்கு உயிர் கொடுத்து விட்டீர்கள் இக்கவி மூலம் சாகாவரம் பெற்றுவிட்டார் தாத்தா.........

R.Gopi said...

பல நினைவுகளை மீட்டியது இந்த பதிவு...

//சோற்றை கொத்தும் காக்கையை
வெறிக்கும் சமயம் மட்டும்
அங்கோர் உணர்வுக்குவியலாய்
வேறொரு மனுஷுயாய்
மாறிபோகும் அதிசயம் தான்
என் பாட்டி//

”மனுஷியாய்” என்றிருந்தால் நலம்...

அதிசய பாட்டியை தரிசனம் செய்தேன்.

ஸ்ரீராம். said...

இந்த உணர்வு நுண்ணியமானது. எங்கள் வீட்டில் வேறொரு ரூபத்தில் நானும் கவனித்திருக்கிறேன். உணர்வுக் கவிதை.

மோகன்ஜி said...

பித்ருக்கள் காக்கை ரூபத்தில் வந்து படித்ததை ஏற்றுக் கொள்வர் எனும் இந்துக்கள் நம்பிக்கை அந்த மூதாட்டியின் செயலில் வெளிப்படுகிறது. நாமெல்லோருமே நினைவுகளின் குவியல் தானே..நிகழ்வுகளின் ஊடே நினைவுகளை,மகிழவோ,கண்ணீர் விடவோ தேடுவது தானே வாழ்க்கை. நல்லா கவிதை சகோதரி

அன்பரசன் said...

உணர்வுகளுக்கு கவி வடிவம் தந்துள்ளீர்கள்..
அருமை.

அகநாழிகை said...

அருமை

Thenammai Lakshmanan said...

பித்ருக்கள் காக்கை ரூபத்தில் வந்து படித்ததை ஏற்றுக் கொள்வர் எனும் இந்துக்கள் நம்பிக்கை அந்த மூதாட்டியின் செயலில் வெளிப்படுகிறது. நாமெல்லோருமே நினைவுகளின் குவியல் தானே..நிகழ்வுகளின் ஊடே நினைவுகளை,மகிழவோ,கண்ணீர் விடவோ தேடுவது தானே வாழ்க்கை. நல்லா கவிதை சகோதரி
//

மோஹன் ஜி சொன்னதை வழி மொழிகிறேன் பத்மா.. கவிதை அருமை..

uma said...

This shows how much you love your grani that 2 in kavithi vadivthil hmm!!!!!very nice

சிவாஜி சங்கர் said...

akkaaa.. contact me. :)

அண்ணாமலை..!! said...

மனித மனதை நன்றாகவே வாசிக்கிறீர்கள்!

சாமக்கோடங்கி said...

பதிவு அழகு.. படம் அதை விட மிக அழகு..

Ahamed irshad said...

நல்லாயிருக்குங்க பத்மா..

ஹ ர ணி said...

உணர்வுக்குவியல் பாட்டி எனும்போது ஆயிரம் அதிர்வலைகள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அருமையான சொல்லாட்சி. நமது மண்ணின் வேர்பிடித்த பண்பாட்டை கருவறைக்குள் காக்கும் குழந்தையைப்போல காக்கும் கவிதை இது. வாழ்த்துக்கள் பத்மா. அன்புடன் உறரணி

ஹ ர ணி said...

உணர்வுக்குவியல் பாட்டி எனும்போது ஆயிரம் அதிர்வலைகள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அருமையான சொல்லாட்சி. நமது மண்ணின் வேர்பிடித்த பண்பாட்டை கருவறைக்குள் காக்கும் குழந்தையைப்போல காக்கும் கவிதை இது. வாழ்த்துக்கள் பத்மா. அன்புடன் உறரணி