Monday, November 16, 2009

காதல் மட்டும்

காதல் ஒன்றே கருவாய்க் கொண்டு
கவிதை செய்தல் வேண்டாம் என
கடிந்து சொன்ன நண்ப ,

வானம் தனை வடிக்க எண்ணி ,
விண்ணதனை நோக்கின் .....
அங்கு காதல் செயும் மேகம் .

மலரை தனை பாட எண்ணி ,
சோலை தனை சேர்ந்தால் .....
அங்கு காதல் செயும் வண்டு .

இயற்கை தனை இசைக்க எண்ணி ,
சற்று வெளியதனில் விரைந்தால்.......
அங்கு காதல் செயும் அருவி .

காதலிலா இடமதனை
கண்டு நீயும் பகர்ந்தால்
களைவேன் நானும் காதல்.

அன்னையிடம் காதல்,
அழும் குழந்தையிடம் காதல்,
விண்ணிலேயும் காதல் ,எல்லா
பெண்ணிலேயும் காதல்.
வாழ்கை தரும் காதல்,
வாழ்வு முடிவும் காதல்.
கண்ணீரும் காதல்..
சிந்தும் புன்னகையும் காதல்.

பாட்டன் அவன் பாரதியும்
பாட்டுகவி தாசனும்
பகர்ந்ததுவும் காதல்,
மூழ்கி திளைத்ததுவும் காதல்.

வையகத்து பொங்குகின்ற காதல் அதனை எல்லாம்
ஏன் கரிய மையில் சேர்த்து இங்கு கவிதை ஆக்குகின்றேன்

காதல் அது போதும்
என கருதுகின்ற நாளில்
என் கண்களது மூடும்
உயிர் விண்ணதனை நாடும்,
இறையை காதலோடு சேரும் .

17 comments:

தேவன் மாயம் said...

பாட்டன் அவன் பாரதியும்
பாட்டுகவி தாசனும்
பகர்ந்ததுவும் காதல்,
மூழ்கி திளைத்ததுவும் காதல்.
///

Very nice!!!

sigamani said...

மலரை தனை பாட எண்ணி ,
சோலை தனை சேர்ந்தால் .....
அங்கு காதல் செயும் வண்டு . arumaiyana varigal very nice

Anonymous said...

wonderful padma..... The world is thriving in the essence of Love....
you have put it in simpler form...

Ravi

sowmi narayanan said...

Hi Really very nice Padma., Unga Kavithaya Varnika Varthai illa., I enjoyed a lot., Keep writing forever

Unknown said...

Hi Padma You ve become an excellant poet and this one about love had made me place you better than kannadasan himself.
solly

பத்மா said...

thanks devan,sowmi solly ravi and jose

mrs.uma pashupathi said...

excellant poet just i went all the poem it was superb keep it up and more i loved that mounam poet very much

Sriram said...

Padma,,

the concepts and the lines are too good.

Sriram

Infinite said...

தமிழ் சொற்களை எடுத்து
கவி மாலை தொடுத்து
அதை காதலுக்கு கொடுத்து
பெற்றீர் எமது வாழ்த்து


சிறப்பான பதிவு

Anonymous said...

padma

the poem is very touching..

arun

Appu said...

hey of all ur blogs i like this the most :) :)thanks fr dropping by will keep up the ramblings :)
I really wonder how u get inspired :) :)

பத்மா said...

thanks zeno arun infinite and uma

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு உங்க ஒர்க்கு... நடக்கட்டும்..நடக்கட்டும்....

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..

மே. இசக்கிமுத்து said...

நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன், நல்ல கருத்துகள்!
தோழிக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

அன்போடு,
இசக்கிமுத்து..

kovai sathish said...

காதல் என்பது கெளரவம் பார்ப்பதில்லை...
கன்னியா..? கற்பிழந்தவளா...?
என்று ஆராய்வதில்லை...!!
பணம்..,நிறம்...ஏதுவும் யோசிப்பதில்லை...
ஏனெனில் உடல் காதலிப்பதில்லை...


மனது..!!

ரசித்தேன் உங்கள் கவிதையை..?!
-அன்புடன் சதீஷ்

Maximus' MindBlowers said...

Simply mindblowing this is!!! Arputhamana kavioviyam! Gr8 Padhu.. keep going. :)