மிக மிக
மெலிதான தொடுதலுக்கு
உன் விரல்கள்
ஆயத்தம் கொள்வதை
ஏனோ உன் கண்கள்
முன்னதாகவே
வெளிப்படுத்தி விடுகின்றன.
அவை ஏற்படுத்தப் போகும்
சலனங்களுக்கு
அஞ்சி
நான் சிறிது சிறிதாய்
விலகி அமரும் போது
என் கால் விரல்கள்
உன் தொடுதலுக்கு
இலக்காகின்றன .
கால்கள்
மரியாதையை மட்டுமல்ல
காதலையும் சமர்ப்பிக்கும்
இடம்தான்
என அந்த வருடல்
கற்றுத் தந்த க்ஷணத்தில்
நம் காதலும் காமமும்
ஒன்றாயின .
48 comments:
மூன்று ‘கா’வையும் மெல்லியதாய் வருடிச் செல்லும் இந்தக் கவிதை முக்’கா’லமும் சொல்லும் முழுக்கவிதை.
ச்சோ..ரொமாண்டிக்.. :)
படமும் கவிதையும் அழகு...
//கால்கள்
மரியாதையை மட்டுமல்ல
காதலையும் சமர்ப்பிக்கும்
இடம்தான் //
சூப்பர்... உங்கள் கவிதை அழகு.
நெருடிச்செல்லும்
பாதவிரல்களும்
சலனங்கள்
சங்கடமில்லாம்
சங்கமிக்கும்
காதலின்
காமச்சுவடுகள்.........
wooooooooowwwww............ என் நினைவுகளை பின்னோக்கி அழைச்சிட்டு போயிட்டீங்க பத்மா..
அடிச்சி நவுத்திட்டீங்க.. பத்மா..
கவிதையும் இதுமாதிரி சிறு சிறு க்ஷணத்தில் தான் உள்ளது :)
அருமைங்க
பத்மா...!! கால்களுக்கு கீழே உலகம்... பார்த்திருக்கிறேன். இப்போதான் காதலும்....காமமும்... பார்க்கிறேன். ம்ம் அசத்திடீங்க. எப்படி இப்படியெல்லாம்...! மெல்லிய உணர்வுகள் படிக்கும் உங்கள் மனதுக்கு வந்தனங்கள். சுனை நீரில் இளநீர் கலந்ததுப் போல் .... உங்கள் காதலில்.... காமம் கலப்பது ... அற்புதம். அவசியம் நம்மப் பக்கம் வந்துட்டுப் போங்க. விருந்து சுட சுட ரெடி.
அன்பு பத்மா,
அழகான கவிதை... கவிதையை அடுக்கியிருக்கிற விதம் ஒரு பூத்தொட்டி போல இருக்கிறது. வாழ்த்துக்கள் பத்மா...
நிறைய இதுபோல நான் கடந்த வந்த நாட்களின் மீது அமர்ந்திருந்த பறவைகள் எச்சமிட்ட விதைகளில் வளர்ந்த விருட்சங்கள், இந்த வெள்ளைக்காமம்...இருட்டில் துழாவும் போதெல்லாம் அகப்படுவது கால்களும், கால்களில் விழித்துக் கொண்டிருக்கும் கண்களும். கால்கள் கைவிரல்களாய், வருடும் மயிற்பீலிகளாய்... மூச்சுத் திணறும் கால்கள் அப்போது... கால்கள் ஐம்புலனுமாய் மாறிப்போகும்... காதலும் காமமும் வேறு வேறாய் எப்போது இருந்திருக்கிறது? எனக்குத் தெரியவில்லை...
அன்புடன்
ராகவன்
அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்
//கால்கள்
மரியாதையை மட்டுமல்ல
காதலையும் சமர்ப்பிக்கும்
இடம்தான்... //
அற்புதமான வரிகள்
கா நா பாழை..
பிடித்திருந்தது.
மிக அருமையான கவிதை
//கால்கள்
மரியாதையை மட்டுமல்ல
காதலையும் சமர்ப்பிக்கும்
இடம்தான்//
புதுமையான சிந்தனை :) Nice..
Migavaum azhagana kavidhai....azhagana kaalin padam. Kaalin varudalgalukkaga ethanai kadhlargal...aavalaai kaalai kandu perumoochu vittu kondu irupaargal!!!
"கா"
"க்கா"
"கவிதை அக்கா"
சூப்பர்.. ;-)
கண்கள் காட்டியதைக் கண்டு,
கால்களின் வருடலில் துவண்டு,
காதலும் காமமும் ஒன்றெனக்
கண்ட கவிதை, அருமை.
