Sunday, August 22, 2010

க சீ சிவக்குமாரின் "கானல் தெரு" ஒரு வாசிப்பனுபவம்

ஒரு நாளைக்கு குறைந்தது 50  பக்கங்களாவது படிக்க வேண்டுமென்பது நிமிடத்திற்கு இத்தனை முறை நாடி துடிக்க வேண்டும் என்பது போல எழுதா விதி எனக்கு .

எத்தனை புத்தகங்கள் படித்தாலும் விமர்சன பார்வையில் படித்தால் வாசித்தலின் சுவை குறையும் என்பதால் அதில் இஷ்டமில்லை.

ஆனால் திரு க  சீ  சிவகுமாரின் "கானல் தெருவை" வாசித்த பிறகு அதனழகை பகிர வேண்டுமென்ற பேரவா ..

உலகமே ஒப்புக்கொண்ட ஒரு சிறந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துதல் அதுவும் ஒரு சாதாரண வாசகியான நான் செய்தல்  புருவங்களை உயர்த்தச்  செய்யும் .அத்தவறை புரியாமல் ,நான் ரசித்த ,என் மனதிற்கு பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ள மட்டும் முயற்சி செய்திருக்கிறேன் .

என் கன்னி முயற்சியை பொறுத்தருள்க .

தனக்கு தொடர் எழுதும் திராணியை இதை எழுதி ஆசிரியர் உணர்ந்ததாய் ஆரம்பிக்கிறது கானல் தெரு .

திரு சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பாய் "கன்னிவாடி " சிலாகிக்கப்படுகிறது எனினும்
இக்கானல்தெரு  படித்த பின் ஏற்படும் நினைவோட்டங்களும் ,பலமுறை படித்து மகிழ நிரம்பியிருக்கும் படிமங்களும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் என்பதில் மிகை இல்லை

இவ்வளவுதான்  உலகம் என கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவியும் ,இவ்வளவுதான் உலகம் என் இறுதியில் உணரும் இளைஞன் பார்த்தியும் முக்கியமாக உலா வருகின்றனர் .

கதையின் முதல் வரியிலேயே அந்த 'வளரிளம் அலைகள்'    என்ற சொற்றொடரில் மயங்கி நிற்கிறோம் .அவ்வலைகளை கற்பனையில் கண்ணுற்று களிக்கிறது மனம் .

பள்ளியில் மாணவிகள் ரோஜா மலரை டிபன் பாக்ஸில் நீரில் போட்டு சூடிக் கொள்வதும் ,
''ஏதோ ஓர் உணர்வை தேரையை போல் சுவரில் கற்களூடே பள்ளி வைத்திருக்கக்கூடும்" என்ற ஊகமும்,  ஒரு nostalgic  உணர்வை ஏற்படுத்துகிறது .

திரு சிவக்குமாரின் தனித்தன்மையான  satire  கதை  முழுவதும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கிறது .

ஸ்ட்ரைக் ஆதரவு திரட்டும் மாணவர்களை குறிக்கும் போது
"பெயிலாகிறவர்களை நம்பி தேசம் இயங்க வேண்டிய காலம் கனிந்து விட்டது "எனும் போதும்

"ஆண்டிறுதி உடற்றிறப்போட்டி" இதன் தொடர்ந்த வல்லின உச்சரிப்பு பற்களின் உறுதிக்குப் பயிற்சி " என கூறும் போதும் ,

"எல்லா வைபவங்களும் களைப்பில் தன முடிகின்றன " என்ற உண்மையை உணர்த்தும் போதும் ,

"இலக்கியத்தில் வந்த முப்பத்தெட்டு நிலவுகள் பற்றி அற்றை பகலில் பேசினார்" என கிண்டலடிக்கும் போதும்

"எவ்வளவு குறைவாக வாங்கினாலும் அதற்கு மதிப்பெண் என்ற பெயரிருப்பது ஆச்சரியம் "

"இந்த பெரு வெய்யிற் கோடையில் அரும் காதல் எப்படித்தான் வேர் பிடித்து விருட்சங்கள் ஆகின்றனவோ?"
என வியக்கும் போதும் ,

நாலணா காசை தியேட்டர் கவுண்டரில் துளைபோட ,மரங்கிறுக்க என்றே அரசு தயாரித்து வருகிறது எனும் போதும்

அந்த satire இல் உள்ள சுவையை ருசிக்காமல் இருக்க முடியுமா?

