Tuesday, June 11, 2013

மரங்கீழ் மிழற்றல்



உதிர் மலர் மிதிக்க
அஞ்சு மனம்
காமத்தீயில் காற்றென ஆடும்

எரி தழலென தகிக்கும்
ஆடை கிழித்து
பெருமழை சேற்றில் வீழும் .

அடி மரம் கொய்யும்
பேர் மூச்சு
அடங்காதலை  பாய்ந்து கொல்லும்.

சீறி எழும் உள்மூச்சு
ஓர்  உன்மத்த
நிலை நோக்கித் தள்ளும்.

இலை  அடர்ந்த மரங்கீழ்
ஓருரு  மட்டும்
அவ்வப்போது  மிழற்றி மாயும்

புத்தம் சரணம் கச்சாமி !

5 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

rajasundararajan said...

என்னா ஏமாற்று! மொட்டை மரத்தைப் படம் போட்டுவிட்டு //இலை அடர்ந்த மரம்//???

'அத்து' சாரியை வருமா ஆதா?

பால கணேஷ் said...

மிழற்றல் வெகு ஜோர்! மிக ரசித்தேன்!

rajasundararajan said...

யசோதரையின் பார்வைக் கோணத்தில் இந்தக் கவிதை அர்த்தமாகிறது.

N Suresh said...

புதிதான பதிவு...

நல்வாழ்த்துக்கள்...