Wednesday, September 5, 2007

யாதும் வீணே

தான்
வண்ணத்துப் பூச்சியென
மயங்கித்திரிந்தது
சிறகொடிந்த விட்டில் பூச்சி!
பொழுது போகா விஷ(ம)ப்பூச்சிகள்
விசிறி விட்டன
அவ்வெண்ணமதை !
காயங்களை விழுப்புண்ணெனக்
கர்வத்துடன் நோக்கி .....
கண்ணாடிகதவுக்கப்பால்
கசியும் நிலவொளியை ,
சேரத்துடித்தது
சிறகொடிந்த விட்டில் பூச்சி!!
விட்டில் பிறந்தது
வீழ்வத்ற்கென
விதியை எழுதிய
விண்ணவன் சிரித்தான்
மனதோடு!
சற்றும் மனம் தளரா
முயற்சியொடு,
முட்டாள் விட்டில் பூச்சி!!

3 comments:

மே. இசக்கிமுத்து said...

"கூட நட்புடன் பேராசையும் கர்வமும் சேர்ந்துவிட்டால் சிந்தனை சிதறிய விட்டில் பூச்சியின் கதைதான்". அருமையான கவிதை!!

வவ்வால் said...

ஆஹா என்ன ஒரே கவிதை மழையா பொழியரிங்க! ரொம்ப நாளா உங்களோட அந்த பிளாக்ல சத்தமே காணோமேனு இங்கே வந்த இங்கே கலக்கிட்டு இருக்கிங்க!

மங்களூர் சிவா said...

வண்ணத்து பூச்சிக்கும் விட்டில் பூச்சிக்கும் என்னங்க சம்பந்தம்?

விட்டில் பூச்சியின் வாழ்நாள் ஒரு நாள்.

@இசக்கிமுத்து
//
கூட நட்புடன் பேராசையும் கர்வமும் சேர்ந்துவிட்டால்
//
எப்டிங்க இப்டியெல்லாம் டெவலப் பண்ணறிங்க. பாத்து ராத்திரி தூனகறப்ப பட்டாம்பூச்சி வந்து கடிக்க போவுது.