Sunday, September 5, 2010

தேடும் தேடல்


யாராவது யாரையோ போல் தான்
இருந்துவிடுகிறார்கள் .
கண்ணோ ,மூக்கோ,நடையோ,
சாயலோ,பெயரோ,யாரையாவது ஒத்ததாக ..


யாரிலோ யாரையோ காணும் மனம்
யாரைத் தேடுகிறது யாரிலோ?


யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....


யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம்
இருக்க வேண்டும்
என ஆசை கொண்டு
யாரிலாவது யாரையோ தேடுகிறேன் ..

67 comments:

ny said...

//யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம்//

longing :)

காமராஜ் said...

தேடல் சுவாரஸ்யமானது.தேடல் படிப்பினையாவது.தேடல் இயக்கமாவது.தேடல் ஆர்வமும் சுகமும் ஆனது தேடுங்கள்.

கவிதை ரொம்ப யோசிக்கச்சொல்லுகிறது.அதான் இப்டி.நல்லாருக்குங்க பத்மா.

சைவகொத்துப்பரோட்டா said...

விசு படம், பார்த்த மாதிரியே இருக்கு :))
ஆனாலும் இந்த தேடல் நல்லா இருக்கு.

dheva said...

பத்மா....@ தேடலின் உச்சத்தில் எல்லோரும் தேடுவது தொலைத்து விட்ட உண்மையை....!

vinthaimanithan said...

நான் எப்போதுமே நானாக இருப்பதில்லை... எல்லோருக்குமே யாரோ ஒருவரைப் போலத்தான். பல 'யாரோ ஒருவர்'கள் சேர்ந்துதான் 'நானா?'

கேள்விகளை அடுக்கிச் சென்றுவிட்டீர்கள்!

vasu balaji said...

:). நல்ல தேடல். தேடாதவர்களையும் தேடச் சொல்லும்.

கிருத்திகன் said...

//யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....// யதார்த்த வார்த்தைகள் தோழி

தமிழ் உதயம் said...

யாரோ என்கிற தேடல் குறித்து வந்த கவிதை அற்புதமாக உள்ளது.

Anonymous said...

தெளிவாய் ஒரு தேடல் பத்மா...

விஜய் said...

யாரோ அது யாரோ

வித்தியாசமாக இருக்கிறது சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

ரிஷபன் said...

யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....

வாஸ்தவம். தேடல் இருக்கும்வரை நாம் ஜீவித்திருக்கலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தேடல் அற்புதம்!!

க ரா said...

:) அருமையான தேடல் :)

sakthi said...

யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம் இருக்க வேண்டும்என ஆசை கொண்டுயாரிலாவது யாரையோ தேடுகிறேன் .

தேடல் சுகம்
வரிகளை ரசித்தேன்!!!

Ashok D said...

நான் கூட கடன் வாங்கிட்டு போன ஃப்ரெண்ட தேடிட்டுதான் இருக்கேன்.. சிக்கமாட்றாங்க...

தேடல் அழகு.... நானும் இதுமாதிரிதாங்க... ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்தேன்... இப்ப குணமாயிட்டேங்க :)

அன்பரசன் said...

நல்ல தேடல்...

RVS said...

யாரோ.. யார் யாரோ... யார் நெஞ்சினில் தான் யாரோ... என்று ஒரு திரைப் பாடல் ஞாபகம் வந்தது. நல்ல தேடல் கவிதை.


அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

மிக மிக பிரமாதமான ஒரு தேடல் இது பத்மா மேடம்....

யாரோ யார் யாரோ... யாரோடு யாரோ... விடை சொல்பவர் தான் யாரோ.... (இது ஒரு சினிமா பாடல்).

//யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம் இருக்க வேண்டும்என ஆசை கொண்டுயாரிலாவது யாரையோ தேடுகிறேன்//

அவருக்காவது அவராக இருக்கும் சாத்தியம் இருக்கும் என்று ஆசை கொண்டு அவராவது தேடி வரட்டும்...

சிவாஜி சங்கர் said...

நல்லாஇருக்கு அக்கா......! :)

இன்றைய கவிதை said...

யாரோவாக இன்று முதன்முதலாய் உங்கள் பதிவை படிக்கிறேன் , நல்ல தேடல்

சில சமயங்களில் நாமே நமக்கு யாரோவாகிவிடுகிறோம்

தொடர்ந்து தேடுங்கள்

நன்றி பத்மா

ஜேகே

"உழவன்" "Uzhavan" said...

