நான் உன்னைக்
கனவில் மட்டும்
கண்டு களிக்கிறேன்
நீ நனவில்
என் அருகில்
இருப்பதறியாமல்!
என் கனவினைக்
கலைக்க மனமின்றி
நீ கடந்து மறைகிறாய்
மேகமாக......
நீ நனவாய் வந்ததை
கனவென எண்ணி
களிக்கிறது மனம்
கனவோ நனவோ
ஒரு முறையேனும்
கொஞ்சம் வந்து செல்........
ந்னவாகும் கனவு
நான் காண நாளும்.
10 comments:
உங்கள் கவிதை எல்லாம்
நன்றாக இருக்கிறது.
நன்றி
உங்களுக்கு என்னுடைய
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
http://www.savatoons.com/blogger-templates.htm
இதுதாங்க Template
பொங்கல் வாழ்த்துகள் பத்மா..கவிதைகள் நன்று.
Hi...I feel bad for not visitng this blog so far.... really good...nice of u...
ந்னவாகும் கனவு
நான் காண நாளும்.
kanavu kaanungal nu ithukkuthaan
abdul kalam sonnaroo...
ungal kanavu ninaivaaha enn vaazthukkalalum pirarthanaihalum...
Simple but beautiful and powerful...
அரைத் தூக்கத்தில் அகம் புறம் பிரித்தறியோம். அத்தருணத்தில் நடப்பவற்றை கனவும் நனவுமாக கற்பித்துள்ளீர்கள். மிக்க அருமை!
வேதனையிலும் சாதனை செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
~ இராசா ~
Oru Muryenum is an excellent thought and it proves yet again on your capability to think in different languages
solly
கனவில் லயித்துவிட்டால் நனவு மறந்துவிடும், நனவில் லயித்துவிட்டால் கனவு தொலைவில் விழும்!!
Dreams and thoughts are sweeter than the reality !! Waiting is always fun You really poured thought of emotion from the heart in writing. Lovely poem. Well done Padma. Ram
Post a Comment