Tuesday, July 23, 2013

கடனாற்றல்

சாப்பிட்டு,துடைத்து,
மறு நாள் சமையலுக்கு கோலமும் போட்டுவிட்டு,
ஒற்றை விளக்கெறியும் சமையலறையில்,
அணைக்க மறந்த ட்ரான்ஸிஸ்டரின்
தனிமைப் பாடல்களைப் போல்
ஏதோ முணகுது மனம்.

நீர் குடிக்க வந்து
தனக்குப் பிடித்த பாடல் ஒலிக்க
மெய் மறந்து நிற்பது போல்
என் முணுமுணுப்பை ரசிக்கிறாய் நீ.

நீரருந்தியவுடன் பாடல் மறந்து
சென்றுவிடுவாய் என
அந்த ரேடியோவைப் போல்
எனக்கும் தெரிந்து தான் இருக்கிறது.
அணைக்கும் வரை ஆற்றுவது தானே கடன்!

1 comment:

இராய செல்லப்பா said...

எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு நிறைவேற்றிவைக்கும் துணைவனுக்காக ஒவ்வொரு பெண்ணும் ஏங்கிக்கொண்டிருப்பதை அருமையாக வெளிப்படுத்தினீர்கள். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.