நல்ல தேடல் :-)

Ahamed irshad said...

தமிழரசி said...
தெளிவாய் ஒரு தேடல் பத்மா...///

Repeeeeeeeeeet..

க.பாலாசி said...

இந்த ஆசை எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.. தேடலில்தானே அத்தனை இனிமைகளும் கொட்டிக்கிடக்கின்றன.

r.v.saravanan said...

யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....

கவிதை தேடல் அருமை

ஜெய்லானி said...

//யாரிலோ யாரையோ காணும் மனம்யாரைத் தேடுகிறது யாரிலோ? //

ரசித்த வரிகள் சூப்பர்..!!

க. சீ. சிவக்குமார் said...

EVANOo oruvan vaasikkirAAN...INGKIRUNTTHU NAAN YAASIKKIKKIrEAN ENtRU SPELLING MISTAKE UTAN PAATI SWARNALATTHA desiya PARISU PETRATHU NJAAPAKAM VANTHATHU. -SIVAKUMAR.

Chitra said...

யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....


.....ம்ம்ம்ம்.....

ரமேஷ் வைத்யா said...

யார் யார் யார் இவர் யாரோ ஊர் பேர்தான் தெரியாதோ

பத்மா அக்கா இது oru சினிமா பாடல்

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப யோசிக்கச் சொல்லுகிறது. ஆனாலும் இந்த தேடல் நல்லா இருக்கு.

சுந்தர்ஜி said...

உங்களில் பிறர் தேடுவது- பிறரில் நீங்கள் தேடுவது- அடைந்தும் தவற விட்டதையோ அல்லது கிடைக்காமலேயோ போனதையோதான்.நல்ல கண்ணாமூச்சி பத்மா இது.

logu.. said...

Rmba nallarukkunga.

உயிரோடை said...

நல்லா இருக்கே

bogan said...

கிரேட்.இன்னும் சற்று பெரிய கவிதைகள் எழுதினால் என்ன என்று கேட்க தோன்றியது.அதுவே இக் கவிதையின் வெற்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல தேடல் நல்ல கவிதை

சுந்தரா said...

//யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம் இருக்க வேண்டும்
என ஆசை கொண்டு
யாரிலாவது யாரையோ தேடுகிறேன்...//

யோசிக்கவைத்த வரிகள்.

கவிதை அருமை பத்மா.

kalapria said...

யார் கனவில் நடமாடும் நிழல்கள் நாம்... என்கிற மௌனியின் வரிகளை நினைவு படுத்துகிறது.. ஒருமுழுமையான கவிதைக்காக என் வாழ்த்துக்கள்.

பாலா said...

யாரது?

சுந்தர்ஜி said...

”எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?”என்பதுதான் மௌனியின் வரிகள்.மௌனியை நினைவுபடுத்திய வரிகளுக்கும் கலாப்ரியாவுக்கும் நன்றிகள்.

சௌந்தர் said...

யாரிலாவது யாரையோ தேடுகிறேன் ..
எல்லோறோம் இப்படி தேடுகிறார்கள் :)

Anonymous said...

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்..

இந்தக் கவிதையைப் போலவே!

பத்மா said...

@kartin

ya the longing remains

பத்மா said...

நன்றி காமராஜ் சார் ..தேடலாம்

@சைவகொத்து பரோட்டா :)) நன்றி

@தேவா உண்மை உண்மை

@விந்தை மனிதன் விடைகளைத் தான் தேட வேண்டும்

பத்மா said...

@வானம்பாடிகள் ..நன்றி சார்

@க்ருத்திகன் நன்றி தோழர்

@வாங்க தமிழ் உதயம் ..ரொம்ப நாளாச்சு

@தமிழ் நன்றிமா

பத்மா said...

@விஜய் ரொம்ப நன்றிங்க

@ரிஷபன் you got it sir

@ராமமூர்த்தி நன்றி சார்

நன்றி நன்றி ராமசாமி :)

பத்மா said...

@ஷக்தி வாங்கம்மா ..ரொம்ப நன்றி மா

@அசோக் அண்ணா அதற்கு என்ன மருந்தாம் ?

@அன்பரசன் ரொம்ப நன்றிங்க

@R V S வாங்க சார் நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

பத்மா said...

@ கோபி

வாங்க சார் ..நான் எழுதியதை இத்தனை விவரித்து எழுதுவது மிக்க சந்தோஷமாக உள்ளது .
நன்றி

பத்மா said...

