Tuesday, October 9, 2007

இனியது இனியது

ஒரு நாள்
விண்ணெல்லாம்
நட்சத்திரமான
பொழுது
விரல்நுனிபட
காத்திருந்ததும்........

வயிறு கீறி
வெளியெடுத்த
வலியொடு
பிஞ்சு ஸ்பரிசத்திற்கு
காத்திருந்ததும்.........

ஆண்டுகள்
பல பிரிந்து
பின் காணும்
கணத்திற்கு
காத்திருந்ததும்.........

இனிமை இனிமை
எனினும்
அதனினும்
இனிமை...

நீ... ஒருநிமிடம்
எனக் கூறி
தொலைபேசியில்
நிறுத்த
மனக் கண்ணில்
உனைக்
கண்டு கொண்டே
காத்திருக்கும்
அத் தருணம்........

5 comments:

மே. இசக்கிமுத்து said...

காத்திருத்தலும், காக்க வைத்தலும் இனிமையான அனுபவம் தானே!!

காரூரன் said...

நல்ல கவிதை. உண்மையான பிணைப்புகளுக்கு, பிரிவும் தூரமும் ஒரு தடையல்ல.

M.Rishan Shareef said...

கவிதை அருமை.அனைவருக்கும் வாய்த்திருக்கும் இவ்வழகிய தருணம்...!

kuthubg said...

purihirathu... purihirathu...vaazha valamudan..

kuthubg said...

naan oru thappu seithu vittean..
ungalai kekkamal..ungal kavithaiyai inge pirasurikka seithuvittean mannikkavum...
http://www.tamilcollections.com/tc/poemsdl.asp?poemid=113