'கண்டவர் விண்டிலர்,
விண்டவர் கண்டிலர்"
"K" ka sangam nalla irruke yeppadi da ippadi ellam eztha thonugirathu superuuuuuuu kavithi kueen ma nee
படத்தைப் போல் மனதை வருடிச் செல்லும் கவிதை.
ரொம்ப நல்லாயிருக்கு.
காதலையும் சமர்ப்பிக்கும் இடம்தான் என ..
பிருந்தாவனில் ராதையின் காலடியில் கண்ணன் முகம் புதைத்து நிற்பதுபோல ஒரு ஓவியம்..கொள்ளை அழகு,.. இந்தக் கவிதை படித்ததும் அதைத்தான் ஹாலில் போய்ப் பார்த்தேன்.
ம்ம்ம் அருமை பத்மா..:))
romba nallarukkunga.
மென்மையாய் காமம் சொன்ன கால்கள் அருமை.
//காலும், காதலும், காமமும்,//
தலைப்பே அருமை.
கூடவே கவிதையும்.
கவிதையின் முதல் மூன்று வரிகள் க்ளாஸ்.
நல்லாருக்கு மேடம்.
C L A S S
பத்மாக்கா என்ன சொல்ல உங்க லெவலே தனிதான் அபாரம் !!!!
மென்மையான கவிதை !!!
காதல் கால்களையும்
வசீகரமாக்கி விடுகிறது
உங்கள் கவிதையைப் போல்.
அழகான முழூஉக் கவிதை.. க்ஷணம் மட்டும் கணமாயிருந்திருக்கலாம்.
காமம் கால்!
காதல் கால்!!
கிடைத்தது,
ஒரு அறை!!!
(அரை அல்ல)
@சுந்தர்ஜி
முதல் வாசிப்புக்கு நன்றி சுந்தர்ஜி ..கருத்துக்கும் கூட
@சிவாஜி
ஆமாமில்ல
@சங்கவி
நன்றி
@சே குமார்
நன்றிங்க
wow @தினேஷ்
அருமையான எதிர் கவிதை
@தமிழ்
மிக்க சந்தோஷம் ..enjoy
@அசோக்
வாங்கண்ணே
ஆமாம் .நன்றியண்ணே
@சித்ரா
தேங்க்ஸ்
கால்கள்
மரியாதையை மட்டுமல்ல
காதலையும் சமர்ப்பிக்கும்
இடம்தான்
கவிதை அருமை
ஹ்ம்ம் இனிமையான பின்னூட்டம் தமிழ் காதலன்.
உங்கள் பின்னூட்டங்களின் ரசிகையாகவே மாறிவிட்டேன்
அருமையான விளக்கம் ராகவன்
உங்கள் கவிதையை போலவே இதுவும் அழகு .நன்றி
நன்றிங்க வெட்டி பேச்சு
முதல் வருகைக்கு நன்றி
மணிஜி ஐயோ இதற்கு என்ன அர்த்தம் ?
@நர்சிம்
நல்வரவு சார்.
பிடித்ததில் மகிழ்ச்சி
@வேலு
@சிவா
@பிரசன்னா
@R V S
ரொம்ப நன்றிங்க
@வாசன்
true true
@உமா
தேங்க்ஸ் டி
@சே குமார்
@ ரிஷபன்
கண்ணனுக்கு தெரிந்திராததா உண்மை உண்மை
@தேனம்மை
நன்றிங்க
@வானம்பாடிகள்
தேங்க்ஸ் ங்க
@நிலாமதி
நன்றிங்க
@காமராஜ் சார்
நன்றி தோழர்
@அன்பரசன்
:) தேங்க்ஸ்
@விஜய்
T H A N K S
@ஷக்தி
உங்கள் புதிய கவிதையை விடவா மா?
@மதுமதி
நன்றி நன்றி
கலாப்ரியா சார் வாங்க ..
நீங்க வந்து படிப்பதே எனக்கு பெருமை
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .
மகிழ்ச்சி
@பிரியா
நன்றி மா
@ராமமூர்த்தி சார்
புரியவில்லைங்க
எத்தனை நாசூக்கு.. எத்தனை நறுவீசு..
பத்மா! அழகு! மிக அழகு!!
ரொம்ப நல்லாருக்குங்க..
romba nala iruku
Romba romba nala iruku
Post a Comment