@சிவாஜி
நல்லா இருக்கீங்களா சிவா? நன்றி


@இன்றைய கவிதை
வாங்க வாங்க ..முதல் வருகை சந்தோஷம்..கருத்திற்கு நன்றி

@உழவன்
@இர்ஷாத்
@பாலாசி
@சரவணன்

ரொம்ப நன்றிங்க

பத்மா said...

@கதிர் சார்
@ஜெய்லானி
நன்றிங்க


@ சிவகுமார் சார் .
என்ன சொல்றீங்கன்னு புரில சார்

@சித்ரா
ம்ம்ம் தான் :))

பத்மா said...

வாங்க ரமேஷ் வைத்யா சார்
உங்களுக்கும் அக்காவா? :))
வருகைக்கு நன்றி

பத்மா said...

நன்றி சே குமார்

@சுந்தர்ஜி ..
எதையோ தேட தோணுதே ?
தேடலாய் இருக்க ஏங்குதே?
இதுவும் கண்ணாமூச்சியா

@லோகு நன்றிங்க

@உயிரோடை நன்றிங்க

பத்மா said...

@போகன்
முதன் முதலாய் உங்களிடமிருந்து ஷொட்டு..
முளைத்தன சிறகுகள் ..
நன்றி நன்றி

பத்மா said...

@அப்பாவி தங்கமணி

@சுந்தரா

ரொம்ப நன்றிங்க

பத்மா said...

@கலாப்ரியா சார்

உங்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற நிச்சயம் கொடுத்து வைத்திருக்கணும்..மிக்க நன்றிங்க

பத்மா said...

@பாலா

யாரது? தெரிலையே :))

சௌக்கியமா தம்பி ?

பத்மா said...

நன்றி ராதை

ஸ்ரீராம். said...

ஆழ் மனதில் மூழ்க முடிந்தால் யாரில் யாரைக் காண்கிறோம் என்று தெரிந்து விடும்...!

சின்னபாரதி said...

இன்னும் கொஞ்சம் எட்டினால் ரசவாதம் கவிதையிலேயே கற்றுக்கொடுப்பீர்கள் போல இருக்கு .

எதிர்பார்ப்புகள் தொடரும்....


நன்றி ஹேமாவிற்கு (வலைத்தொடர்புக்கு )

சின்னபாரதி said...

பத்மா ...

நீங்கள் வெளியிட்டுள்ள படம் ., புகைப்படமா ?

(சும்மா தமாசு)கொவிச்சுக்காதீங்க...

கமலேஷ் said...

ம்ம்..பெரும் தேடல்.

kalapria said...

ஆம் சுந்தர் ஜி, ”எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்...”என்பதே சரியானது... இந்த உந்துதலில் நான் எழுதிய ஒரு கவிதையும் அதுவும் சற்றுக் குழம்பிவிட்டது...

....நடமாடும் நிழல்கள்
------------------
பனிக்கரடியின் கனவில் உலவும்
பேராசை உனக்கு
.... .... ....
வெட்கமின்றி
கரிச் சிசுவின் கனவுகளில்
புகுந்து விடாதே

உன் அனுபவ அழுக்கு படிந்த
கால்களுடன்
வெளியேயே இரு

கனவும் கவிதையும்
பிழைத்துப் போகட்டும்.

Ravindran Arunachalam said...

இந்த தேடலில் சுவாரசியம் இருக்கிறது . இதில் உங்களையே நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பமும் வரலாம்

Ashok D said...

கவிஞர் Kalapria

அருமையான கவிதை :)

நிலாமகள் said...

மரம் கொத்திகளுக்கு மரங்கள் இருக்கிறபடியும், மீன் கொத்திகளுக்கு மீன்கள் இருக்கிறபடியும் ஆன நியதியை இயற்கை இன்னும் அனுசரித்துத் தான் வருகிறது... ஆகவே , தேடினால் கண்டடைவோம்!

kalapria said...

அய்யய்யோ மறுபடியும் தவறு...
கருச் சிசுவின்
கனவுக்குள் புகுந்து விடாதே..

என்று இருக்க வேண்டும்..

தினேஷ்குமார் said...

வணக்கம்
//யாரிலோ யாரையோ காணும் மனம்
யாரைத் தேடுகிறது யாரிலோ?//

கருத்துள்ள வரிகள்
காலம் நம்மை
கடந்தாலும்
நினைவுகள் கடப்பதில்லை
நம் நிழல் போல..........

uma said...

finding someone!!!!!!!romab nalla search

கமலேஷ் said...

தேடலும் கவிதையும் ரொம்ப நல்லா இருக்குங்க..