Sunday, September 16, 2007

கடவுளே!!!

கடந்தும் உள்ளிருப்பதால்
கடவுளென்றும்,
காணாப் பேரின்பமாய்
இறையென்றும்,
மூன்றுலகம் ஆட்டுவிக்கும்
ஆண்டவனென்றும்
பிறவிப் பெருங்கடல் நீக்கும்
பேரொளி என்றும்
காலமெலாம் புகழப்படும்
நித்ய ஜீவஒளியே!!!

பலமுறை அடிப்பினும்
அன்னை தேடும் குழந்தையாய்
அன்பு அரவணைப்பு எல்லாம்
மறுக்கப்பபட்ட அனாதையாய்
கண்ட கனவை கண்ணில்
தேக்கும் ஊமையாய்
உன்னிடமே வந்து நிற்கிறேன்
ஊண் மறுக்கப்பட்ட குழவியென

என்னுடானான உன் விளையாட்டை
என்றுதான் நிறுத்த எண்ணம்?
அன்றுதான் மலரும் என் மனம்
இதும் நீ அறிவாய் அது திண்ணம்!!

4 comments:

மே. இசக்கிமுத்து said...

//அன்பு அரவணைப்பு எல்லாம்
மறுக்கப்பபட்ட அனாதையாய்
கண்ட கனவை கண்ணில்
தேக்கும் ஊமையாய்
உன்னிடமே வந்து நிற்கிறேன்
//

சொற்களில் தெரியும் சோகம் அந்த சிவனின் அருளால் சீக்கிரம் மறையட்டும். உங்கள் மனம் விரைவில் மலரும்..

பரத் said...

Good one!

மங்களூர் சிவா said...

//
என்னுடானான உன் விளையாட்டை
என்றுதான் நிறுத்த எண்ணம்?
அன்றுதான் மலரும் என் மனம்
இதும் நீ அறிவாய் அது திண்ணம்!!
//
எதோ பெரிய வேண்டுதல் போல?

Unknown said...

Romba arumai ME.........sOLLA VAARTHAI GHAL THERIYA VILLAI. ANAITHUM OVOVRUVARUDAIYA VAAZHKKAI ANUPAVAM NEENGHAL THERIVITHA VITHAM ARUMAI.
MEENDUM UNGHALIDAM IRUNDHU MELUM IDHU POLA VAAZHKAI THATHUVANGHAL ETHIR PAARKIREAN