Tuesday, August 24, 2010

கனவுகள் தடை செய்யப்பட்ட உலகு

கனவுகள் தடை செய்யப்பட்ட உலகில்
என் கனவில் நீ
என் இருப்பை அர்த்தமுள்ளதாக்கும்
நீ வரும் கனவினை காண்பதில்
என் இருப்பு இல்லாமல் போனாலும்
எனக்கு கவலை இல்லை
ஏனெனில்
கனவு காணும் மனிதர்களை கொல்லும் போது
அவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது
கொய்த தலையில்  காணும் புன்னகையில்
என் கனவுகளின் தடம் கண்டு
அவர்கள் வெறி கொள்ளும் போது
நாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக்  கொள்கிறோம்

49 comments:

dheva said...

கனவுகளை வைத்து கனவு போல ஒரு கவிதை....

உயிரோடை said...

கவிதை நன்றாக இருக்குங்க பத்மா

அன்பரசன் said...

நல்ல கவிதை

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

காற்றையும் கைது செய்ய முயற்சிக்கும் கவிதை . நல்ல இருக்கு

ஹேமா said...

கனவு காணும் மனிதர்களை கொல்லும் போது
அவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது

உண்மை பத்மா.

Chitra said...

:-) ... good one.

ஆளை கொஞ்ச நாளாக காணோம்? எப்படி இருக்கீங்க?

சே.குமார் said...

கவிதை நன்றாக இருக்குங்க.

philosophy prabhakaran said...

சாரி ஜி... இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை... Anyway வாழ்த்துக்கள்...

வானம்பாடிகள் said...

நல்லாருக்குங்க.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு பத்மா.

ஸ்ரீராம். said...

கனவுகளைத் தடை செய்யும் உலகில், கொய்த தலையில் உறைந்த புன்னகை....கொயதவர்களுக்கு இதை விடப் பெரிய தண்டனை உண்டா..
நல்ல கற்பனை. நம் மீது கோபப் படுபவர்களை அலட்சியப் படுத்துதலே அவர்களுக்கு நாம் தரும் நல்ல தண்டனை என்பது போல.

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

sakthi said...

என் கனவுகளின் தடம் கண்டு
அவர்கள் வெறி கொள்ளும் போது
நாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம்


அருமை

ரிஷபன் said...

கனவுகளுடனான வாழ்க்கையில் கனவும் மனிதரும் தவிர்க்க இயலாதவை..

adhiran said...

ok ok.......

nice template too. what happend to that oxen padma!

காமராஜ் said...

நல்லா உரு ஏத்தி.நல்லா தாயர்படுத்திக்கொண்டு களம் இறங்குகிறது பதிவுகள்.டேக் ஆஃப் ஆகியாச்சு வாழ்த்துக்கள் மேடம். கனவை ±ப்படிச்சொனாலும் சிலிர்ப்பு வருகிறது பத்மா.

r.v.saravanan said...

கனவு கவிதை நன்றாக இருக்கு

Anonymous said...

azhaga solli irukenga padma sila santhosham kanavil mattumey...

jokkiri said...

//கனவுகள் தடை செய்யப்பட்ட உலகில்
என் கனவில் நீ//

அட.... ஆரம்பமே அசத்தலா இருக்கே.... தடை செய்யப்பட்ட இடத்தில் நுழைந்த அந்த “அவர்” பாராட்டுக்குரியவர்....

//என் இருப்பை அர்த்தமுள்ளதாக்கும்
நீ வரும் கனவினை காண்பதில்
என் இருப்பு இல்லாமல் போனாலும்
எனக்கு கவலை இல்லை//

ஆஹா... திவ்யமான தமிழ்...

//கனவு காணும் மனிதர்களை கொல்லும் போது
அவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது//

அமுதம்.... வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை...

//கொய்த தலையில் காணும் புன்னகையில்
என் கனவுகளின் தடம் கண்டு
அவர்கள் வெறி கொள்ளும் போது
நாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம்//

இன்ப கனவு இனிதே தொடரட்டும்...

D.R.Ashok said...

சொன்னா நம்பமாட்டீங்க... அப்டியே கவித மாதிரியே.. இருக்குதுங்க :)

அப்பாவி தங்கமணி said...

கவிதை சூப்பர் பத்மா...எப்பவும் போல பத்மா நடையில்... ரசிக்கும் வண்ணம்

சௌந்தர் said...

கனவு காணும் மனிதர்களை கொல்லும் போது
அவர்களால் கனவினை கொல்ல முடியாமல் போய் விடுகிறது////

சரியா தான் சொல்றிங்க

Madumitha said...

மற்றொரு Inception

க. சீ. சிவக்குமார் said...

கனவில் காணும் கனவில்
உட்கனவில் வந்து புகும்
கனவின் கனவு என்னவாய் இருக்கும்.கனவுகளில் கனல்வதுதான் என்ன?------------------------

சரி பத்மா. வணக்கம். இதன் முந்தைய பதிவினைப் படித்துவிட்டு எனக்கே ‘கானல் தெரு ‘ படிக்கணும் போல ஆகிவிட்டது விருப்பம். நீங்களாவது பாலாசியாவது புத்தகத்தை வைத்திருங்கள் பத்திரமாக. என் வசம் அந்தப் புத்தகம் இல்லை.

விஜய் said...