கதையினூடே கவிதை மழையும் உண்டு .

ஓரிரு வரிகள் எனினும் அவ்வரிகளின் கவிதாவனப்பு சிற்சில சொற்களை வைத்தே கிறுக்கும் என் போன்றோரை வெட்கமடையச் செய்கிறது .

ஒரு புன்னகையை "புத்தருக்கும் ,மோனாலிசாவிற்கும்   இடைப்பட்டதாய் "என வர்ணிப்பதிலாகட்டும்,

"நேசம் சில சமயம் பின்ன எண்களைப் போல் இருக்கிறது" என வியப்பதிலாகட்டும் ,

"சிலையை தவிர்த்து சிற்பியை வணங்கினான் ஒரு  பொற்கணம்"  என சிலாகிப்பதிலாகட்டும்,

"மூச்சு விடும்போதே மூச்சு விடாத  ரகசிய மௌனம் " எனும் போதும்

திணறித்தான் போகிறோம்

இறுதியில் சில வரிகள்

"வயதுகளற்ற காலம் வயதுகளை சுமத்துகிறது எதன்  மீதிலும் ,
காலத்தின் புத்திளமையோ கோள்களின் எடையோடு சிந்தனை மேல் கவிகிறது "

இச் சிந்தனை நம் மீது கவிந்து பேச்சற்றவர்களாய் போகிறோம் .

இவ்வாசிப்பனுபவத்தில் மூழ்கி இவ்வளவு தான் வாழ்க்கை என்று நாயகனுடன் நாமும் உணருங்கால் ,"காதல் என்றால் என்ன?" என்ற ஒரு பெருங்  கேள்வியோடு  மற்றொரு பக்கத்தை திறந்து வைக்கிறார்.


நான் இங்கு கானல் தெருவில் ரசித்து படித்ததையும் மகிழ்ந்து சிந்தித்ததையும்  பற்றி மட்டுமே எழுத முயன்றிருக்கிறேன் .

ஒரு நெடுங்கதையில் பலவித வாசிப்பனுபவம் கிடைத்து திளைத்ததை எனக்கு தெரிந்த அளவு பகிர்ந்துள்ளேன் .

வாய்ப்பு கிடைத்தால் வாசித்தது மகிழுங்கள் .

37 comments:

adhiran said...

good

கமலேஷ் said...

நல்ல பகிர்வு தோழி..

கொடுத்த வரிகளும் மனதை நிறைக்கிறது.

வாழ்த்துக்களும், நன்றிகளும்.

ஹேமா said...

வாசிப்பு என்பது ஒரு யாகம்.
கொடுத்து வைத்தவர் நீங்கள் பத்மா.

ரிஷபன் said...

நேரில் பார்த்தபோது அவருக்கும் எழுத்திற்கும் தொடர்பற்ற சராசரி மனிதர் போல தோற்றம். கன்னிவாடி பற்றி சிலாகித்தபோதும் எளிமை. ‘கானல் தெரு’ வாசிப்பனுபவமும் சுவை கூட்டுகிறது.

பத்மநாபன் said...

அனுபவித்து படித்ததை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்..கானல் தெரு வை விரைவில் படிக்கும் ஆர்வம் எற்பட்டுள்ளது..நன்றிகள்.

Madumitha said...

இன்னமும் படிக்க வில்லை.
சிவக்குமாரின் புன்னகைக்க
வைக்கும் எழுத்து எனக்கும்
பிடிக்கும்.
நன்றி.

மணிஜி said...

சிவாவின் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்..ஈடில்லாததும் , வீடில்லாததுமான அந்த நாய் என்று எழுதுவார்..என் இனிய நண்பரும் கூட.பகிர்வுக்கு நன்றி பத்மா

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு பத்மா.. நன்றி

Ahamed irshad said...

Thanks For Sharing Padma..Good

காமராஜ் said...

