Sunday, September 19, 2010

நினைவலைகள்


மறக்கவியலா 
பள்ளி நாட்கள் 
என தலைப்பிட்டு 
அடித்த லூட்டியும் 
வாங்கிய அடியும் 
மகிழ்ந்த நட்பும் 
என பலதும் 
எழுத முயல்கையில் 
"என் பையன் " என் பையன் "
என 
பிணவூர்தியின் பின் 
கதறிக் கொண்டு 
ஒரு தந்தை போன 
முதன்முதலில் 
கண்ட ஒரு சிறுவனின் 
இறுதியூர்வலம்
நினைவின் முன் வந்து 
நிற்கிறது !

39 comments:

dheva said...

பத்மா....வலிக்குதுங்க.. நிஜமவே.........

வாழ்க்கையில் நடந்தேறியிருக்கும் ஓராயிரம் நிகழ்வுகளில் ஏதோ சில இது போல் நிகழ்வுகள் நெஞ்சின் ஓரத்தில்.. எப்போது மாறாத வடுக்களாய்...

ரொம்ப உள்வாங்கி படித்தேன்.... வலி...என்னவோ உண்மை..!

sakthi said...

ஏனோ மிகவும் வேதனைப்படுத்தின் வரிகள்!!!

அன்பரசன் said...

உணர்வுப்பூர்வமான வரிகள்.

பாலா said...

கவிதை காட்சியாய் விரியும் போது கலவரத்தின் போது நிகளும் சில வன்முறையில் எதிர்பாராமல் முகத்தில் தெறிக்கும் எவனோ ஒருவனின் குருதி பிசையும் வலி எவ்வளவோ அவ்வளவு

Ahamed irshad said...

வரிகள் வலி.

விஜய் said...

வலிக்கும் நோஸ்டால்ஜிக் நினைவுகள்

விஜய்

காமராஜ் said...

தந்திக்கம்பிகளிலோ,இல்லை மூங்கில் துளைகளில் இருந்தோ,குழலில்,பானையில்,சீழ்கையொலியில்,வாய்ப்பாட்டில் வகை வகையாய் வந்து வருடிக்கொடுக்கும்.

இருந்தும் அந்த ஒற்றை ட் ரம்மின்,ஒற்றை 'டம்' மிகப்பெரும் அதிர்வலையை நெடுநாளைக்கு
ஓசை குறையாமல் வைத்திருக்கும் அது போலொரு குட்டி அதிர்வு இந்த கவிதை

காமராஜ் said...

பத்மா மேடம் பழைய்ய டெம்ப்லேட் நல்லாத்தானே இருந்தது ?.

மோகன்ஜி said...

சிறு பிராயத்தில் எதிர் கொண்ட மரண நிகழ்வுகளின் அதிர்ச்சியும் தாக்கமும், கடைசிவரை மாந்தர்க்கு மறையாது. இந்த உளவியல் உண்மையை உங்கள் கவிதை வெளிப்படுத்துகிறது. கனமான கவிதை பத்மா அவர்களே!

தினேஷ்குமார் said...

இமை மூடா நேரம்
தகதகக்கும் தீச்சுடர்
இமை மறந்து
விழியை தாக்கிய
வலிகள்..........

vasu balaji said...

போச்சுடா:(. முதல் பாதி எதிர்பார்ப்பை கடைசிப்பாதி புரட்டிப் போடுது.

முனியாண்டி பெ. said...

உணர்வுபூர்வமான வரிகள்

தமிழ் உதயம் said...

மகிழ்வோடு வலி என்று எல்லாம் கலந்த ஞாபகங்கள்.

சுந்தரா said...

இப்படித்தான் சில நினைவுகள்...எளிதில் அகலாமல் மனதை உலுக்கிவைக்கும்.

அன்பேசிவம் said...

ஏறக்குறைய எனக்கும் இப்படியொரு அனுபவம் உண்டு, ஏற்கனவே அதைப்பற்றி எழுதியுமிருக்கிறேன். பால்யம் என்றாலும் மரணம் என்றாலும் உடனடியாய் நினைவிற்கு வருவது இரண்டாவது படிக்கும்போதே இறந்துபோன நண்பனும் அவன் விரும்பிய பீப்பீப்பூவும்தான். :-(

உயிரோடை said...

ம்ம் க‌விதை ந‌ன்று

சைவகொத்துப்பரோட்டா said...

ஏன் இந்த சோகம்.

bogan said...