கொய்த தலையின் புன்னகை

அருமை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

சி. கருணாகரசு said...

கனவு நல்லாயிருக்குங்க.

Sivaji Sankar said...

Simple., but not simple..

போகன் said...

இன்னும் கொஞ்சம் எடிட் செய்யணும் பத்மா

சத்ரியன் said...

//கொய்த தலையின் புன்னகை//

முரணான ...அழகிய சொல்லாடல்.

கலாநேசன் said...

நல்கனவு

பத்மா said...

முதல் வரவிற்கு மிக்க நன்றி தேவா

@உயிரோடை நன்றிங்க லாவண்யா

@அன்பரசன் ரொம்ப நன்றிங்க

@பனித்துளி தேங்க்ஸ்

பத்மா said...

@ஹேமா தேங்க்ஸ்

@சித்ரா நன்றி ..நல்லா இருக்கேன் சித்ரா நன்றி

@குமார் நன்றி

@பிரபாகரன் ஹிஹி

பத்மா said...

@வானம்பாடிகள் நன்றி நன்றி

@பா ரா சார் ..ரொம்ப நன்றிங்க

@ ஸ்ரீராம்.you got the point sriram

@சக்தி வாங்க வாங்க ..நன்றி

பத்மா said...

ஆம் ரிஷபன் ..மனிதர்களாலே கனவுகள் ...

thanks adhiran

காமராஜ் சார் வாங்க ...உருலாம் ஏத்தல...உங்கள் போன்றோரை படிப்பதால் எதோ சில கிறுக்கல்

நன்றிங்க சரவணன்

ஆமாம் தமிழரசி

பத்மா said...

@ஜோக்கிரி ..
வாங்க கோபி ..ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கீங்க ...ரொம்ப நன்றி

@அசோக்
அண்ணே ரொம்ப நாளா கிண்டல காணுமேன்னு பார்த்தேன்

@அப்பாவி தங்கமணி
நீங்க ரொம்ப encouraging type ங்க தங்கமணி thanks a lot

@சௌந்தர்
வாங்க சௌந்தர் ..
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பத்மா said...

@madhumitha do u really think so?

பத்மா said...

@ க சீ சிவகுமார்

வாங்க சார் .முந்தைய பதிவை படித்ததிற்கு நன்றி ...

நெய்வேலி புத்தக கண்காட்சியில் கிடைக்காததால் தம்பி பாலாசி ஈரோடில் இருந்து உங்கள் புத்தகங்கள் வாங்கி தந்தார் ..

இந்த பதிவிலிருந்து ஒரு வரி எடுத்து
ஒரு அருமையான கவிதையை எழுதியதிற்கு நன்றி ..
மிகவும் சந்தோஷமாக உள்ளது

பத்மா said...

@கருணாகரசு

@சிவாஜி சங்கர்

@விஜய்

@சத்ரியன்

@போகன்

@கலாநேசன்

அனைவருக்கும் மிக்க நன்றிங்க

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

கவிதை நன்றாக இருக்குங்க...
நான் பதிவுலகத்துக்கு புதியவன்..!நம்ம பக்கத்துக்கும் வந்து பாருங்க...!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

Cherry said...

So powerful...and so simple. It makes feel that I should dream unconditionally...

Best

ROY

dineshkumar said...

வணக்கம்
உயிரற்ற உடலுக்கு கனவென்னும் கவி கொடுத்து உயிர் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி
http://marumlogam.blogspot.com

ப்ரியமுடன் வசந்த் said...

//நாம் மீண்டும் நம் கனவுகளில் சந்தித்துக் கொள்கிறோம் //

ரீஜண்டா INCEPTION பாத்தீங்களா பத்து?

Siva said...

Beautiful!!! great meaning.

Siva

RVS said...

சிலபேருக்கு தலை கொய்யும் புன்னகை இருக்குங்க.... நல்லா இருந்தது...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சுந்தர்ஜி. said...

மிகச் சிறப்பான கவிதை பத்மா.

//கொய்த தலையில் காணும் புன்னகை//

அற்புதம்.கொய்யும் போதும் கனவின் இழையைப் புன்னகையில் தோய்த்த உங்கள் மென்மை மேன்மையுரட்டும்.

இப்படி ஒருமுறை அமைத்துப்பார்த்தேன் உங்கள் அனுமதியற்று.

கனவுகள்
தடை செய்யப்பட்ட உலகின்
மென் கனவில் நீ.
இருப்பைக் கிளர்த்தும்
கனவினைக் காண்பதில்
என் இருப்புத் தொலைவதிலும்
கவலை இல்லை எனக்கு.
கொய்த தலையில் காணும் புன்னகையில்
கனவுகளின் தடம் காண்பவர்கள்
வெறி கொள்கையில்
சந்தித்துக் கொள்கிறோம்
மீண்டும் நம் கனவுகளில்.
கனவு காணும் மனிதர்களைக் கொல்லும் போது
கனவினைக்
கொல்ல முடியாமல் போய் விடுகிறது.

தட்டாமல் நுழைந்தது போலவும் தோன்றுகிறது.

ஆனாலும் உங்கள் கவிதையின் வசீகரம் என்னை கிளர வைக்கிறது. என்ன செய்ய?

கோவை2தில்லி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க.

பத்மா said...

வாங்க வெற்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பத்மா said...

thanks cherry ..
:)

uma said...

nice dream padma