Tuesday, January 29, 2008

பாழும் மனம்

உன் நினைவலைகள்
அடித்து அடித்து
மனமெனும் கடல்
பொங்கித்தணியும்!
பாலைவனக் கடலென
உண்மை உரைக்க
சிறுதுளி தேடி
கண்கள் அலையும்
வேண்டா வேண்டாமென
ஒரு மனது கூற
உன் மடி நாடி
உள்ளம் விழையும்
உடைந்த இதயம் தான்
மிச்சமென உணர்ந்தும்
உன் தோள் சாய
பாழும் மனம் ஏங்கும்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசும்
கல்லான நெஞ்சம்,சொல்
என்றுதான் மாறும்?
வேறொன்றும் நினையாமல்
என் காதல் உணர
பொத்தி பொத்தி வைத்த
பூ அன்று தான் மல்ரும்.
உன் வாழ்க்கையோடை
என் எண்ணப்படகு கொள்ள
ஆண்டாண்டாய் சேமித்த
என் ஆசை தீரும்.

7 comments:

பாச மலர் / Paasa Malar said...

நேசம் கொண்ட நெஞ்சின் ஆசை தீர்ந்த கதை..அழகான வரிகள் பத்மா..

Unknown said...

நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதவும். வாழ்த்து(க்)கள்.

மே. இசக்கிமுத்து said...

அன்பின் அலைகளையும் மன அலைகளையும் அழகாக சொன்னீர்கள்!!

Roy Cherian Cherukarayil said...

Very intense ...I would say...Can you try writing the poem wiith some beats so that may be we could get this as a song....

Anonymous said...

அழகான, ஆழ்ந்த கவிதை பத்மா. தொடர்ந்து மலரட்டும் உங்கள் கவிப்பூக்கள்!

quest4gold said...

Hi
your naration makes it difficult to understand who it points too and who it addressess. This feeling so personally expressed makes the reader emotionally involved as if it is he who have written it /or he is being addressed to

Solly

Unknown said...

வணக்கம்!