Monday, November 12, 2007

புரிதல்

புரிதல்,
புரிந்துகொள்ளுதல்,
இந்த இரண்டு தண்டவாளங்களின்
நடுவே
நகர்கிறது நம் நட்பு............

உன் சிரிப்பு,சிந்தனை,
வெறுப்பு,வேதனை,
ஏன்!மௌனம் கூட
புரியப்படுதலால் தான்
நம் நட்பு
நசுங்காமல் சிரிக்கிறது,
நாள்தோறும்
இனிக்கிறது.......

நகரும் நட்பில்...
நீ
என் தவிப்பையும்
புரிந்து கொண்டிருக்க வேண்டும்..
புரிந்து கொண்டிருப்பாய்
என்ற புரிதலோடு தான்
காத்திருக்கிறது
மனம்......

ஏனெனில்
புரிந்தும் புரிந்துகொள்ளுதலுமாய்
தானே
மொட்டவிழ்ந்தது
நம்
நட்பூ

9 comments:

M.Rishan Shareef said...

நட்பெனும் ரயிலூரும் இரண்டு தண்டவாளங்களாய் புரிதலும்,புரிந்து கொள்ளப்படலும்.
அருமையான ஒப்பீட்டுடன் நல்லதொரு கவிதை.

பத்மா said...

நன்றி ரிஷான்.
வருகைக்கு நன்றி.

மே. இசக்கிமுத்து said...

புரிந்துகொள்ளுதலில் தானே நட்பே இருக்கிறது. உங்கள் தவிப்பையும் புரிந்துகொண்டிருக்கதான் வேண்டும்!!!

Roy Cherian Cherukarayil said...

Ungalukku thavippu irukku endru nandraga therigirathu...adhinal thane miga nandraga antha thavippinai kavidhaiyaga mattri ezthudhereergal.

Inspiring....

பத்மா said...

nandri rishaan isakki and cherry.thanx a lot

Divya said...

\\நகரும் நட்பில்...
நீ
என் தவிப்பையும்
புரிந்து கொண்டிருக்க வேண்டும்..
புரிந்து கொண்டிருப்பாய்
என்ற புரிதலோடு தான்
காத்திருக்கிறது
மனம்......\

நான் ரசித்த வரிகள்!

பாராட்டுக்கள், நட்பினை அருமையாக வெளிக்காட்டுகின்றது அனைத்து வரிகளும்!

kuthubg said...

PIRANTHA KUZANTHAIYAI PAARKKA AASAI AASAIYAAI ODIVANTHENN..PUDIYA PIRAPPUHAL
ONNUME ILLAII...

பத்மா said...

நன்றி திவ்யா!

quest4gold said...

Hi Paddy
a classic on friendship that has no paralells. sweetly symbolised with rails used by a train
solly