Tuesday, October 30, 2007

வரம்

வேறொன்றும் கேட்கவில்லை
உன்னிடம் நான்..

மணக்கும் மலர்கள்
வேண்டாம்,
மயக்கும் உடைகள்
வேண்டாம்,
இனிக்கும் இனிய
பயணங்கள் வேண்டாம்,
பொன்நகை வேண்டாம்.....
போகங்கள் வேண்டாம்.
இவை எதுவும் வேண்டாம்........

அலுவலகச் சிந்தனையின்றி
இடையறாத அழைப்பின்றி
மற்ற நண்பர்களின் நினைப்பின்றி
நாளையின் கவலையின்றி
எப்போதாவது ஒரு முறை...
இடையூறே இல்லாத
நமக்கே நமக்கான
சில மணித்துளிகள் மட்டும்

இது தவிர
வேறென்ன கேட்கப் போகிறேன்
உன்னிடம் நான்!!!

3 comments:

மே. இசக்கிமுத்து said...

அதற்குள் நான்கு கவிதைகள் தந்துவிட்டீர்கள் அதுவும் யதார்த்தமான கவிதைகள். அனைத்தும் அருமையாக இருக்கிறது!

தோழிக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

பத்மா said...

நன்றி இசக்கிமுத்து அவர்களே!!
வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
பத்மா......

Anonymous said...

What a fantastic poem!

Expresses the loneliness along with the meloncholy in a beautiful way.

Would you believe if I said it is one of the healing processes (A book called "How to Survive a Loss of Love")?

May the almighty place you among caring souls, which you deserve very much!