Wednesday, January 13, 2010

ஐயகோ !


கோமணத்த விட கொஞ்சம் பெருசா
சாணகலம் நஞ்சை இருக்கு !
நிலத்தை நம்பி பெருசு ரெண்டு ,
கனவு காணற பொண்ணு ஒண்ணு ...
படிச்சு ஒசர போறோமுன்னு
வீரம் பேசுற கன்னும் உண்டு ...
கட்டி வந்த நாளிலேந்து
தட்டி பேசா அப்பாவி ஒண்ணு ...
கிடைக்கு அனுபிச்ச ஆடு ரெண்டு
சீம்பால் தரும் செவலை ஒண்ணு ....
இம்புட்டு பேருக்கும் வயிற ரொப்ப
கடமை இருக்கும் காளை நானு........

அக்கம் பக்கம் இளிச்சு திரிஞ்சி
இருந்த தாலியும் அடகு வச்சு
மழையிலும் வெயிலும் மனசு அடிக்க
வெதச்சு, காய்ச்ச வெள்ளாமை எல்லாம்
பத்து மைலு காலு வலிக்க
சைக்கிள் மிதிச்சு டவுனுக்கு வந்து ...
வெறும் நாலு... பத்து ருவாயின்னு
தங்க சோளகதிர வித்தா ......
ஆறு கேட்டு பேரம் பேசி...
வாங்காம போய் வயித்திலடிக்கும்....
'கப்பு' முப்பதுனாலும் சரி
சொன்ன விலைய சிரிச்சு கொடுத்து
"அமெரிக்க சுவீட்கார்ன்"வாங்கி தின்னும்
சொரண கெட்ட நம்ம சனம் .

***உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது***

20 comments:

Velmurugan Renganathan said...

இயல்பான கவிதை! ஒரு சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனென்பதாலோ என்னவோ படித்தவுடன் கண்கலங்க நேரிட்டது. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்! (இவ்வளவு எளிமையாக எழுதியதே மாபெரும் வெற்றிதான்!)

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

கவிதை அருமை

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

வி.பாலகுமார் said...

நிதர்சனம் முகத்துல அறையுதுங்க !

ராம்குமார் - அமுதன் said...

பத்மா.... உழவர் திருநாளன்னிக்கி சம்மட்டில அடிச்ச மாதிரி ஒரு கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

padma said...

வேல்முருகன்,பாலகுமார்,ராம்குமார் அமுதன் அனைவருக்கும் நன்றி
பத்மா

sigamani said...

அக்கம் பக்கம் இளிச்சு திரிஞ்சி
இருந்த தாலியும் அடகு வச்சு
மழையிலும் வெயிலும் மனசு அடிக்க
வெதச்சு, காய்ச்ச வெள்ளாமை எல்லாம் ARUMAIYANA VARIGAL THODARNTHU ITHU POLA KAVITHAI EZHUTHA VAALTHUKKAL

padma said...

நன்றி சிகாமணி.
உங்களை போன்றோரின் ஊக்கம் தான் எழுத வைக்கிற‌து‌
பத்மா

திகழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

நீண்ட நாளுக்குப் பிறகு தங்களின் எழுத்துகளைப் பார்க்கின்றேன்.

நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் உங்களுக்கு இல்லாவிட்டாலும் எங்களைப் போன்றவர்களாக எழுத வேண்டிகின்றேன்.

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

புதுவைப்பிரபா said...

" சுருக்கென" தைக்கும் எதார்த்தமான கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

நட்புடன். . .
புதுவைப்பிரபா

adhiran said...

வாழ்த்துக்கள். நன்றி.

சக்தியின் மனம் said...

வாழ்த்துக்கள்

Durai V K said...

SoLak Kathir, Ivvalalu unmaigalai sumakira kathai yaarukku theriyum.

Lovely picture and Poetic.

Durai VK

சாம்ராஜ்ய ப்ரியன் said...

ஆஹா.. படிப்பவர்களின் மனதை கலங்க வைக்கிறது. முகத்தில் அடிக்கும் நிதர்சனம். :(

பரிசலுக்காக எழுதவில்லை எனினும் பண முடிப்பு நிச்சயம். :)

Infinite said...

நெஞ்சில் அறையும் வரிகள்
சிறப்பான கவிதை

sowmi narayanan said...

Kavithai: Neenga Anuba Vaithu Eluthina Polo Irrunthathu Padmaja., You are so GENIUS

தோழி said...

எளிமையாக இருப்பதாலேயே நேர்மையாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் பத்மா.

கமலேஷ் said...

//கோமணத்த விட கொஞ்சம் பெருசா
சாணகலம் நஞ்சை இருக்கு !///

//வீரம் பேசுற கன்னும் உண்டு///

பொட்டில் தெறிக்கும் வரிகள்...
கவிதை கையில் சாட்டை வைத்திருக்கிறது...
படிக்கையில் காணி நிலத்துக்காரனின் உண்மையான காட்சிகள் கண்களில் விரிகிறது...
நிச்சயம் வெற்றி பெரும் வாழ்த்துக்கள்...

KaveriGanesh said...

நிஜத்தின் எதார்தத்தை பிரதிபலிக்க செய்கிறது கவிதை இல்லையில்லை உண்மை.

வாழ்த்துக்கள்

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க.. வாழ்த்துகள் :)

இசக்கிமுத்து said...

நெஞ்சு பொறுக்குதில்லையே!!! ஐயகோ!!