உணர்வு சரி.வழக்கம் போல இன்னும் கொஞ்சம் எடிட் செய்யணுமோ என்று தோன்றியது.

Anonymous said...

en thangai magan irantha podhu nangal unarantha vali padma padikum podhey udal nadungugiradhu kangal kalanga....

க.பாலாசி said...

என்ன சொல்றது சின்ன வயசுல என் மாமன் தனக்கு பிறந்ததை இழந்துவிட்டு கதறியது கண்முன் வருகிறது... யாராயிருந்தாலும் மனதை நொடியேனும் கரைக்கத்தானே செய்யும் இந்த மாதிரியான துயரங்கள்,பிரிவுகள்...

"உழவன்" "Uzhavan" said...

ப்ச் :-(

callezee said...

you proved u are a real valli

r.v.saravanan said...

கவிதை வரிகள் அல்ல அல்ல வலிகள்

குட்டிப்பையா|Kutipaiya said...

தலையில் அடிக்கும் யதார்த்தம்!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உணர்வுப்பூர்வமான வரிகள் பத்மா....padma's touch in every word

வினோ said...

வலி....

சிவாஜி சங்கர் said...

No words to u kaa........

சுந்தர்ஜி said...

கவிதை சொன்ன வேதனை தொட்டது என்றாலும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாமோ பத்மா?

Thenammai Lakshmanan said...

ஐயோ கொடுமையே. என்ன பத்மா இது..

ரிஷபன் said...

மறக்க நினைக்கிற விஷயங்கள்தான் எப்போதும் மேலெழும்பி நிற்கும் வலியைத் தந்தபடி.

Ravindran Arunachalam said...

பத்மா,
உங்கள் வரிகளைப் படிக்கும் பொழுது எனக்கு மத்ரையில் கண்ட ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது .
மதரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் . நான் கோயில் வாசலில் கண்ட காட்சி என்னவென்றால் ஒரு அம்மா தன பிள்ளையை மண்ணெண்ணெய் வாங்க ரேஷன் கடைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவன் சிறுவன்தானே விளயாட்டுப்போக்கில் மண்ணெண்ணையை கீழே கொட்டி விட்டான். அதற்கு அந்த அம்மா போட்டு அடித்த அடி . ஐயோ! அப்புறம் அவங்க சொன்ன வார்த்தைகள் " காலையில இருநது கூலி வேல செஞ்சு கெடச்ச கூலி அம்புட்டையும் ஒரே அடியா கொட்டி புட்டானே "

ஸ்ரீராம். said...

மறக்க நினைக்கின்ற காட்சிகளே நினைவுக்கு வருவது கொடுமைதான்...

ஜெயசீலன் said...

அருமையாக காட்சிப்படுத்திவிட்டீர்...
கண்டதும் கண்நோய்போல் தொற்றிக்கொள்கிறது வலி...

'பரிவை' சே.குமார் said...

Vali niraintha varikal akka.
vethanaiyai vithaiththu senra kavithai.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வரிகளால் வலிக்க வைக்க முடியுமா?
முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள், பத்மா!

நிலாமகள் said...

கண்டவுடன் பதைத்து காலகாலத்துக்கும் மனசோரம் உட்கார்ந்து கொள்ளும் மரணத்தின் வலிமையை என்ன சொல்வது...?

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

பத்மா said...

என் வரிகளை படித்து பின்னூட்டமிட்ட

தேவா
ஷக்தி
அன்பரசன்
பாலா
அஹமத் இர்ஷாத்
விஜய்
காமராஜ்
மோகன்ஜி
தினேஷ் குமார்
வானம்பாடிகள்
முனியாண்டி
தமிழ் உதயம்
சுந்தரா
முரளி
உயிரோடை
சைவ கொத்து பரோட்டா
போகன்
தமிழரசி
பாலாசி
உழவன்
சரவணன்
குட்டிப்பையா
அப்பாவி தங்கமணி
வினோ
சிவாஜி சங்கர்
சுந்தர்ஜி
தேனம்மை
ரிஷபன்
ரவீந்திரன்
ஸ்ரீராம்
ஜெயசீலன்
சே குமார்
ராமமூர்த்தி
நிலாமகள்

(அப்பா இம்புட்டு பேரா? )

எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க ..
தனித்தனியா நன்றி சொல்ல நினைத்தும் கொஞ்சம் உடல் நிலை காரணமாய் இயலவில்லை ..

அனைவருக்கும் ரொம்ப நன்றிங்க .

கமலேஷ் said...

வலி மிகுந்த கவிதை...