Thursday, October 7, 2010

வால் வெட்டப்பட்ட குரங்கு


ஒரு பெருவெளியின் 
துகள்கள் 
பிறப்பும் இறப்புமாய் 
பெருக்கெடுத்து ஓடிய 
பொழுதில் 
காலத்தின் சக்கரம் சுழல
நுரையாய் பொங்கிய வெளி 
காற்றாய் மாறும் தருணம் 
சிலிர்த்து கிளம்பிய நான் 
ஓடத்தொடங்கியது .
இரவும் பகலுமிலா நேரம் 
திசை தெரியா ஓட்டம் 
முடியும் வேளை 
சிறுபுள்ளியாய் கரையும் 
நானின் முன்னே தான் 
முதல் முதலில் 
ஒரு நாயை 
பெண்டாளத் தொடங்கியது 
வால் வெட்டப் பட்ட 
குரங்கு ஒன்று .

24 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

simply nice!!!!

Ashok D said...

புணர்தலைக்கொண்டு புரிதலை.. படிப்பவன் கையில் வைத்துவிட்டீர்கள்... modern artயை போல உள்ளது கவிதையும்.. நன்று

//ஒரு பெருவெளியின்
துகள்கள்
பிறப்பும் இறப்புமாய்
பெருக்கெடுத்து ஓடிய(சிதறிய or கசிந்த)
பொழுதில் //
ஓடிய... பெருவெளியில் ஓட்டமிருக்காது.. சிதறிய or கசிந்த ... சரியாயிருக்குமா.. பத்மாஜி :)

Chitra said...

படம் கொண்டும் கவிதை கொண்டும் முத்திரை பதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்!

தினேஷ்குமார் said...

வணக்கம்
புரியா புதிராய்
புனர்ஜென்ம
வாழ்க்கை
நிகழும் என்றிருந்து
நிகழாவிடின்
மனம் ஏங்குமோ
வால் வெட்டப்பட்ட
குரங்காய் குறுகி.............

ஹேமா said...

ஏதோ மனதின் வேதனையை வரிகளில் வடித்திருக்கிறீர்கள் பத்மா.

vasu balaji said...

very good one:)

bogan said...

எனக்கு ஒண்ணுமே புரியலை என்று வெட்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பெருவெளி...துகள்கள்...வாழ் அறுந்த குரங்கு..!இது எதோ உலக இலக்கியம் என்ற வரை புரிகிறது.

Anonymous said...

கொஞ்சம் புரிய கொஞ்சம் புரிய மறுக்கிறது பத்மா... நண்பர் சொல்லியது போல் மார்டன் ஆர்ட் போன்றதொரு கவிதை....

சுந்தர்ஜி said...

வால் வெட்டப்பட்ட குரங்கு நாயைப் பெண்டாளுகிறதை நோக்கி வரும் இக்கவிதையின் பாதை கொஞ்சம் அரூபமாய்த் தெரிகிறது.

எளிமைதான் உயர்ந்ததும் கடினமாதும் பத்மா.

தமிழ்க்காதலன் said...

ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்களுக்கே இப்படி யோசிக்க முடியும். தமிழக பெண்களுக்கு இந்த அறிவு வரம். சங்க கால பெண்கள் போல் மிக ஆழ்ந்து நுணுக்கமாக "சிலேடை" எழுத தனித் திறமையும்.., நிறைந்த கற்பனையும் வேண்டும். உங்கள் எழுத்துக்கள் உங்களை இனம் காட்டுகிறது. பிரபஞ்சம் யோசிக்கும் பேராற்றல் அற்புதம். அதை மனித மனதோடு ஒப்பிட்டு வாழ்வியல் நிலையாமை பேசிய விதம் அருமை. அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ருசித்து படித்தது ஆனந்தம் தருகிறது. சித்தம் தெளிந்தவர்கள் எழுத்து இப்படித்தான்..... ம்ம்ம்.. தொடருங்கள். மகிழ்ச்சி. வரவேற்கிறேன். ( ithayasaaral.blogspot.com )

ஜெய்லானி said...

பாதி புரியுது ..!! :-))

மோகன்ஜி said...

பத்மா! பிக் பாங் தியரி,ஜுர்ராசிக் பார்க்,மற்றும் அழகான தமிழ்!
எந்த பக்கத்தில் இருந்து தொடங்கட்டும்?
ஏதோ ஒரு சொல்ல வந்த லிங்க் விடுபட்டு விட்டதோ?

ஸ்ரீராம். said...

ஹேமாவுக்கே முழுதும் புரியாத கவிதை.. அவர் சொல்வது போல வேதனையின் வெளிப்பாடாக ஒரு கவிதை எனத் தோன்றுகிறது. வசீகரிக்கும் வரிகளோடு.

sakthi said...

இக்கவிதை ஏற்படுத்திய பாதிப்பு தனை வார்த்தைகளால் வடிக்க இயலவில்லை
பத்மாக்கா

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு..

காமராஜ் said...

மூன்று நாட்கள் வலைப்பக்கம் வரமுடில.முதலில் வருகைப்பதிவேட்டில் ஆஜர்.

விஜய் said...

கலியுகக்கவிதையா ?

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

க.பாலாசி said...

மேடம் தமிழ்க் காதலன் பின்னூட்டம் உங்களின் எழுத்துயரத்தை எடுத்தியம்புகிறது... என்னால் இவ்வரிய படைப்பை புரிந்துக்கொள்ள முடியவில்லை.

உயிரோடை said...

கவிதையின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் இடையில் ஏதோ நெருடல் இருக்கு அவசரமா எழுதிட்டீங்களா பத்மா

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்த சிந்தனையின் கரு கவிதையில்..!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஓண்ணும் புரியலே!

sigamani said...

very nice padma

மே. இசக்கிமுத்து said...

கருத்து சொல்ல முடியவில்லை,ஏதோ ஒன்றால் தடுககப்படுகிறது மனசு!

ராகவன் said...

அசோக்கின் புரிதலுடன் என் புரிதல் ஒத்துப் போகிறது... என்று நினைக்கிறேன்... நல்லாயிருக்கு... இது எளிமையாவும் தான் இருக்கு.... இந்த கவிதை போலவே ஒரு மாடர்ன் ஆர்ட் நான் பாத்திருக்கேன்... தண்டபாணியோ அல்லது தாமோதரனோ ஞாபகம் இல்லை... என்னுடைய பழைய அலுவலகத்தின் நிர்வாக இயக்குனரின் முகப்பில் இருக்கும்...

அன்புடன்
ராகவன்