Tuesday, October 30, 2007

தடுமாற்றம்

சாம்பாரில் உப்பில்லை,
சாப்பாடது வேகவில்லை,
பழங்களோ குப்பையில்..
தோல் உண்ணும் தட்டில்.....
காபிப் பொடியாக
கொதிக்குது
மிளகுத்தூள்,ஃபில்டரில்....
செய்த அநியாயம்
போதுமென,ஓடிவிட்டேன்
சமையல் அறையிலிருந்து.....

உன்னை யார்
கால நேரம் பார்க்காமல்
'உன்னை மிகவும் பிடிக்குது'
என
காதோரம் சொல்லச்சொன்னது???

9 comments:

Anonymous said...

"கால நேரம் பார்க்காமல் காதோரம்" என்ற சொல்லாடலும் அதற்கு ஆதாரமான
அந்நிகழ்வும்... அருமை....

மே. இசக்கிமுத்து said...

ஓ மனதுக்கு பிடித்தவரின் வார்த்களுக்கு இத்தனை சக்தியா??

ராதா செந்தில் said...

அருமை.

Roy Cherian Cherukarayil said...

A wonderful and powerful poem....I took some time towards the end...then I got it...

kuthubg said...

nizhal nijamahum..nijamam kavithayahumoo??

Hariharan S said...

unmaiyin uraikal !!!!!

Velsa Malar said...

nice poem padma ji...

Unknown said...

பழங்களோ குப்பையில்..
தோல் உண்ணும் தட்டில்...arumaiyana thdumatram

miruna said...

அழகான சித்தரிப்பு.சிகரம் படத்தில் இந்த தன்மையிலான நல்ல பாட்டு ஒன்றை நினைவுபடுத்தியது உங்களின் கவிதை.