Sunday, November 25, 2007

எதை எழுத?

கவிதை என நினைத்தால்
கண்முன்னே உன் முகம்!
கற்பனையில் உன் நினைவு!
காலமது மாற்ற இயலா
காதலும் இது தானோ!!

கவிதையென எதை எழுத?
கண்ணுடன் கண் நோக்கிய
கணப்பொழுது வேளையையா?
கணப்பொழுது நொடியில் மாறி
கருத்தில் யுகமாய் மலர்ந்ததையா?

கண்ணீரைக் கண்டு பதறி, துடைக்க
கரங்கள் வேகமாய் நீண்டதையா?
காலமெலாம் துணைஇருப்பேனென
கைபற்றிக் காதலுடன் உரைத்ததையா?

கண்பட்டு விடும் போல் நாளிரவு
காவலாய் அருகில் நின்றதையா??
கவிதையென வாழ்வதனை
காரிகைக்குத் தரும் நேரம்
கால நேரம் பாராமல்
காலன் வந்து கவர்ந்த்தையா?

கனவும் நினைவுமாய் ஆனதையா??
கண் மூடிக் உனைச் சேர
காத்துக் கலங்கி நிற்பதையா?

கவிதையே நீயாய்
கருத்தினில் ஆனபின்பு
கவிதை யென எதை எழுத?
காத்திருக்கிறேன் நான்

6 comments:

M.Rishan Shareef said...

கவிதையே நீயாய்
கருத்தினில் ஆனபின்பு
கவிதை யென எதை
எழுத?காத்திருக்கிறேன் நான்

மூச்சுக்காற்றாய் அவரையும்,கவிதையையும் கொண்டிருக்கிறீர்கள்.காற்றினைக் கையில் பிடிக்கமுடியாது.எனினும் கவிதை உங்கள் கைகளில் சிக்குயுள்ளது.சுவாசிப்பதைப் பற்றிச் சிலாகித்துச் சொல்ல என்ன இருக்கிறது என எண்ணி எழுதுவதை நிறுத்திவிட வேண்டாம்.

Anonymous said...

Excellent... Aanaal, sogam izhaiyodum Kavidhai!

பத்மா said...

thanx rishaan and raja.am honoured
padmaa

kuthubg said...

Sohaththai
kavithaiyin moolam kooda suham kanalamoo....wow

Anonymous said...

போன எடம் தெரியல
புரிஞ்சிக்கிடும் அறிவுமில்ல

தீராத சோகத்த
தந்துட்டுப் போயிட்ட

நீக்கமற நெறஞ்சுட்ட
நிம்மதியப் பறிச்சுட்ட

பாக்கிற பொருள் எல்லாம்
அசப்புல உன் ஜாட

நீ தான் இருக்கியோ
நான் தான் போய்ட்டேனோ
ஒன்னும் புரியல.........

மே. இசக்கிமுத்து said...

கவிதையை படிக்கும் போதே சோகத்தில் மூழ்கிவிட்டேன் ஆனால் எங்கே என்றுதான் தேடுகிறேன்..கண்டால் சொல்லுங்களேன்!!