Tuesday, January 26, 2010

"ஒற்றைக் காகம்":

தூரத்து பனைமரத்தின்
ஒற்றைக் காக்கையாய்
யாரும் கவனிக்காமலே
போகிறது என் இருப்பு

காக்கை அமர
கனிவிழும் கதையாய்
ஒற்றைக் கல்லால்
என் இருப்பைக்
கலைத்துச் சென்றாய் நீ

படாமல் பட்ட அடிவாங்கி
சிறகொடிந்து கரைகிறேன்
காணாமலே போயிருக்கலாம் என்று !

19 comments:

sigamani said...

காக்கை அமர
கனிவிழும் கதையாய்
ஒற்றைக் கல்லால்
என் இருப்பைக்
கலைத்துச் சென்றாய் நீ
manathi thotta varigal great.....

Nathanjagk said...

பறவை எழுந்த மின்கம்பியின் அதிர்வுகள், காற்றில் எழுதிச் செல்கிறது ஒரு இசையை.

இசை போலவே இக்கவிதையும்!

விஜய் said...

ரொம்ப அழகா இருக்குங்க

இது எனது முதல் வருகை

இனி அடிக்கடி வருவேன்

வாழ்த்துக்கள்

விஜய்

பத்மா said...

romba nandri sigamani,jeganathan,and vijay.
thangal muthal varugaiku nandri vijay.
padma

uma said...

HEART TOUCHING KAVIDHAIGA ALL THE THREE BUT THE KAGAM WAS REALY TOUCHING ONE

அண்ணாமலையான் said...

மிக அருமையா, அழகா வந்துருக்கு... வாழ்த்துக்கள்...

பத்மா said...

நன்றி உமா

பத்மா said...

வருகைக்கு நன்றி திரு.அண்ணாமலை அவர்களே

Anitha Manohar said...

பத்மா,

அருமை...தொடருங்க...

வாழ்த்துக்கள்

மே. இசக்கிமுத்து said...

"படாமல் பட்ட அடி" மனதில் மணிக்கணக்காய் மல்லுகட்டிக்கொண்டிருக்கிறது,கல் எரியும் முன்பு கொஞ்சம் யோசித்திருக்கக்கூடாதா அந்த கல் மனம்!
குறுங்கவிதை மனதில் மவுனமாய் பதிகிறது!!

பத்மா said...

வாங்க இசக்கி நலமா?தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Maximus' MindBlowers said...

Too Good Padhu!

Pinnai Ilavazhuthi said...

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

மே. இசக்கிமுத்து said...

நான் நலம்! நன்றி!

அன்புத்தோழன் said...

short n sweet...

Enga paathaalum kavidhaiya iruku... kalakreengappaa elllarume....

Anonymous said...

அருமையான வரிகள் அழகான கவிதை வாழ்த்துக்கள்.

Paleo God said...

அருமையா எழுதறீங்க.. என் வலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி..:))

தொடருங்கள்..

தொடர்கிறேன்..:))

"உழவன்" "Uzhavan" said...

//
காக்கை அமர
கனிவிழும் கதை//
 
இது இந்த இடத்திற்கு அவசியமா என்ற சந்தேகம் எனக்குள்ளது.
 
உங்களது நிறையக் கவிதைகளைப் படித்தேன். அருமை.. வாழ்த்துகள்

தமிழ் said...

அருமை