Monday, January 25, 2010

எப்படி இயலும்?




உத்திரத்தின் நடுவே
கௌலிக்கும் பல்லி
ஜன்னல் காற்றில்
படபடபடக்கும் பழைய நாள் காட்டி
தாளகதி மாறா தொனியில்
சுற்றிக்கொள்ளும் விசிறி
கரடு முரடாய் அவ்வப்போது
ஒரு குறட்டையொலி
பாலுக்குச்சிணுங்கும்
பக்கத்து வீட்டு பச்சிளம்
எதோ கண்டு ஊளையிடும்
வாலில்லா பெட்டைநாய்
முகத்தருகே பறந்து
பாடும் சாகா கொசுக்கூட்டம்
நட்ட நடுநிசியில் வீறிட்டெழும்
பாதுகாவலர் ஊதல்
எல்லாம் மீறி
அந்த ஓட்டை குழாயின் நீர்சொட்டும் ஒலியில்
நாள் தவறாது உனது பெயர்.
எப்படித் தூங்குவேன் நான்

17 comments:

sigamani said...

பாலுக்குச்சிணுங்கும்
பக்கத்து வீட்டு பச்சிளம்
எதோ கண்டு ஊளையிடும்
வாலில்லா பெட்டைநாய்......arumaiyana eduthukattu nimmathi illamal uranga muyerchippavarukku

sowmi narayanan said...

hiiii Really very nice padma., eppa thann Tharikirathu Ungalluku Yen thukam Vara villai Endru

sathishsangkavi.blogspot.com said...

Super...

Appu said...

Good One :) :)

Divya said...

great....

பத்மா said...

hi,
SIGAMANI,SOWMI,SANGAVI,ZENO AND DIVYA THANKS A LOT FOR VISITING.
THANKS A LOT FOR UR COMMENTS
PADMA

uma said...

A HEART TOUCHING KAVITHAI PADMAJA

uma said...

romba nalla kavithai padmaja

uma said...

romba nalla kavithai padmaja

Nathanjagk said...

பதிவு செய்யமுடியாத காட்சிகள், ஒலிகள், இயக்கங்கள்... விடுவிக்க முடியாத நினைவோடு சேர்ந்து மறக்க முடியாத பொழுதாகி விடுகிறது.

சில கவிதைகளே வாசித்தேன். அத்தனையும் பாதிக்கின்றன விதத்தில் இருக்கின்றன.

Roy Cherian Cherukarayil said...

Padma,
Very nice. All the small sounds that we hear around are very nicely captured here....I will be visiting this place regularly.

Roy

பத்மா said...

ஜெகநாதன் தங்கள் வருகைக்கு நன்றி.உங்கள் பின்னூட்டமே கவிதை போல் உள்ளது.

பத்மா said...

hi Cherry,
thanks for your visit i strive to go to the next level .thanks for your kind comments

மே. இசக்கிமுத்து said...

அன்பானவரின் பெயர் அங்கும் இங்கும் எங்கும் பார்க்கும் பொருள்களில் ஒலிப்பதில் அந்த அன்பின் ஆழத்தை அறிய முடிகிறது!!

பாரதியும் சொன்னானே,
"பார்க்கம் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா"

பத்மா said...

இசக்கி நன்றி நன்றி

Pinnai Ilavazhuthi said...

ஒவமையை விட மூல கருத்து அருமை

Ravindran Arunachalam said...

ungal kavithaiyai padikkumpozhuthu oru nalliravai manathil oviyamaha varaiya mudikirathu. athanude ul manathiin ninaivukalaiyum kana mudikirathu

very good padmaja great .........


ravi