Saturday, June 26, 2010

காகிதக் கப்பல்

மழையின் ஈவாய்
என் வாசலில் பெருகும் சிறு நதியில்
எப்போதும் என் காகித கப்பலை
உன்னை நோக்கியே செலுத்துகின்றேன்
கவிழாமல் அது உன்னை சேரும் போது
என் பிரியச் சுமை உன்னை அடையக்கூடும்
அச்சுமை தாங்காது
உடன் என்னிடம் சேர்க்க
நீயும் ஒரு கப்பலை என்னை நோக்கி செலுத்தலாம்
பின் ஒரு நாள் பெய்யக்கூடிய மழையில்
பெருக்கெடுக்க இருக்கும் நீரின் நடுவே
எப்போதோ வரப்போகும் உன் கப்பலுக்காக
காத்து காத்து
வாசலிலேயே உறைகிறேன் நான்
வான் பொய்க்காது
காதலும் கூட !

31 comments:

Chitra said...

வான் பொய்க்காது
காதலும் கூட !

...Thats sweet! :-)

Madumitha said...

நிச்சயம் வந்து சேரும்
அந்த துணை கப்பல்.
வான் பொய்த்தாலும்
பொய்ப்பதில்லை
காதல்.

பாலா said...

அருமைக்கா .. அழகும் கூட

கே. பி. ஜனா... said...

மழை நீர் மாதிரி அழகாய் இந்தக் கவிதை!--கே.பி.ஜனா

adhiran said...

what padma, papper boat - thodar kavithaikalaa?!

vaazhththukal.

:-)

சிவாஜி சங்கர் said...

வாவ்.......... :)

ஸ்ரீராம். said...

வான் பொய்க்காது
காதலும் கூட //

நம்பிக்கையும்....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Nice ..

தமிழ் உதயம் said...

அற்புதம்.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க காத்துக்காத்து வாசலில் உறையும் ஏக்கமும், பொய்த்துவிடாது என்ற காதலும். கப்பல் காகிதமாயினும் பிரியச்சுமை அதனுள் பயணிக்கும்பொழுது அதன் வலிமைக்கு அளவில்லை...கவிதையும்....

சுந்தர்ஜி said...

மழையின் ஈவு-நல்ல ப்ரயோகம்.

காத்திருக்கும் காதலும் வானும் பொய்க்காதிருக்கட்டும்.ததாஸ்து தேவதைகள் அக்ஷதைகள் தூவட்டும்.

நெருக்கமான உணர்வு சொல்லும் கவிதை.அற்புதம் பத்மா.

Swengnr said...

கவிதை அருமை!

அண்ணாமலை..!! said...

அருமையான காதல்கவிதை!
வான் பொய்க்காது ..!
காதலும்..!
சிறப்பு!

r.v.saravanan said...

வான் பொய்க்காது
காதலும் கூட !


கப்பல் வருவதும் கூட

அருமை

அம்பிகா said...

\\வான் பொய்க்காது
காதலும் கூட \\
நிஜம் தான்.
அருமை..!

Katz said...

இன்னிக்கு கப்பல் கப்பல்லா செஞ்சு விடறீங்க

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு தோழி..வாழ்த்துக்கள்..

AkashSankar said...

நல்ல கவிதை...ரசித்தேன்...

ஜெய்லானி said...

நல்ல கவிதை

ரிஷபன் said...

பின் ஒரு நாள் பெய்யக்கூடிய மழையில்
பெருக்கெடுக்க இருக்கும் நீரின் நடுவே
எப்போதோ வரப்போகும் உன் கப்பலுக்காக
இந்த நம்பிக்கை வீண் போகாது..

அன்பேசிவம் said...

பத்மா மேடம்,
உஙளுக்கும் எனக்கும் இப்ப ஒரு ஒத்துமை. முதலில் ஸ்பார்க்ஸ், இப்போ இது கண்டுபிடிங்க?

Prasanna said...

வெளியிலும் மழை :) Good Timing

ஈரோடு கதிர் said...

||எப்போதோ வரப்போகும் உன் கப்பலுக்காக||

யதார்த்தம்

muthu thangapandian said...

arumai..

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பத்மா.

அன்பரசன் said...

கலக்கல் கவிதை.

தக்குடு said...

soooooo sweeeeet!

உயிரோடை said...

மீண்டும் காகித கப்பல். நவீன கவிதை எழுதுவோர் வரிசையில் சேர்ந்துடீங்க வாழ்த்துகள்

Ashok D said...

என்ன ஒரே கப்பல் கவிதையா இருக்கு... அங்கயும் மழையா?

அருமையா இருக்குங்க.. காகிதக் கப்பல்

குட்டிப்பையா|Kutipaiya said...

வான் பொய்க்காது
காதலும் கூட !
superb!!

bogan said...

வாசலிலேயே உறைந்ததோடு நிறுத்தி இருக்கலாமோ