அன்னை அருகில் இல்லை,
அண்ணனோ அமையவில்லை,
தங்கையின் வாழ்வுமுறையில்
தங்கிச்செல்லவும் நேரமில்லை!
தந்தை தன் உலகில்,
தம்பியோ தன் போக்கில்,
தானாய் அமைந்த
நண்பர்கள்
நிமிட நேர மாயவலை!
இதில் எப்படி நான்
எங்கிருந்தோ வந்த நீ மட்டும்
என் உணர்வும் உயிரும்
தொட வேண்டுமென நினைத்து
மருகி மருகி உடைதல் நியாயம்?
கண்ணீர் துடைக்க
ஒற்றை விரல் நீள வேண்டாம்.........
எதிர்பார்ப்பு கொல்லும் மருந்து
எங்கேயாவது இருந்தால்
மட்டும் சொல்! போதும்!
7 comments:
What a fantastic poem!
Expressees the lonliness along with the meloncholy in a beautiful way.
Feeling sadness is one of the healing processes (A book called "How to Survive a Loss of Love).
May the almighty place you among caring souls--you deserve it very much.
Again a nice poem.
I could feel the pain. Volumes of theories about transaction analysis could convince the mind logically, but the soul remains longing.
Untold sadness worsens. You found a way to transform it into words. Vent them till it drains.
எதிர்பார்ப்பு கொல்லும் மருந்து
எங்கேயாவது இருந்தால்
மட்டும் சொல்! போதும்!
அது மட்டும் உலகிலிருந்தால் எத்தனையோ வாழ்க்கைகள் வசந்தமாகியிருக்கும்.
கவிதை அருமை.
தனிமையின் குரலை உரத்துச் சொல்கிறீர்கள்.
தனிமையில் வேதனைகளும் உண்டு, சில சமயம் மகிழ்ச்சியும் உண்டு. ஆனால் தனிமையில் வேதனை மிகவும் கொடியது!! அச்சமயம் எதிர்பார்ப்புகளும் அதிகமாக வந்துவிடுவதுண்டு. என்ன செய்வது மனித மனத்தை அப்படி படைத்துவிட்டானே ஆண்டவன்!! நல்ல கவிதை!!
There is a big overtone of loneliness. It has come out very well and powerfully.
Writing it out is one thing...but if we feel heavy that we are lonely then we should find a way to stop thinking so.
Ideally all of us are lonely although we have our dear ones and friends around. Our thoughts and feelings are for ourselves.
இக் கவிதை பற்றி எனது உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமையான சொல்லாக்கம்.
இராசா (Raja_USA_75)
//
எதிர்பார்ப்பு கொல்லும் மருந்து
எங்கேயாவது இருந்தால்
மட்டும் சொல்! போதும்!
//
வரிகள் அருமை!
- வேல்முருகன் ரெங்கநாதன்
Post a Comment