ஆம்
இது மதிலில்லைதான்
இடமா?வலமா?
என மயங்கி நிற்க .
ஆயின்
மொட்டை மாடி ஆசையில்
திடுதிடுவென படியேறும் சத்தம்
திடுக்கென
எழுப்புகையில்
மேலா கீழா வெனக்கூட
தேர்விருப்பதில்லை .
என்ன முயன்றும்
வால் மிதிபடுவதும்
(ஆ)மாறுவதில்லை .
அரைக்கண் கனவுறக்கத்திலும்"ஹோ"வென்ற கூச்சல்
குலை நடுக்கையில்...
இடமா வலமா
என முடிவெடுக்கவாயினும்
ஓர் உடைந்த
குட்டிச்சுவர் இருந்து தொலைத்திருக்கலாம்
இந்த மாடிப்படி பூனைக்கு !