Wednesday, April 4, 2012

சிலுவை

என் சிலுவையில்
ஆணி அறையும் சத்தத்திற்கு
பறக்க ஏதுவாய்
பறவைகள் காத்திருக்கின்றன .

என் வழியும் குருதி
சொல்லாதவொன்றை
உடன் புரிந்து கொள்கிறது
காற்று

பசிக்கும் வயிற்றை நிரப்புமுன்
என் மரணம் காண
வாதையுருகின்றன மாக்கள் .

சுமந்த வடுவின்
பொருக்கு
என்றும் உதிராகாயமாகி
கொத்துகின்றன காக்கைகள் .

தந்தையே
சுமந்து, நடந்து,,காத்து, நின்று 
என் கால்கள் இற்றுவிட்டன .

என்னை உடன்
சவுக்கடித்துக் கொல்,
இல்லை இச் சிலுவையையாவது
சுக்கு நூறாக்கி விடு 

திங்களன்று( 2/04/2012) உயிரோசையில் வெளியானது

2 comments:

Unknown said...

// சுமந்த வடுவின்
பொருக்கு
என்றும் உதிராகாயமாக
கொத்துகின்றன காக்கைகள்..//

வலி பரவுகிறது எண்ணத்தில்.

ஹ ர ணி said...

வலி பரவும் கவிதை. இருப்பினும் யுகங்கள்தோறும் இதுதானே...

வாதையுறுகிறது... என்பதுதான் சரி. உறுதல்தான் உருதல் அல்ல. தொடர்பணியோட்டம். விரைவில் தொடர்ந்து பதிவு படிக்கவருவேன்.