அப்பாட.. வந்தாச்சா ?
வந்ததும் ஒரு நல்ல புத்தகத்தோடே வந்திருக்கிரீர்கள்.நல்லா இருக்கு.படிக்கனும்.

பத்மா said...

thanks adhiran

பத்மா said...

ஆமாம் ஹேமா
நன்றி வருகைக்கு

பத்மா said...

ரொம்ப மகிழ்ச்சி கமலேஷ்

பத்மா said...

எல்லாரும் அப்படித்தான் கூறுகிறார்கள் ரிஷபன் சார்
வருகைக்கு நன்றியும் கூட

பத்மா said...

படியுங்கள் பத்மநாபன் .பிடிக்கும்

பத்மா said...

உங்களுக்கும் நன்றி மதுமிதா

பத்மா said...

my pleasure maniji

பத்மா said...

most welcome irshath

பத்மா said...

நன்றி தேனம்மை

பத்மா said...

வந்தாச்சு காமராஜ் சார் ..
படிங்க ரொம்ப பிடிக்கும்

பா.ராஜாராம் said...

சட்டென எழுத்தில் நல்ல முதிர்ச்சி பத்மா! வாசிப்பாக இருக்கும்.

பகிர்விற்கு நன்றி!

விஜய் said...

உங்கள் விமர்சனம் அப்புத்தகத்தை வாங்க தூண்டுகிறது சகோ

நன்றி

விஜய்

Chitra said...

welcome back!

ஆடுமாடு said...

தொடராக வந்தபோதே படித்திருக்கிறேன்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்

க.பாலாசி said...

ம்ம்ம்.... இப்டின்னு தெரிஞ்சிருந்தா படிச்சிட்டு கொடுத்திருப்பேன்... உங்களோட எழுத்திலும் மிகுந்த மாற்றம். நல்ல பகிர்வு...

butterfly Surya said...

அருமையான அறிமுகம்.

பகிர்விற்கு நன்றி பத்மா.

Priya said...

வரிகள் அனைத்தும் அருமை.
குறிப்பா //மூச்சு விடும்போதே மூச்சு விடாத ரகசிய மௌனம்//.... ரசித்தேன்!

பத்மா said...

வருகைக்கு நன்றி பா ரா சார்

நன்றி விஜய்

ரொம்ப நன்றி ஆடுமாடு சார்

பத்மா said...

நீங்க தான் வாங்கி கொடுத்தீங்கன்னு எழுத நினைச்சேன்.கடைசில விட்டு போச்சு ..
எப்போ வேணாலும் வந்து படிக்கலாம் பாலாசி

பத்மா said...

நன்றி சூர்யா

நன்றி பிரியா

பத்மா said...

thanks chitra

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..இது ஒரு புது அனுபவமா இருக்கே..இந்த மாதிரி எனக்கும் ஜெ.கேயின் ‘ஒரு மனிதன்..ஒரு வீடு..ஒரு உலகம்..’ எழுதணும் போல இருக்கு..

’.. அனுபவித்து ரசித்த வரிகள்..’படிக்கும்போதே மனதை சிலிர்ப்பூட்டுகிறது...

குட்டிப்பையா|Kutipaiya said...

நல்ல பகிர்வு..நன்றி பத்மா! :)

madrasdada@gmail.com said...

விருப்பமும் நேரமும் இருப்பின் படித்துப்பார்க்கவும்
http://madrasdada.blogspot.com/

சிங்கக்குட்டி said...

அருமையான பகிர்வு.
படிக்க நினைத்தாலும் நேரம் இல்லாமல் தவிக்கிறோம். நீங்கள் அதிஷ்டசாலி.

r.v.saravanan said...

பகிர்வுக்கு நன்றி தோழி.. நீங்கள் கொடுத்திருக்கும் வரிகளை படிக்கும் போது கானல் தெரு படிக்கும் ஆர்வம் வருகிறது

sakthi said...

பத்மா உங்கள் வாசிப்பனுபவம் கண்டு மெய்சிலிர்த்து இருக்கிறேன்

வாழ்த்துக்கள்

கண்டிப்பாக் நேரம் கிடைக்கும்போது படிக்கின்றேன்