Tuesday, December 11, 2007

உணர்ந்தேன் நான்!

நீ இல்லாத
உன் தெருவில்
உலவும் போதுதான்
நேரில் இல்லாமலே நீ
என் உணர்வுகளில் படர்ந்திருக்கும்
உண்மை புரிந்தது!

உன் மூச்சுக்காற்று
கலந்திருக்கும்
உன் ஊர் காற்றை
சுவாசித்த பிறகுதான்
என் உயிருக்கும்
உயிர் வந்தது!

நீ விரும்பிக் குடிக்கும்
தேனீர் கடையில்
ஒதுங்கி நின்றபோதுதான்
என் சுவையரும்பு கூட
மலரத் தொடங்கியது!

உன் ப்ரார்தனைக்குச்
செவிசாய்க்கும்
செல்லப் பிள்ளையாரை
கண்டு புன்னகைத்த போதுதான்
வாழ்க்கைக்கே ஒரு
நம்பிக்கை வந்தது!

யாரும் அறியாமல்.....
நீ நடக்கும்
உன் வாசலின் மண்ணெடுத்து
என் கைகுட்டையில்
புதைத்து
நெஞ்சோடு அணைத்த பிறகுதான்
என் காதலுக்கே
காதல் வந்தது!

10 comments:

M.Rishan Shareef said...

உணர்வுகளில் கலந்த காதல்...
வார்த்தைகளாகி...வரிகளாகி...

அருமை.

Anonymous said...

Great one...Kathaluke...Kathaal...arumayana varthaigal,....padikum pothu...unaruval silirkirathu...well done....Kaathlika thoondum...kaathal kavithai.....super

Anonymous said...

Excellent expression of heart and soul!

மே. இசக்கிமுத்து said...

காதல் வந்துவிட்டால் சின்ன சின்ன விசயங்கள் கூட சிந்தனையில் இருந்துகொண்டு சிலிர்த்திட செய்திடும்!!!

ராதா செந்தில் said...

ஆழமான கருத்துக்கள்.

மே. இசக்கிமுத்து said...

வாழ்த்துக்கு நன்றி!
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

காரூரன் said...

உணர்வுகள் கலந்துள்ளது....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sigamani said...

great one arumaiyana varigal

Ravi shankar said...

"காதலின் உணர்வுகளை" நீங்கள் எழுதும் போது எப்படி உணரப் பட்டிர்கள் என்று எங்களுக்குத் தெரியாது ! ஆனால் படிக்கும் போது எங்களால் உணர முடிந்தது !! அருமையானக் கவிதை வாழ்த்துக்கள்!!

ரிஷபன் said...

என் காதலுக்கே
காதல் வந்தது

சொல்ல முடியாமல் வார்த்தைகளின் திணறலின்போது உணர்வின் வெளிப்பாடு அழகாகி விடுகிறது..