மேகங்களில் நம்
மனவுருவைக் காண்பதோ
ஒரு நாய் குட்டியை வளர்ப்பதோ
பத்துக்கு பத்து புள்ளி வைத்து
கோலம் போடுவது போலோ
இல்லை
ஒரு கவிதை வரியை எழுதுவது
முதல், ஓர் ஆணும் பெண்ணும்
தயங்கி ,முயன்று ,வெல்லுவது
போன்ற வாதையின்
ஆயிரம் மடங்கு அவஸ்தையில்
வந்து விழுகிறது
ஒரு கவிதையின் கரு.
பின் முயங்கிக் களைத்து
புன் சிரியுடன்
கண் செருகும்
வாலிபத்தின் வனப்போடு
அதன் முதல் வரி.
ஒரு பூனைக் குட்டியை
தடவுவது போல்
அவ்வளவு எளிதாக அமைவதில்லை
அடுத்த வரியும்
அதற்கடுத்த வரியும் கூட ....
37 comments:
Good one padma.. welcome back....
ரொம்ப நாளைக்கப்புறம் நீங்க எழுதின மிக நல்ல கவிதை.
அல்லது இதுவரைக்கும் நீங்க எழுதினதில் முதலிடம் வகிக்கும் கவிதை இது.
கவிதையில் முற்றுப்புள்ளி வைப்பது கூட அத்தனை சுலபமல்ல.
சபாஷ் பத்மா.
சபாஷ்.. இத்தனை நாள் காத்திருத்தல் வீண் போகவில்லை.. தொடரட்டும் உங்கள் எழுத்து மழை.
நன்றி சுந்தர்ஜி ..
இதே அவஸ்தையை மூன்று மாதங்களாக அனுபவித்த படியே ...
well said.... mam:-)I like it
thanks ramasamy
க்ளாஸ் அருமை.
கவிதை சிறப்பாக இருந்தது.சுருக்கமான சொற்களில் அருமையான வெளிப்பாடு.
அன்பு பத்மா,
நல்லாயிருக்கு கவிதை... பத்மா... வாழ்த்துக்கள்!
அன்புடன்
ராகவன்
//ஓர் ஆணும் பெண்ணும்
தயங்கி ,முயன்று ,வெல்லுவது
போன்ற வாதையின்
ஆயிரம் மடங்கு அவஸ்தையில்
வந்து விழுகிறது
ஒரு கவிதையின் கரு.//...மிக இயல்பா ரொம்ப அழகா இருக்கிறது வரிகள்!
நல்ல கவிதை!!!
முதலில் மெலிதான புன்னகையோடு கடக்க வைத்து... பின் பிரமிப்பூட்டுகிறது
உங்களின் நீண்ட இடைவெளி குறித்து யோசித்ததுண்டு. உங்கள் கவிதை உறுதி செய்துவிட்டது. இயல்பான அதேசமயம் சரியான கவிதை சரியான வார்த்தைகளில். தொடர்ந்து எழுதுங்கள் பத்மா.
கவிதை
கருவாதலிலும்உருவாதலிலும்
கவிஞன் படும்அவஸ்தையை
மிக அழகாக உண்ரச் செய்து போகிறது
உங்கள் கவிதை
]நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை
பேருந்து பயணங்களில்
குழந்தை மட்டுமல்ல
கவிதையும் பிறக்கும் ..
கவனமாய் இரு ...
ஓட்டை பேருந்துகளில்
கற்பம் மட்டுமல்ல
கவிதையும் கலையும்
மெதுவாக போகச்சொல் ...
கனிந்து அழுகையில்
கண்ணீர் மட்டும் பெருகாது
கவிதையும் வரும்
குறித்து வை ...
சாகும் பொது
உயிர் மட்டும் பிரியாது
கவிதையும் பிரியும்
அதற்காகவும் அழு ..
--தலையாரி
27 .04 .2011
புதுசேரி
ஆயிரம் மடங்கு அவஸ்தையில்
வந்து விழுகிறது
ஒரு கவிதையின் கரு.
பின் முயங்கிக் களைத்து
புன் சிரியுடன்
கண் செருகும்
வாலிபத்தின் வனப்போடு
அதன் முதல் வரி.
நல்லாயிருக்கு வரிகள்
நல்ல கவிதை .தொடர்ந்து எழுதவும்
ஒரு பூ மலர்வது போல்
நீண்ட காத்திருப்பிற்கு பின்
பூத்திருக்கிறது
உங்கள் கவிதை
அதன் நிறங்களோடும்,
வாசனையோடும்.
உங்கள் கவிதையில் சொல்லியிருப்பது போலவே இருக்கிறது கவிதை
குட் ...நிறைய முதல் வரிகள் எழுதுங்க
நீங்களும் கேப் விட்டுட்டீங்களா மேடம்..பராவயில்லை இந்த மாதிரியான கவிதைகள் எழுதும்போது இடைவெளியிருப்பதும் நல்லது தான்..கவிதை நல்லாருக்கு மேடம்..
superb!
முதல் வரியும்
கடைசி மூன்றுவரியும் கவிதைக்கு நெருக்கமா இருக்கு.. மத்தபடி சொல்றதுக்கு எதுவும் இல்லை ஜி
கவிதா... அவஸ்தைதான் :)
//அவ்வளவு எளிதாக அமைவதில்லை
அடுத்த வரியும்
அதற்கடுத்த வரியும் கூட ....
//
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்
அடுத்தடுத்த கவிதைகளுக்கு கருவாய்... அச்சாரமாய் இந்த ஒன்றும்...
/////ஒரு கவிதை வரியை எழுதுவது
முதல், ஓர் ஆணும் பெண்ணும்
தயங்கி ,///////
அழகான ரசனை . கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தேர்ந்தெடுத்த வார்த்தை அலங்காரம் . பகிர்ந்தமைக்கு நன்றி
மிக அழகு பத்மா..:))
'கவிதாவஸ்தை'
கவிதை எழுத நேருமாயின் பட்டறியலாம் போலும்!
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நன்றாக சொன்னீர்கள்!
முதல் வரி தொடங்கி
முடிகிற வரி வரும் வரை அவஸ்தை தான்...
அருமை அழகாக இருக்கிறது
கவிதாவஸ்தை கூடவே பயணித்த உண்ர்வு.
பத்ம வியுகமாய்
கவிதை யூகம்
சொல்லும் சுந்தர கவிதை
வரிகளுக்காக மட்டும் அல்ல
ஒவ்வொரு வார்த்தையின் எழுத்துக்களுக்காகவும்
படும் பாட்டை
பரவசமாய் சொன்ன விதம்
அருமை தோழி
நிறைய எழுதுங்களேன் ..
very nice...அருமை...ஏன் நீங்க தினமும் பதிவு போடறதில்லை...
http://zenguna.blogspot.com
கோலம் வரைவது போலில்லை கவிதை புனைவது என்றாலும் ............................................................................... கவிதை, மிக அருமை.
ஆமாம்!
ஆகா அருமை.
கவிதை எழுதுவதைப் பற்றிய கவிதை. கவிதையான ஒரு செயலோடு ஒப்பிட்டு .....அருமை அருமை.
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.
அழகான நல்ல தவம்.
Post a Comment